வாலிபர்கள் ஜாக்கிரதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 18, 2021
பார்வையிட்டோர்: 29,562 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று ஒரு புதுப்படம் ரிலீசானது. ஆட்டு மந்தை போல் ஆண்கள் கூட்டம் அலைமோதியது. அமைதிச்சீட்டு விலை ஆறு மடங்கு அதிகமாய் விற்றது. அப்படியிருந்தும் மக்கள் வெள்ளத்தால் அரங்கம் நிறைந்து வழிந்தது.

ஆர்வத்தோடு ஓடிவந்த வாலிபன் காட்சன், அரங்கத்தின் வாசலில் தொங்கிக் கொண்டிருக்கும் “ஹஷஸ்புள்” (HOUSE FULL) என்ற போர்டைப் பார்த்ததும் ஏமாந்து சோர்ந்து போனான்.

அந்தக் கூட்டத்தில் ஒரு ஓரத்தில் ஒரு கண்ணியமான வாலிபப் பெண், படித்தப் பெண், பணக்கார வீட்டுப்பெண், பளிச் பளிச் என்று மின்னும் பட்டாடை கட்டி பந்தாவாக, கையில் முதல் வகுப்பு டிக்கட் இரண்டு வைத்துக்கொண்டு, வழிமேல் விழி வைத்து, யாருக்கோ காத்திருப்பதுபோல் வாசல் பக்கம் பார்த்துக் கொண்டும், போனில் பேசிக்கொண்டும் இருந்தாள்.

படம் ஆரம்பிக்க மணி அடித்த சத்தம் கேட்டதும், அருகில் நின்ற காட்சனைப் பார்த்து (EXCUSE ME, SIR) எக்ஸ்கியூஸ் மி சார், எங்கள் அண்ண ன் வரமுடியவில்லை என்று போன் பண்ணி விட்டான். அதோ படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனவே நான் படம் பார்க்க உள்ளே போகிறேன். என்னிடம் இரண்டு டிக்கட் இருக்கிறது. வேண்டுமென்றால், உங்களுக்கு OBJECTION (ஆட்சேபனை) இல்லையென்றால் நீங்கள் என்லுடன் வரலாம். பணம் ஏதும் வேண்டாம். எனக்கு தனியாகப் போகப் பயமாக இருக்கிறது. எனக்கு கம்பெனி கொடுங்கள் அது போதும் என்று அன்போடும், மதிப்போடும், சிரித்து, மெல்லிய குரலில் மதுரமாகப் பேச, காட்சன் அடா, கரும்பு தின்ன கூலியா என்று படம் பார்க்கும் படு குஷியில் பவ்வியமாக அவள் பின்னே சென்றான்.

அரங்கத்தில் கும் இருட்டு. திரையில் இடையிடையே வெளிச்சம் மின்னியது. அரங்க வேலையாள் தன் கையிலுள்ள டார்ச்லைட் (வளிச்சங்காட்டி முதல் வகுப்பில் ஒரு ஓரத்தில் காலி யாகக் கிடந்த இரண்டு சீட்டில் உட்காரவைத்துவிட்டுப் போய்விட்டான்.

காட்சன் வாலிபப்பெண்ணுக்கு நன்றி சொன்னான். உங்களுக்குப் பெரிய மனசுங்க. தங்க மனசு என்று அவளைப் புகழ்ந்தான். அவள் தன் தோள்பையைத் திறந்து சூயிங்கம் எடுத்து வாயில் போட்டு கொண்டு காட்சனுக்கும் கொடுத்தாள். இருவரும் சதா அசைபோட்டுக் கொண்டு, சிரித்துப்பேசி ஜாலியாக இருந்தார்கள். காட்சனுக்கு நேரம் போனதே தெரிய பில்லை .

அதற்குள் இன்டர்வல் வந்துவிட்டது. காட்சன் கூல்டிரிங்ஸ் வாங்கிக் கொடுத்தான். கண் இமைக்காமல் அவளையேப் பார்த்துக் கொண்டு, நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கீங்க தெரியுமா, சிவப்பு நிறம், சிரித்த முகம், செல்லக் கைகள், மல்லிகைப் பூ மணம், மலேசியாசென்ட் வாசம் என்று வர்ணித்தான்.

என்றோட்டம் இல்லாமல் புழுக்கமாக இருந்ததால், காட்சன் டி சர்ட் காலரை அடிக்கடி தூக்கி விடவே, ஏழு பவண் மைனர் செயின் மினுங்கியது. அதைப் பார்த்த வகப்பெண் நீங்களும் எவ்வளவு அழகாக இருக்கீங்க. வசியமா? பந்தாவாக இருக்கீங்க உங்கள் மைனர் செயின் அழகாக இருக்கிறதே! எந்த கடையில் வாங்கினீர்கள் என்று சும்மா – விசாரிக்கத்தான் செய்தாள். அதற்குள் எள் என்றதும் எண்ணெயாய் உருகினான் காட்சன். இதோ போட்டுப் பாருங்கள் என்று மைனர் செயினைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டான். “அடா, சூப்பரா இருக்கீங்க. அசத்திட்டிங்க போங்க” என்று மீண்டும் புகழ்ந்தான் காட்சன். படம் பாதி, பேச்சுப் பாதிபடுஜோராக இருந்தது.

படம் முடியப் போகும்போது, எக்ஸ்கியூஸ் மி, மேடம். அந்த மைனர் செயினைக் கழற்றி தர்ரீங்களா, அதோ படம் முடியப் போகுது என்று காட்சன் மெல்லிய குரலில் சாதுவாகக் கேட்டான்.

அதற்கு அந்த வாலிபப் பெண், உங்கள் ஞாபகத்துக்காக, உங்கள் அன்பளிப்பாக இதை வைத்துக் கொள்கிறேனே என்று மிகவும் செல்லமாகக் கேட்டாள். அதற்கு காட்சன், ஐயையோ, அந்த மைனர் செயின் இல்லாவிட்டால் எங்கம்மா என்னை வீட்டுக்குள்ளே விட மாட்டார்கள் என்று சொல்லி மைனர் செயினைக் கழற்றப் போனான்.

இன்னிசை கேட்டுக்கொண்டிருந்த காதில், இடி சத்தம் விழுந்ததுபோல், உடனே அவள் சட்டென்று கோபப்பட்டுகண்ணை உருட்டி, “செயினைத் தொட்டால் கையை ஒடித்துவிடுவேன்; செயினைத் திருப்பிக் கேட்டால்; கூச்சல்போட்டு விடுவேன்; கோபப்பட்டால், என் கையைப் பிடித்து இழுத்தார் என்று சொல்லி விடுவேன். மரியாதையாக வலதுகை பிரேஸ்லெட்டும் கழற்றித் தந்துவிடு. இல்லாவிட்டால், கூச்சல்போட்டு கூட்டத்தைக் கூட்டிவிடுவேன். பக்கத்து சீட்டில் இருப்பவர்கள் எல்லாரும் என்னுடைய கூட்டத்தார். அடியாட்கள். நான் ஆள்விரல் காட்டினால் அடி பின்னிவிடுவார்கள்.”

“நான் படித்தும் எனக்குப் பத்துப்பவுண் நகை கூட வாங்க முடியவில்லையே என்றுதான் இந்த கூட்டத்தில் சேர்ந்தேன். பெண்களுக்கே நகை வாங்க முடியாத அளவுக்கு விலை கிடுகிடு என எகிரிப்போச்சு. இப்படி ஆண்கள் எல்லாரும் ஆளுக்கொரு பிரேஸ்லெட் 10 பவுனுக்குப் போட்டால், நாங்கள் பெண்கள் எல்லாம் எப்படி நகை வாங்க முடியும்? ஆடம்பர ஆண்களால் தான் ஆபரணத்தங்கம் விலை ஆனை விலை குதிரை விலையா ஏறிப்போச்சு. பணக்காரங்களாயிரு, ஆனால் பந்தாக்காரனா யிராதேங்கடா. நான் யார் தெரியுமாடா, பிரேஸ்லட் கொள்ளைக் கூட்டத் தலைவி. பிரேஸ்லட் போட்ட ஆண்களைப் பார்க்கும் போது கோபம் பொத்துக்கிட்டு வரும். இந்த பிரேஸ்லட்டை உன் கையில் பார்த்ததால்தான் உன்னை இன்று இலவசமாக ஓசி டிக்கெட்டில் உள்ளே கொண்டு வந்து என் வலையில் மாட்ட வைத்தேன். நான் இந்தப் பத்து பவுண் கொண்டு போய் இருபது ஏழைப் பெண்களுக்கு அரைப்பவுண் காலி செய்து கொடுத்து திருமணம் நடத்தி வைத்து

மவேன். எனவே மரியாதையாய் இந்த இடத்தைவிட்டு எழும்பிப் போய்விடு” என்று பாப்கார்ன் பொறிவதுபோல் பொறிந்து தள்ளினாள் அந்த வாலிபப்பெண்.

காட்வின் கைகள் நடுங்கின. முழங்கால்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டன. பூனையைக் கண்ட எலி போல் பதுங்கினான். படம் முடிந்தால் வெளிச்சத்தில் நம் முகம் தெரிந்துவிடும். மானம் போய்விடும். மைனர் செயினை விட மானம் தான் பெரிது என்று நினைத்து யாருக்கும் தெரியாமல் மெதுவாக வெளியே சென்றான், காட்வின்.

போகும் போது தனக்குள்ளேயே காட்வின் பேசினான். அடா. இப்படியும் பெண்கள் இருப்பார்களா? பச்சோந்திபோல் பல நிறத்தில் இருப்பார்களா? ஆழம் தெரியாமல் காலைவிட்டு மாட்டிக்கொண்டேன். வெள்ளிக்கிழமை கோயிலுக்குப் போகிறேன் என்று அம்மாவிடம் பொய் சொல்லி விட்டு வந்த எனக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்; நான் பெரிய பாவி என்று தன்னையே நொந்து கொண்டான், எனவே சீறீவரும் பாம்பை நம்பலாம், ஆனால் சிரித்துவரும் பெண்களை நம்பக் கூடாது” வாலிப நண்பர்களே ஜாக்கிரதை! ஜாக்கிரதை! என்று காட்சன் சொல்லவும் அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் இரவு 9 மணி அடித்து உயர்ந்த கருத்துள்ள பைபிள் வசனம் ஒன்றைச் சொல்லிற்று.

“கண்ணிகளும் வலைகளுமாகிய நெஞ்சமும், கயிறுகளுமாகிய கைகளுமுடையஸ்திரியானவள், சாவிலும் அதிகக் கசப்புள்ளவளென்று கண்டேன். தேவனுக்கு முன்பாக சற்குண னாயிருக்கிறவன் அவளுக்குத் தப்புவான். பாவியோ அவளால் பிடிபடுவான்” (பிரசங்கி 7:26)

உடனே காட்சன் மொபைல் பாடிற்று.

“உலக இன்பம் நம்பாதே, நம்பாதே
அதின் இச்சை யாவும் ஒழியும், ஒழியும்
உன் ஜீவன் போகும் நாளிலே, நாளிலே
ஓர் காசும் கூட வராதே” – இயேசு ராஜா

(பெயர்கள் யாவும் கற்பனையே)

– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *