அந்த ரெண்டு பேரையும் அதிக நேரம் கண்காணித்துக் கொண்டிருந்தான் அபிசேக். இரண்டு பேருமே பதின்ம பருவ வயதினர்தான். அவன் அந்த வீட்டுக்கு கூலி வேலைக்கு வந்திருக்கிறான். அவள் அந்த வீட்டில் படித்துக் கொண்டிருக்கிறாள். பத்தாவது படிக்கலாம் வயதும் தோற்றமும் அப்படித்தான் தோன்றியது!
திடீரென்று அக்கம் பக்கம் பார்த்த அந்தப் பையன், ‘உன் போன் நம்-பரைக் கொடு!’ என்றான் அந்தப் பெண்ணிடம்.
அந்தப் பெண் நம்பர் சொல்ல, அவன், ‘தமிழில் சொல்லாதே! ஹிந்தி தெரியாதா இங்க்கிலீசில் சொல்…!’ என்றதும், அவள் இங்கிலீசில் சொல்ல ஆரம்பித்தாள். அபிசேக் ‘அலர்ட்’ ஆனான். இது வேறு மாதிரியாகப் போகிறது. காதலிப்பது ஒன்றும் தப்பில்லைதான். இன்று இது சர்வசாதாரணமாகிவிட்டது. ஆனால்.. அவன் பார்க்க வடக்கத்தியன் போலிருக்கிறான். தமிழ்வேறு தெரியவில்லை…! படிக்கிற பள்ளிப் பருவப் பெண்ணை நோட்டம் போடுகிறான். இவள் இவனை நம்பி ஏமாந்து போனால், அவன் அவளை கல்யாணம் செய்து கொண்டு அவளை வைத்துக் காலம் கழிப்பான் என்று தோன்றவில்லை!
‘அவள் அப்பாவைக் கூப்பிட்டு விஷயத்தை மெல்லச் சொல்லி, வண்டி தடுமாறுகிறது., அது தடம்புறள்வதற்குள் தயவுசெய்து திருத்திவிடு!’ புத்தி சொன்னான்.
அப்பன் பதில்தான் அதிர்ச்சி தந்தது. ‘எனக்குப் பத்துபவுன் மிச்சம்னு நெனைச்சேன்!. நீ நல்ல காரியத்தைக் கெடுத்தே போ! இதுவரை நீ அவர்களைப் பார்த்த பார்வை இதற்காகத்தானா?’ என் பொழப்புல மண்ணைப் போட்டுடாதே! இன்னைக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் பண்ணி சீர் செனத்தி செஞ்சு முடிக்கறதுக்குள்ள தாவு கழண்டு போகும்!இதெல்லாம் எனக்கு மிச்சமாகுமேன்னு நானே சீக்கிரம் அவள் ஓடிப் போகட்டும்னு காத்துக்கிட்டிருக்கேன். நீ எடையிலெ குறுக்கொழவு ஓட்டறயே?!’ என்றான்.
அபிசேக்கிற்கு அவன் பேச்சு அதிர்ச்சிதான் தந்தது. இருந்தாலும், மெல்ல ஒரு விஷயம் என்றான்.
அவன் தமிழ்நாட்டுக்காரனா இருந்தா நானும் கண்டுக்காம விட்டிருப்பேன் ரெண்டுபேரும் ஓடிப்போய் நல்லா இருக்கட்டும்.. ஆனால் அவன் வடக்கத்தியன் ஒன் பொண்னை ரயிலில் கடத்திப்போய் முப்பையில பிராத்தலுக்கு விட்டுட்டு, வந்த வரை காசுலாபம்னு போயிட்டா…????’ என்று கேட்க..
‘ஓ! அப்படி ஒண்ணு இருக்கோ???.. அது அப்படி நடந்தா அப்பன் ஆத்தா பேச்சைக் கேட்காததற்குஅவளுக்குத் தண்டனையா இருக்கட்டும் உடு!’ என்றான். அப்பவும் அதிர்ச்சி அடையாமல்.
‘ஏண்டா இவனுக்குப் போய் புத்தி சொன்னோம்னு தோணிச்சி! அபிசேக் நினைத்துக் கொண்டான்.. நன்றாற்றலுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடைனு சொன்ன வள்ளுவரைப் படிச்சேனே??? இருந்தும் அவசரப்பட்டுட்டேனேனு நொந்து கொண்டான் மனசுக்குள்.