ஒரு குடும்பத்தின் கதை – ஒரு பக்கக் கதை





(2023ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
லேசான தூறல், கனமழையாக மாறியதால் பூட்டியிருந்த கடை ஒன்றின் வாசலில் தாயும் மகளும் ஒதுங்கி நின்றனர்.

நந்தினி கேட்டாள் ‘லொட லொடன்னு பேசிகிட்டு வருவே ஏன் பேசாம வரே? ‘
ஷீலா சொன்னாள் ‘ நான் ஆடிப் போய்ட்டேன்ம்மா அப்பாவா இப்படி? கடை வீதியில என்னோட துப்பட்டாவை இழுத்து வம்பு பண்ணவங்க கிட்ட அதட்டி பேசினாரு அவங்க அடங்காம மறுபடியும் சீண்டினப்ப மொத்து மொத்திட்டாரு. திடீர்னு வந்தாரு பாரு… ஆமாம் அப்பா ஏன் நம்ம கூட வரலை?
நந்தினி பேசினாள் ‘ஷீலா கண்ணு அது உங்க அப்பா இல்ல உங்க சித்தப்பா உங்க அப்பாவோட ட்வின் பிரதர் உங்க அப்பா கோபால கிருஷ்ணன் இவரு சந்தான கிருஷ்ணன் உன் வயசுல ரெண்டு பேருக்கும் ஏதோ மனஸ்தாபம் பிரிஞ்சுட்டாங்க. மலேசியாவில் இருக்காருன்னு சொன்னாங்க வந்துட்டாரு போல’
தன்னுடைய குடும்பத்தின் கதையைக் கேட்டு இளைஞி ஷீலாவின் விழிகள் வியப்பில் விரிந்தன. மழை விடாமல் பொழிந்து கொண்டிருந்தது.
– ட்வின்ஸ் கதைகள் 10, முதற் பதிப்பு: 2020, எஸ்.மதுரகவி, சென்னை