ஹை.. ரொம்ப நாளா இப்படியே பாத்துகிட்டிருந்தா எப்படி. I love you னு நான் தான் சொல்லணுமா. லேடீஸ் நீங்க சொல்ல மாட்டீங்களோ..
சொல்லுவோம். எனக்கும் பிடிச்சிருக்கு, கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றதுக்கு முன்னால.. ஒரு சில கேள்விகள். கேக்கலாமா டியர்..
டியர் ஆ.. வாவ்.. ஜில்லுனு இருக்கு. கேளு டார்லிங். எது வேணாலும் கேளு. ட்டான், ட்டான்னு பதில் சொல்றேன் என்று கூறிக் கொண்டே நெருங்கி வந்து தோளில் கைபோட வந்தவனை முறைத்தாள்..
கொஞ்சம் எடம் குடுத்தா, அவ்வளோ தான்.. என்றவளிடம்..
அப்போ இன்னும் எடம் குடுக்கலையா என்று முகம் வாடினான்..
ஹேய்..கூல்.. கேக்கட்டுமா?
Yes.. Dear. Am waiting..என்றான்..
அப்பா என்ன பண்றாரு.
பிரைவேட் கம்பெனியில ஒர்க் பண்ணிட்டு ரிடையர் ஆயிட்டு இப்ப வீட்ல சும்மாதான் இருக்காரு. பெத்தவங்களுக்கு வயசாயிட்டா பசங்க தான பாத்துக்கணும்..
ஓ..சும்மாதான் இருக்காரா..
ஓக்கே.ஓக்கே.. அம்மா??
அவங்களுக்கு ஆஸ்துமா. பாவம் இருமி இருமி ரொம்ப மெலிஞ்சி போய், பாக்கிறதுக்கே பாவமா இருக்கு.. அப்பாவுக்குத் தான் ரொம்ப கஷ்டம்.
ஆமாம் எதுக்கு இதெல்லாம் கேக்கற ப்ரீத்தி..நம்ம ல்வ்வுக்கும் அதுக்கும் என்ன??
இரு..இரு..நம்ம ல்வ்வுக்குத்தான் மார்க் போட்டுட்டு இருக்கேன். அக்கா..தங்கச்சி.. யாராவது..
இப்பத்தான் ப்ளஸ் டூ முடிச்சிருக்கா தங்கச்சி. காலேஜ் சேக்கணும். நிறைய செலவு இருக்கு. சரி நீ எதுக்கு சென்சஸ் எடுக்கற இப்போ..
சொல்றேன்..சொந்த வீடா? வாடகையா?
இப்போதைக்கு வாடகை தான். கல்யாணம் ஆனா வாங்கிடலாம். நீயும் சம்பாதிக்கற. அப்பறம் என்ன..
கல்யாணமா? இடைவெளி விட்டு.. ஹும்.. ஆனா.. வாங்கிடலாம்..
விநோதமாக பார்த்த ராகுலிடம்..
சாரி..நம்ம ரெண்டு பேரும் நண்பர்களாகக் கூட பழக முடியாது ராகுல். இவ்வளவு வெள்ளந்தியா நான் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் உண்மையான பதில் சொன்னதுக்கு ரொம்ப தேங்க்ஸ்.
இது எதுவுமே தெரியாம, தெரிஞ்சிக்காம நெறைய பொண்ணுங்க கண் மூடித்தனமா லவ் பண்ணிட்டு..கல்யாணமும் பண்ணிகிட்டு கஷ்டப் படறாங்க.
என்னோட பாலிசிய சொல்லட்டா..
நீ நல்ல பர்சனாலிட்டி, அழகு.. ஆல் ஓக்கே. பட்.. கேட்டுக்கோ👇
First and foremost parents dependant ஆ இருக்கக்கூடாது. அதுவும் நோயோடு கூட இருக்கிறவங்கள baggage னு நினைக்கிறவ நான்.
அக்கான்னு ஒருத்தி இருந்தா அவ கல்யாணமாகி செட்டில் ஆகி இருக்கணும்
விதவையாகி அம்மா வீட்டோட வந்து இருக்கிறவளா இருக்கக் கூடாது.
கல்யாணமாகாத தங்கை இருக்கவே கூடாது.
கண்டிப்பா சொந்த வீடு இருக்கணும். அதன் பேரில் எந்த கடனும் இருக்கக்கூடாது. நீ இப்பவே என் சம்பளத்த எதிர் பார்க்கிற.
இன்ஸ்டால்மென்ட்ல எல்லாத்தையும் வாங்கிட்டு காலத்துக்கும் EMI கட்றது நமக்கு செட் ஆகாது.
எனக்கு எப்ப தோணுதோ அப்பத்தான் குழந்தை எல்லாம்.
எனக்கு எல்லா ஊரும் சுத்தி பாக்கணும். பாக்காத ஊரே இருக்கக் கூடாது.
என்னோட பாய் ப்ரென்ட்ஸ் எங்கூட பழகறத கன்ட்ரோல் பண்ணக்கூடாது.
நான் வீக் end பார்ட்டிக்கு போவேன். எதுவும் சொல்லக்கூடாது. முடிஞ்சா கம்பெனி குடுக்கணும்.
காதல்ங்கிறது சாதி பாத்து வற்ரதில்ல. மதம் பாத்து வற்ரதில்ல. அந்தஸ்து பாத்து வற்ரதில்லேங்கிற பழைய பஞ்சாங்க வார்த்தை எல்லாம் சுத்த ஹம்பக்.
கன்டிஷன் எல்லாம் பசங்க மட்டும்தான் போடணுமா?
புரிஞ்சுதா ராகுல். So leave me.
கிரேட். ப்ரீத்தி. உன்ன வாழ்த்தணும் போல இருக்கு.
இவ்வளவையும் கேட்டுட்டு என்ன வாழ்த்தப் போறியா. வாழ்த்து… வாழ்த்து..
நவீன ஔவையாரே வாழ்க என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
காதலுக்கு கண்ணில்லை என்று யார் சொன்னது..