அய்யோ இந்த புகழ்ங்கற கிர்ர்ரு இருக்கே, அது மப்பைவிட பல மடங்கு மயக்கக்கூடியது…!
அந்தி சாய்கிற வேளை.!. அரைத் தூக்கத்திலிருந்தான்வராண்டாவில் ஈஸிச் சேரில் சாய்ந்து -படுத்திருந்தான் அச்சுதன். வாசலில் கேட்டருகே பெரியவர் ஒருவர் தலை தெரிந்தது.
‘யாரது?’ என்றார் வராண்டாவில் அமர்ந்தபடியே
‘எழுதுறவர்….???! ‘ என்று இழுத்தார் வந்தவ்ர்.
பத்திரிக்கைகளில் எழுதி சமீபமாய்ப் பிரபலமாகிவரும் அச்சுதன்னனுக்கு இருப்புக் கொள்ளவில்லை! எந்தப் பத்திரிக்கையிலிருந்தோ கதை கவிதை கேட்லடோ பேட்டிகீட்டி எடுக்கவோ வந்திருக்கார் போலிருக்கு!’ நினைத்துக் கொண்டார்.
அவர் அப்படி நினைத்தது தப்பில்லை. வந்தவருக்கும் வழுக்கைத் தலை வயதான தோற்றம்! ஜிப்பா சகிதம்.! முன் நெற்றி ஏறியிருக்க பார்வைக்கு பத்திரிக்கையிலிருந்து வந்தவர் போலவே தெரிந்தது!
‘நான்…. … நான்,தான்… வாங்கோ!’ உபசரித்துப் பக்கத்தில் உக்கார வைத்துவிட்டு
‘பங்கஜம் என்று மனைவியை அழைத்து,
‘நான் சொல்லலை?! ஒருநாளில்லாட்டி ஒருநாள் நான் பிரபல எழுத்தாளராவேன்னு! நீ ந்ம்பலையே! பாரு, சார் இப்ப வந்திருக்கார். காப்பி பலகாரம் கொண்டா! உபசரிப்பின் உச்சத்துக்குப் போக, வந்தவர்
‘நீ… நீங்க என்ன சொல்றீங்க?! ‘ நீங்க பத்திரிக்கையில எழுதறவரா…?! நான் பத்திரம் எழுதறவைப் பார்க்க வந்தேன்’. பையனுக்கு பாக சாசனம் எழுதி வைக்கணும் விவரம் கேட்க வந்திருக்கேன். நீ… நீங்க என்னைத் தப்பா நெனைச்சுட்டீங்க போல..!’ இழுத்தார்.
‘பங்கஜம் காபி பலகாரமெல்லாம் வேண்டாம்!… சார் எதோ தப்பான இடத்துக்கு வந்திருக்கார்!’ என்று மனைவியிடம் அலற
‘அவர் தப்பான எடத்துக்கு வரலை… ! நீங்கதான் உங்களைத் தப்பான எடத்துல உச்சத்துல வச்சு ஏமாந்திட்டிருக்கீங்க…! உங்களையாவது பத்திரிக்கைக் காரங்க பார்க்க வருவதாவத!! கிண்டலாய்க் கேட்க , வந்தவரைப் பார்வையால் எரித்தார் அச்சுதன். ‘அடே! எட்டப்பா என்ன இரும்பு இதயமடா உனக்கு?! பத்திரம் எழுதறவர்னு கேட்க வேண்டியதுதானே? எழுதறவர்ன்னா…என்ன அர்த்தம்?! நான் எழுத்தாளர்னு என்னை நெனைச்சுட்டேன்!’ என்று சொல்ல…
அவரோ… ‘சீ!சீ! நீங்க அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டீங்கஸார்! சாரி!, என்று சொன்ன படி, வாசல் தாண்டி வேகமாய் ஓடி மறைந்தார்.