அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது அனந்த லட்சுமி வழக்கம். குளித்து முடித்து, பூஜைக்கு விளக்கு விளக்கி, புது திரி போட்டு சந்தனம் குங்குமம் வைத்து, எண்ணையூற்றி, தீப மேற்றிச் சாமி கும்பிட்டுவிட்டு அதிலும் குறிப்பாக ‘கிருஷ்ணா, குருஷ்ணா; என்று உளமார உருகி வேண்டிக் கொண்டு ‘நாலு’ டைமண்ட்டு கற்கண்டை நிவேதனமாகப்படைத்துவிட்டுத்தான் காப்பியே குடிப்பாள்., அதற்கு இடையில் பூமியே பிளந்தாலும் ஒரு வார்த்தை ஒருத்தர்ட்ட பேச மாட்டாள்.
அன்றைக்கும் அப்படித்தான் விளக்குக்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருக்கும் போது…, பெட்ரூமிலிருந்து குழந்தையின் அழுகுரல் உசுப்ப, போட்டதைப் போட்டபடி போட்டுவிட்டு பெட்ரூமுக்கு ஓடினாள்.
என்றைக்குமில்லாமல் அன்றைக்கு அனந்த லட்சுமிமோடு எழுந்துவிட்ட ஏகாம்பரத்துக்கு இது வியப்புத்தர,
‘என்ன லட்சுமி… பூஜைக்கு நடுவே பூமியே பிளந்தாலும் கலங்காத நீ.. குழந்தை அழுததும் இப்படி ஓடறயே…?! உன் பகவான் கோயிச்சுக்கப்போறார்!’ என்றான் கிண்டலாக.
‘பாப்பாவுக்கு அப்புறம்தான் பகவான்! குழந்தையும், தெய்வமும் ஒன்றுதானே?!’ என்றாள் லட்சுமி.
‘ஒண்ணுதானே?! ஆனா.,. உனக்குத்தான் சர்வசதா நேரமும் கண்ணன் நினைப்புத்தானே?! குழந்தையை அப்புறம் பூஜையை முடிச்சுட்டுப் போய்ப் பாரேன்! என்ன ஆயிடப் போறது?! எதாவது ஒண்ணுனா உன் குழந்தையை உன் பகவான் பார்த்துக்க மாட்டானா?! உசுப்பேத்தினான்.
சுத்தீலயும் பாலிருக்கும் பாற்கடலில் படுத்திருக்கும் பகவானை பார்த்துக்க, மகாலட்சுமி தாயார் அவர் பாதமாட்லயே இருக்காள்.. ‘டயபர்ல’ சுத்தி படுக்க வச்சிருக்கிற என் பிள்ளையை நான் பார்த்துக்கறா மாதிரி பகவான் கூட பார்க்க முடியாது!’ என்றாள் லட்சுமி.
‘நீ… என்ன சொல்றே..?’ ஆச்சரியமாகக் கேட்டான் ஏகாம்பரம்.
‘ஒவ்வொரு இடத்திலயும் தான் இருக்க முடியாதுன்னுதான் கடவுள் உலகில் பெண்களைப் படைச்சார். குழந்தைகளை நேசிக்க தன்னைவிட தகுதியானவங்கன்னுதான் அன்னையைப் படைச்சார்…! ‘கண்ணனை நினைக்காத நாளில்லையே….?! உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணம்முழுதும் கண்ணந்தானே..?! குழந்தையே எங்களுக்கு கிருஷ்ண வடிவம்தானே?!’ இதெல்லாம் சாதாரண ஆண்களுக்கு எங்கே புரியப்போறது’ என்றாள்.
ஏகாம்பரத்துக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.. ‘கடவுள் வடிவா கட்டினவள் இருக்காங்கறதுனாலயும்., குழந்தைக்கு என்னன்னு போய்ப் பாருங்கன்னு தன்னை அனுப்பலேங்கறதுனாலயும்…?!