(1992ல் வெளியான குறுங்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
கிழட்டு அணில் மற்ற அணிலைப் பார்த்து
“அடுத்தவர்களின் உழைப்பில் வாழ்வதே சிலருக்கு வாழ்க்கையாகிவிட்டது பார்..” என்றது.
“ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டது இரண்டாம் அணில்.
கிழட்டு அணில் சொன்னது:-
ஓணானைப் பார்த்தேன். யாரோ ஒரு மனிதன் புதுவீடு கட்டிக் கொண்டிருக்கிறானாம். பக்கத்தில் குப்பைமேட்டில் ஒரு பல்லி இருக்குதாம்… அது ஓணானிடம் ஏதோ சொன்னதாம்.
“என்னவாம்?” என்றது இரண்டாம் அணில்.
கிழட்டு அணில் சொன்னது:–
“எனக்குத்தான் வீடு கட்டுகிறான்” என்றதாம் பல்லி.
– காசி ஆனந்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்கழி 1992, காந்தளகம், சென்னை.
– கதை கதையாம்… – தேர்ந்த தமிழ்க் குறுங்கதைகள் – தொகுப்பு: சு.குணேஸ்வரன், முதற்பதிப்பு: 24.01.2012, இளையகுட்டி அருமைக்கிளி நினைவு வெளியீடு, தொண்டைமானாறு.