உங்க வயசுக்கு நீங்க இப்படிச் செய்யலாமா?

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 18, 2024
பார்வையிட்டோர்: 3,823 
 
 

பார்க்க லட்சணமாய் இருப்பாள் குப்பை எடுக்கவரும் லட்சுமி.  அன்று அதிகாலை அவள் வாசலில் நின்று,

 ‘குப்ப வண்டி.. !குப்ப வண்டி! ‘ என்று தான் வந்திருப்பதை உணர்த்த சப்தமிட்டாள். 

கடந்த நாலைஞ்சு நாளாய் குப்பை எடுக்க வராததால் எரிச்சலில் இருந்தார் ஏகாம்பரம். கோபத்தோடு வாசலுக்குப் போனார்.

ஏற்கெனவே பிரஷர் உண்டு அவருக்கு.

கையிலிருந்த குப்பையை தான் ஓட்டி வந்திருந்த பேட்டரி வண்டியில் பின்பக்கம் போட்டுவிட்டு அவளைத் திட்டப் போனார்.

‘தீபாவளி வசூலு… நாலு பேர் இருக்கோம் பார்த்துக் கொடுங்க !’ என்று அவள் சொன்னதும் ஏற்கெனவே சரியாய் குப்பை எடுக்க வரவில்லை என்ற கோபத்திலிருந்த அவர் தன் வயதையும் நிலையையும் மறந்து

‘ஆமாம் அது ஒண்ணுதான் உங்களுக்குக்கேடு! வெட்கமில்லாம எப்படி காசு கேட்கத் தோணுதோ உங்களுக்கெல்லாம்?’என்றார்.

அவள் பொறுமையாய் சொன்னாள் ‘உங்க வயசுக்கு நீங்க இப்படிச் செய்யலாமா? கோபமாய்ப் பேசலாமா? உங்களமாதிரி இருக்கற யாராவது நாலுபேர் ஏதாவது தந்தாத்தானே எங்கள மாதிரி ஆளுங்க ஏதோ தீபாவளியை சிம்ப்ளாவாவது கொண்டாட முடியும்?  

ஓய்வு பெற்று வீட்டில் சும்மா இருக்கும் உங்களுக்கு வராமாதிரி எங்களுக்கென்ன  பென்ஷனா ? டிஏ அரியரா ? அதுமாதிரி எதுவும் மாசமான டாண்ணு வர்றதில்லையே?! அத மறந்து உங்க வயசுக்கு இப்படிக் கத்தலாமா?’ என்றபோது அள்ளிய குப்பையை மனசுக்குள் கொட்டியதுபோல கனத்தது. பேசாமல் உள்ளே போய் ஒரு ஐநூறு ரூபாய் தாளை எடுத்துவந்து நீட்டினார்.

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *