கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 4,140 
 
 

மதிய வேலையில்,

செல்போனில் வந்த குறுஞ்செய்தியை பார்த்து விட்டு, தன் கணவருக்கு போன் அடித்தாள் மீரா.

“என்னங்க , என் அக்கவுண்ட் ல இருந்து பணம் எடுத்தீங்களா?”

“ஆமாம். அதான் அட்மிஷன் போட சொன்னல்ல. அதுக்கு தான்.” என சலித்த படி பதிலளித்தான் சந்தோஷ்.

“இப்ப என்ன சலிப்பா பேசுறீங்க? உங்க அம்மாவை ஹாஸ்டலில் சேர்கிறதுக்கு கூட என் பணம் தான், தேவை படுது பார்த்தீங்களா! இத உங்க அம்மாட்ட சொல்லுங்க, இப்படி வசதியான ஹாஸ்டல்ல சேர்த்து பார்த்துக்க, எந்த மருமகளும் ஒத்துக்க மாட்டாங்க. அந்த ஹாஸ்டல்ல நல்லா பார்த்துபாங்களாம், என் பிரெண்ட் சொன்னா. இப்படி உங்க அம்மாவ நான் கவனிச்சு பார்த்துகிறேன். ஆனா உங்க அம்மா தான் என்னை புரிஞ்சிக்காம இருக்கிறாங்க” என மீரா சலித்தபடி கூற,

“மீரா, இப்ப வாட்ஸ் அப்ல ஒரு மெசேஜ் வரும். அத பாரு!” என சந்தோஷ் கூற,

ஆர்வமாக வாட்ஸ் அப் மெசேஜ்யை நோக்கினாள் மீரா.

“ஆமாம் வந்திருக்கு. அட்மிஷன் கன்பர்மேசன் லெட்டர்னு போட்டிருக்கு. உங்க அம்மாவ சேர்த்தாச்சு.

சூப்பர். இனி நாம நம்ம ஃபேமிலியோட, ஜாலியா இருக்கலாம். உங்க அம்மாக்கு மட்டும் என்ன குறச்சல்,

நல்ல வசதியோட நல்லா பார்த்துக்கிற ஹாஸ்டல், கலக்குங்க சந்தோஷ்!” என அவள் பேசி கொண்டே இருக்கும் போது,

அந்த வாட்ஸ் அப் குறுஞ்செய்தியில் இருக்கும் மற்ற விபரம் அவளின் கண்ணில் படுகிறது.

அதை கண்டு அதிர்ச்சியில் மீரா.

“என்னங்க, அந்த லெட்டர்ல எங்க அம்மா பெயரு, போட்டு இருக்கே!” என சந்தேகமாக மீரா கேட்க ,

அதற்கு சந்தோஷமாக “ஆமா, சந்தேகமே வேணாம். எங்க அம்மாக்கு பிளாக் 2A , உங்க அம்மாக்கு பிளாக் 2B. நல்ல ஹாஸ்டல்னு நீ தான சொன்ன! அதான் உங்க அம்மாவுக்கு, உன் பணத்தில ஒரு அட்மிஷன் போட்டேன். மாதம் 5ம் தேதி பில் தேதி. உங்க அம்மாவ கிளம்பி இருக்க சொல்லு. இதோ வரேன். நாம இரண்டு பேரு சேர்ந்து வந்து விட்டுட்டு போவோம். அவங்களும் ஜாலியா இருக்கட்டும். நாம நம்ம குடும்பதோட ஜாலியாக இருக்கலாம். “

என்று சந்தோஷமான குரலில் பேசிய படி, வீட்டை நோக்கி நகர்ந்தான் சந்தோஷ்.

மீராவுக்கு சற்று உரைக்க ஆரம்பித்த நேரம், மௌனமாய் இருந்தாள்.

முதியவர்கள் என கூறி கைவிடாதீர்கள். ஆதரிப்போம்.
அவர்களின் வாழ்க்கை , நமக்கு பாடமாக அமையும்.
முதுமை நமக்கும் வரும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *