உலகில் மனிஷன்னு பொறந்துட்டாலே ஏதோ ஒண்ணுக்கு அவன் அடிமையாயிடறது இயற்கை. அந்த வகையில் மண்ணாசை சிலரை பெண்ணாசை சிலரை, பொன்னாசை சிலரை ஆட்டிப்படைக்குது.
அலெக்ஸாந்தர் இப்ராஹிம் லோடி, உள்ளிட்ட இன்ன பிற மன்னர்களும் ஆசைக்கு அடிமையாகித்தான் போனார்கள். அதெல்லாம் வரலாற்றுக் காலம் என்றால், நவீன காலத்து மனுஷ ராஜாக்களும் அடிமையாகிற விஷயங்கள் ஆயிரமாயிரம் இருக்கு!!. ஆனால், அவை, மற்றவர்களுக்கு அல்பமாய்த் தோன்றும்.
சிலருக்கு பீடி,சிகரெட் இல்லாம இருக்க முடியாது! சிலருக்கு பொடி பெரிய விஷயம்! சிலருக்கு வெற்றிலை பாக்கு! சிலருக்குத் தண்ணி,. சிலருக்கு சினி,மா! ஒரு குறிப்பிட்ட நடிகரின் படத்தை எந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தேன் என்று ‘டைரி’ குறிப்பிட்டு வைப்பது கூட ஒருவகை பித்துதான். இந்த பித்துக்கள் அவர்களோடு இருந்துவிட்டால் சரி.
இப்படியெல்லாம் இல்லாமல் குமார் குஷிப்படுவது அது வேறு விதமான விஷயம்!!. சினிமா பாடல்கள் என்றால் அவனுக்கு சிலேபி தின்றார் போல! ஆனால், செல்போனை எடுத்து ‘இயர்பட்ஸோடு’ இணைத்து பாட்டுக் கேட்கையில் எந்த பர்தாவின் செயல்பாடும் பாரியாளுக்கு பாதகமாய்த் தெரியாதோ?!! தெரிந்தது!!. கூடவே, அவன் பாடவும் செய்தது அவள் கோபத்தைக் கூட்டாவே செய்தது!!
ரொம்ப நாளுக்கு முந்தைய பாட்டு என்றாலும், முதுமையே வந்தாலும் பாட்டுகள் இன்னமும் இளமையாத்தானே இதயத்தில் வேரோடுகின்றன?!
‘உன்னிடம் மயங்குகிறேன்….! உள்ளத்தால் நெருங்க்குகிறேன்! எந்தன் உயிர்க்காதலியே…’ என்று அவன் பாட , குமார்மீது கோபமாய்ப் பாய்ந்தாள் குமுதா!
‘யாரவள்?’
‘யார்?’ என்றான் குமார்.
‘யாரிடமோ மயங்குவதாய்ப் பாடினீர்களே?! அவள்?!’
‘அதுவொரு சினிமாப் பாட்டு!’
‘அதைக் காதில் மாட்டீட்டுப் பாடினா சந்தேகம் வராதா?’
‘வருமோ?!
‘வரும்!’
‘அதான், உனக்குத் தொந்தரவு தரக்கூடாதுன்னுதான் நீ தூங்கினதும் டீவி கூட ‘லைட்’ போடாம பார்க்கிறேன். உன் நன்மைக்குத் தானே?!
‘என்ன நன்மைக்கு?! அன்னைக்கு ‘பெட்ஷீட்’ போர்த்தீட்டு மூடிட்டு டீவி பார்த்தீங்களே? பாட்டா கேட்டீங்க!’
‘படம் பார்த்தேன்!’
‘அதான் என்ன படம்?!
‘ஃஎப் டீவி?! அதில் என்ன தப்பு?!
‘என்ன தப்பா? கண்ட கர்மத்தையும் பார்த்துக் கெட்டுப் போறது அசிங்கமா இல்லை?! அது தெரியலை?! இத்தனை வயசாயும் ஏன் புரியலை உங்ககளுக்கு?!’
‘புரியாம என்ன? நல்லா புரிஞ்சிருக்கு!’
‘அப்பறம் எதுக்கு இந்தக் கண்றாவி?’
‘படிதாண்டா பர்த்தாவா இன்னைக்குன் வரை பகவான் புண்ணியத்துல இருக்கேன். எதுக்கு சந்தேகப்படறது?! எதுக்கு முட்டுக் கட்டை போடறது!?ண்னு இருக்கு… வேலி நிலையா நிக்காம சாய்ஞ்சா, வெள்ளாடு காம்பவுண்டைக் கடந்துடும்!. காப்பாத்துறது உன் கைல தான் இருக்கு!’
பாரியாளின் பக்தனா இருக்க பர்த்தாக்களை விடமாட்டீங்களா?
பதிலே இல்லை…! பதில் சொல்ல என்ன இருக்கு?!