(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
எமீமா, நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். மாப்பிள்ளையின் அப்பா மவுனமாய் நிற்கிறார். ஆனால் மாப்பிள்ளையின் அம்மாதான் சோளப் பொறியாய்ப் பொறிகிறார்கள். அவர்கள் என்னைப்பார்த்து, “அதெல்லாம் முடியாது. கண்டிப்பாய் 100 பவுண் நகையும், 3லட்சம்ரொக்கப் பணமும் வேண்டும்” என்று ஈவு இரக்கமில்லாமல் கேட்கிறார்கள் என்று ஹெர்மன் தன் மனைவி எமீமாவிடம் சொன்னார்.
“மேலும், நான் அவர்களைப் பார்த்து, அம்மா, எனக்கும் என் மனைவிக்கும் பென்சன் கிடையாது. தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து குருவி சேர்த்தாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து, நகைக்கு ஒரு லட்சமும், ரொக்கத்துக்கு ஒரு லட்சமும் மற்றும் கலியாண சாப்பாட்டுக்கு ஒரு லட்சமும் ஆக மொத்தம் 3 லட்சம் வைத்திருக்கிறோம். மாப்பிள்ளைக்குப் பெண்ணைப் பிடித்திருக்கிறது. அதுதான் முக்கியம். பொண்ணு தான் முக்கியமே ஒழிய பொன் முக்கியம் அல்ல. எனவே தயவு செய்து இரக்கங்காட்டுங்கள். நகையைப் பவுனில் அந்தக் காலத்தில் கேட்டதுபோல் கேட்காதீர்கள். தயவு செய்து பணமாகக் கேளுங்கள் என்று காலைப் பிடித்துக் கெஞ்சாதக் குறையாய்க் கேட்டுவிட்டேன்.’
அதற்கு அவர்கள், அந்த ஒரு லட்சத்தில் 5 பவுன் தான் வரும். அது எந்த மூலைக்கு? என் மகன் மாஸ்ட்டர் இஞ்சினிய ராக்கும். எத்தனையோ பொண்ணு கியூவில் நிற்கிறார்கள். எனவே கடன் வாங்கியாவது 100 பவுன் போட்டுவிடுங்கள். அப்போதுதான் குடும்பத்தில் எங்களுக்குப் பெருமையும், மக்கள் மத்தியில் மதிப்பும் கௌரவமும் இருக்கும் என்று சொல்லிவிட்டு உள்ளே ஓடிவிட்டார்கள் என்றார்ஹெர்மன்.
எமீமாவுக்கு தலைசுற்ற ஆரம்பித்தது. என்ன! 100 பவுனா! ஒரு கிராம் தங்கம் இரண்டாயிரம் ரூபாய்க்குமேல் ஏறிவிட்டதே. இவர்கள் நியூஸ் பேப்பர் படிக்க மாட்டார்களோ! 100 பவுன் என்றால் 800 கிராம் அல்லவா. ஒரு பவுன் நகை செய்ய, செய்கூலி, சேதாரம் சேர்த்து 25 ஆயிரம் ஆகிவிடுமே. 100 பவுனுக்கு 25 லட்சம் வேண்டுமே! பணத்துக்கு எங்கே போவது என்று கலங்கிப் பெருமூச்சுவிடவும் காலிங்பெல் சத்தம் கேட்டு கதவைத்திறந்தாள் எமீமா.
பள்ளியில் ஆசிரியை வேலை முடித்து திரும்பி வந்த மகள் ரானா ஜாய்ஸ், நடந்த சங்கதிகளைக் கேட்டு, அம்மாவைத் தேற்றினாள்.
“அம்மா, இஞ்சினியர் மாப்பிள்ளை , இஞ்சினியர் மாப்பிள்ளை, என்று ஏன் அந்த தெரியாதக் குதிரையைத் தேடிப் போகிறீர்கள்? பொண்ணைவிடப் பொன்னை விரும்பும் அந்த நகைப் பைத்தியக் குடும்பத்துக்கு நான் போக மாட்டேன். போனால், அந்த அரக்கி மாமியார், தங்கச்சோறு, பொன் பொறியல், வைரக் கூட்டு, சித்தி நெக்லஸ் அவியல், பிரேஸ் லெட் சாம்பார், லாங்செயின் ரசம், மோதிர ஊறுகாய், ஒட்டியாணம் பாயாசம் கேட்டு, என்னைப் பாடாய்படுத்தி, வீட்டுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அந்த நகைப்பைத்திய மாமியாரும் வேண்டாம், அந்த அம்மாமி மாப்பிள்ளையும் வேண்டாம். தெரியாதக் குதிரையைவிட, தெரிந்த கழுதையே நல்லது என்பார் முதியோர்.
எனவே அளவோடு படித்திருந்தாலும் ஆண்சிங்கம் எங்கள் அத்தை மகன் ஆலன் தாமஸ் தான் எனக்கு வேண்டும். என்னை எப்படியாவது காப்பாற்றுவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. போனமாதம் நம் சித்தி மகள் செலின் பாமியா கலியாணத்துக்கு அத்தை மகனும் வந்திருந்தார்கள். கலியாண மண்டபத்தில் என்னைப் பார்த்ததும், ரானா ஜாய்ஸ் போட்டிருக்கிற கலர் பாசியும் வெள்ளைக் கல் கம்மலும் அழகாக இருக்கிறதே என்று சொல்லி, அந்தப் பாசியைக்கூட ரசிக்கத் தெரிந்த அந்த அத்தைமகன் தான் எனக்கு வேண்டும்” என்று சொன்னதும், அம்மா கண்களில் ஆனந்தக் கண்ணீர்பொங்கியது.
அடுத்த நாளே அத்தைமகன் வந்தார். இருவீட்டார் அழைப்பு என்று சிக்கனமாக 200 கார்டு அடித்துக் கொடுத்தார். ஆபிரகாமின் சந்ததிகளாகிய கிறிஸ்தவர்களில், மாப்பிள்ளை தான் நகை ரொக்கம் பெண்வீட்டாருக்குக் கொடுத்துத் தாலி கட்டணுமே தவிர, எக்காரணத்தைக் கொண்டும் பெண் வீட்டில் நகை வாக்கம் கேட்கக்கூடாது, என்று மாப்பிள்ளை சொல்லவே மணப் பெண்ணின் இருதயம் மகிழ்ச்சி மடைந்தது. மாப்பிள்ளை வீட்டாரே, சிக்கனமாகச் சாப்பாட்டுச் செலவையும் ஏற்று திருமண ஏற்பாடுகள் செய்தனர்.
பந்தாவுக்காகக் கடன் வாங்கி கலியாண மண்டபம் வாகாமல், வீட்டு முன் பந்தல் சாமியானா வாழைகட்டி, இள வரிசையில் டேபுள் சேர் போட்டு மணம் கமகமக்க சைவ சாப்பாடு சாப்பிட்டு அகமகிழ்ந்தனர் அனைவரும். குறைந்த கூட்டம். நிறைந்த திருப்தி. சிக்கனக் (கலியாணம். அநாவசர, ஆடம்பர செலவு ஏதும் இல்லை .
என் இயேசுவுக்கப்புறம், என் மனைவி தான் எனக்கு சொத்து என்று மாப்பிள்ளை மேடையில் சொல்லவும் கூட்டத்தில் கரவொலி ஆரவாரித்தது.
இருமனம் ஒருமனமாக்கிய இந்தச்சிக்கனத்தில் திருமணத்தைப் பற்றி உற்றார் மகிழ்ந்தனர். ஊரார் கழந்தனர்.
அன்று மணப்பெண் ரெபெக்காளின் பெற்றோர், காடா கோடியாய்ப் பெருகுவாயாக” (ஆதி 24 : 60) ன்று வாழ்த்தியது போலவே ரானா ஜாய்ஸ் பெற்றோரும் வாழ்த்தினர். பொன்னாசை பொருளாசை இமலாத ஆண்கள்தான் கிறிஸ்தவத்துக்கு தூண்கள் என்று வாயாற வாழ்த்தினர்.
நல்லவேளை அந்த நகைப் பைத்தியப் பேய் பாம்பளையிடமிருந்து தப்பினோம். பெருமை, பேராசை, கர்வம் பிடித்த பந்தா குடும்பத்தில் நல்ல சம்பந்தம் கலக்கவில்லை என்று சொல்லிமுடிக்கவும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம் மதியம் 12 அடித்து ஒரு பைபிள் வசனமும் சொல்லிற்று.
“மாம்சத்தின் இச்சையும் கண்களின் இச்சையும், வேனத்தின் பெருமையுமாகிய உலகத்தில் உள்ளவைகள் எல்லாம் பிதாவினால் உண்டானவைகள் அல்ல” இதினாலேதேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும் பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்.” (1யோவான் 2:16, 3:10)
உடனே மாப்பிள்ளை போன்பாடிற்று.
“பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ
பண ஆஸ்தியும் வீண் அல்லவோ
பரலோகத்தின் செல்வமே என் அருள் இயேசுவே
போதும் எனக்கு நீரே – ஆ… ஆனந்தம்” — எந்தன்
(பெயர்கள் யாவும் கற்பனையே)
– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.