காப்பாற்றியது பாராயணம்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 8,237 
 

ஆத்மார்த்தமாகச் செய்யப்படும் பிரார்த் தனைகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. இதற்கு உதாரணமாக ஒரு சம்பவம்:

பெரம்பூரில் சுமார் 10 ஆண்டுகள் வசித்த என் அண்ணன், தன் மகனின் பணி இடமாற்றத்தின் காரணமாக பெங்களூ ருவுக்கு குடி பெயர்ந்தார்.

காப்பாற்றியதுஅங்கு, பொங்கலுக்கு முதல் நாள் கடைத்தெருவுக்குச் சென்றபோது விபத்தில் சிக்கிய என் அண்ணன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ‘ஓரிரு நாட்கள் கழித்தே எதுவும் சொல்ல முடியும்!’ என்று மருத்துவர் கள் கை விரித்து விட… தகவல் அறிந்த நாங்கள் அதிர்ந்தோம். பத்து நாட்கள் சுய நினைவு இல்லாமல் கிடந்தார் அண்ணன். அவர் விரைவில் குணமடைய இறைவனைப் பிரார்த்திப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை.

இந்த நிலையில் என்னைச் சந்திக்க வந்த சிநேகிதி ஒருவள், ‘வேல் மாறல்’ (அருண கிரியாரது வேல்வகுப்பை ஒரு பாராயண முறையாக அமைத்தார் வள்ளி மலை ஸ்ரீசச்சி தானந்த சுவாமிகள். அதுவே வேல்மாறல்) புத்தகத்தைக் கொடுத்து தொடர்ந்து படிக்கச் சொன்னாள். நானும் விடாமல் ‘வேல் மாறல்’ பாராயணம் செய்து வந்தேன்.

தைக் கிருத்திகை அன்று கோயிலுக்குச் சென்று, அர்ச்சனை செய்து அண்ணன் குணமாக வேண்டி முருகனை பிரார்த்தித்தேன். அப்போது, அவர் மேல் சாத்தப்பட்டிருந்த மாலையில் இருந்து ரோஜா ஒன்று கீழே விழுந்தது; மகிழ்ந்தேன். வீடு திரும்பும்போது, கையில்& வேல்; உடம்பு முழுவதும் திருநீறுடன் சிறுவன் ஒருவன் எதிர்ப்பட்டான். எனக்கு மெய்சிலிர்த்தது. விசாரித்தால் பள்ளியில் மாறு வேடப் போட்டிக்குச் செல்வதாகக் கூறினான் அவன். எது எப்படியோ… எனக்கு சாட்சாத் அந்த முருகப் பெருமானையே நேரில் தரிசித்தது போல் இருந்தது! கண்ணீர் மல்க, ‘முருகா!’ என கை கூப்பி வணங்கி விட்டு, வீடு வந்து சேர்ந்தேன். அன்று மாலையே, ‘அண்ணனின் உடல் நிலையில் முன்னேற்றம்; இனி கவலை இல்லை!’ என்று மருத்துவர்கள் சொன்னதாக தகவல் வந்தது. எல்லாம் வேல்மாறல் பாராயணம் செய்ததன் பலன்!

– பி. ராஜலெக்ஷ்மி, சென்னை-61

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *