என்னதான் ரகசியமோ இதயத்திலே…!?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 5, 2024
பார்வையிட்டோர்: 3,309 
 
 

அன்று ஓய்வுநாள் எல்லாரும் குடும்பமாச் சேர்ந்து ஹோட்டலுக்குப் போய் (ஸ்டார்ஹோட்டலுக்குத்தான்) மதியம் சாப்பிடலாம்னு முடிவு செய்தார்கள் முனியப்பன் ஃபேமிலியில். முனியப்பன் முதலில் தயங்கினாலும் மாடு கன்றுகளைப் பார்த்துக்க வேலைக்காரனிடம் சொல்லிவிட்டு போகலாம்னதால், ஒருவழியாய் உளம் தேறி, உடன் போனான்.

மலையடிவாரத்து ஹோட்டல் அது!..

‘மலைராணி முந்தானைசரியச்சரிய மண்மாதா வண்ண மடி விரிய விரிய இளங்காற்று பூ முகத்தைத் தழுவத் தழுவ எண்ணியதோ கவிதை ஒன்று எழுத, எழுத..!

வந்ததோ கவிதையல்ல கதை…!

எல்லாரும் ஒரு நொடி சாப்பிட வந்ததை மறந்து சுற்றுச் சூழலை ரசிக்க ஆரம்பித்தார்கள். ஒருவழியாய் கண்ணாடிக் கதவு திறந்து உள்ளே நுழைய, தலைகவிழ்ந்து வெயிட்டர் வணக்கம் வைத்தார். வைப்பார் தானே?! பில் வந்தால் வணக்கத்துக்கு எவ்வளவுன்னு தெரிஞ்சிடப் போகுது?!

ஹி..ஹி… அசட்டுப் புன்னகையோடு உள்ளே போனதும்., டேபிள் ஏழு எனச் சொல்ல, தேடி கூட்டமாய் அமர்ந்தார்கள். ஏற்கெனவே எங்களைப் போலவே நிறையப்பேர் நிரம்பியிருந்தார்கள். ‘ நாலுபக்க மெனு கார்டு ஆளுக்கு ஒண்ணு கொடுக்க, அதிலிருப்பதை படிக்கவே பத்து நிமிஷமானது. கார்டை வாசித்துவிட்டு, வந்திருந்தோரில் படித்தவரிடம் கொடுக்க அவர்

‘மாமா மொதல்ல… ‘சூப்!’ சாப்பிடலாம்.. பசி வரும்..! வந்ததும் அப்புறம் நல்லாச் சாப்பிடலாம்!’ என்றார்.

முனுசாமி பதிலேதும் பேசவில்லை! எல்லாரும் இங்கிலீசில் சாறெடுத்துக் கொண்டிருக்க இவர் சப்த நாடியும் அடங்கி அமர்ந்திருந்தார்.! அடிவயிறில் அப்படியொரு பசி!

வந்தது.., கண்ணாடிக் கிண்ணத்தில் ‘சூப்!’ மிதக்கும் சூப்பில் நாலைஞ்து வர்க்கித் துண்டுகள்.. நாய்க்கா நமக்கா?! கேள்வி மனசுக்குள்!

அவருக்கோ தோட்டத்து நாய் ஜிம்மி.. விம்மி வெளிக்குதித்தது மனசிலிருந்து.

இதைக் குடித்துவிட்டு, சாப்பாடு வேறா?!

சூப்புக்குப்போட்டுக் குடிக்க உப்பு பெப்பர் பொடி ஜோடிகுப்பிகளில்.

கடிச்சுக்க கூழ்வத்தல் கூடை நிறைய…ரோஸ் நிறத்தில் அதுக்குக் கலர் வேற கேடா?!!

ஸூப் ஏதோ சூப்பரா இருக்கும்னு நெனைச்சா… ???

சே! அம்மா அந்தக் காலத்துல சோறு வடிக்கும் முன் இறக்கி வச்ச கஞ்சி உப்புப் போட்டு தேங்காய் துருவல் பூத் தூவித் தருவாள்! … அப்படி இருக்கும் அது! அதுவே தேவலாம் போலிருந்தது இது! ஆனால், அவள் அதைத் தம்ளரில் தருவாள். கப் பெல்லாம் கிடையாது! கோப்பையும், கும்பாவும் நாய் பூனைக்குத்தான்.

கஞ்சி நியாபகம் வரவும் கழுநித் தண்ணியில் கழுத்தை மறைத்து உறிஞ்சும் தோட்டத்து காராம்பசு நினைவுக்கு வந்தது. அதைக் குடிச்சுட்டு அது பாலைக் கொடுத்தது. நாங்க, குடிச்சுட்டு பில்லைக் கொடுத்தோம்.

இதெல்லாம் குடிச்சு முடிச்சதும், தட்டில் வைத்த சாப்பாட்டில் மிச்சம் வைத்ததே டிப்ஸ் வைத்த காசுக்கு மேலிருக்கும். பணம் பத்தும் செய்யும் செய்யும்! ஏழைக்கு அரைவயிறு நிறைவதில்லை. இங்கு மிச்சம் வைப்பதைக் கணக்குச் சொல்ல முடியாது~!

என்னதான் ரகசியமோ இதயத்திலே… நினைத்தால் எனக்கே சிரிப்புவரும் சமயத்துல!

கால மாற்றம் கஞ்சியை சூப்பாக்கியிருக்கு! கஞ்சிக்கு அப்புற,ம் அன்னைக்கெல்லாம் வேலை செய்ய முடியும்! இன்னைக்கு கஞ்சி இடத்தில் சூப் திரும்பி வந்த எல்லாரும் சூப்பரா ஒரு தூக்கம்!

காசில்லாததால் கஞ்சி குடித்தோம்..! இன்றைக்கு காசு கொடுத்து கஞ்சி குடிக்கறோம்!

சிரிப்புத்தான் வருது! எனக்கு போல் வந்திருந்தோரின் எத்தனைபேரின் எண்ணத்தில் என் கருத்து புதைஞ்சிருந்ததோ தெரியலை!

காசு உழைப்பை, நேரத்தை இரக்கதை உறிஞ்சித் தின்றதுதான் மிச்சம்!!

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *