அம்பலப்படுத்த வந்த அந்தணர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 12, 2013
பார்வையிட்டோர்: 7,638 
 
 

சிருங்காரக் காவியங்களில் பழைமையானது கீதகோவிந்தம். ‘ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றே’ என்கிற அத்வைத சித்தாந்தத்தை விளக்கும் இது, ஸ்ரீகிருஷ்ணனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது. இதன் பாடல்கள், எட்டு அடி கொண்டதால், ‘அஷ்ட பதி’ என்று வழங்கப்படுகிறது.

அம்பலப்படுத்த வந்தகீதகோவிந்தத்தில் ‘வதஸியதி’ எனத் துவங்கும் பாடலை இறைவனே இயற்றியதாகச் செவிவழிச் செய்திகள் கூறுகின்றன. இந்த ஒப்பற்ற காவியத்தை நமக்கு அளித்தவர் ஸ்ரீஜயதேவர் சுவாமிகள்.

ஒரு முறை கண்ணபிரானிடம், ‘‘முப்பிறவி எடுத்து உனது திருவிளையாடல்களைப் பாட வேண்டும்!’’ என்று விண்ணப்பித்தாராம் வேத வியாசர். அதன்படி தீர்த்த நாராயணர் எனும் யதிராஜராகவும், «க்ஷத்ரக்ஞர் எனும் மகா வித்வானாகவும் தோன்றினாராம் வேத வியாசர். வேத வியாசரின் அம்சமாகத் தோன்றிய ஸ்ரீஜயதேவ சுவாமிகளும் அவதார புருஷரே!

ஸ்ரீமந் நாராயணன் கோயில் கொண்டுள்ள தலங்க ளுள் ஒன்று ஜகன்னாத்பூரி. இங்கு எம்பெருமான் பலதேவன் மற்றும் தங்கை சுபத்ரையுடனும் காட்சி தருகிறான். பக்தர்கள் சூழ்ந்திருக்கும் இங்கு வேதமும் பாடல்களும் சதா ஒலித்துக் கொண்டிருக்கும்.

பூரிக்கு அருகே துந்துபில்வம் எனும் ஊரில் நாரா யண சாஸ்திரி& கமலாபாய் தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஸ்ரீஜயதேவ சுவாமிகள். ஒரு முறை அவர் முன் தோன்றிய இறைவன், ‘‘ஜயதேவா… உனது கல்வி மற்றும் அனுபவங்களை மக்களுக்கு வாரி வழங்கு!’’ என்று கூறி மறைந்தாராம். அதன் பிறகு மகாவிஷ்ணுவின் அவதார வைபவங்களை அனைவரும் படித்து இன்புறும் வகையில் இயற்றி, அரங்கேற்றத் திருவுளம் பூண்டார் ஜயதேவர். அப் போது அந்த நாட்டை ஆட்சி செய்த மன்னன் கிரவுஞ்சன் ஜயதேவரது யோசனைக்குச் சம்மதித்து, அரங்கேற்றத்துக்கும் ஆவன செய்தான்.

ஒரு சுபமுகூர்த்த நாளில் அரங்கேற்ற வைபவம் ஏற்பாடானது. அரசவையில் பண்டி தர்களும் அந்தணர்களும் கூடியிருந்தனர். அப்போது கம்பீரமான அந்தணர் ஒருவர் அங்கு வந்து மன்னனை வணங்கி, ‘‘மன்னா… அடி யேன் வேத விற்பன்னன். எனது ஊர் கோகுலம். பல ஊர்ப் பண்டிதர்களையும் வாதில் வென்றவன். இங்குள்ள ஜயதேவர் எனும் பண்டிதருடன் தர்க்கம் புரியவே நான் வந்துள்ளேன்!’’ என்றார்.

உடனே ஜயதேவர் அவரை வணங்கி, ‘‘சுவாமி. அடியேன் பெயர் ஜயதேவன். பண்டிதன் அல்ல. தங்களைப் போன்ற அடியாருக்குத் தொண்டு செய்வதே அடியேனது லட்சியம்!’’ என்றார்.

‘‘உமது தந்திரம் என்னிடம் பலிக்காது. அரைகுறை யாக வித்தை கற்றுவிட்டு, அனைத்தும் தெரிந்தவன் போல் நடிக்கும் உமது நாடகத்தை அம்பலப்படுத்தவே வந்திருக்கிறேன்…’’ -_ அந்தணர் கர்ஜித்தார். ஜயதேவர் பணிவான குரலில், ‘‘சுவாமி… நான் பண்டிதன் அல்லன். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் கண்ண பிரான் திருவிளையாடல்களைப் பாடி இருக்கிறேன். இதோ, அந்த கிரந்தம். தயை கூர்ந்து தாங்கள் அதைப் பரிசோதித்து என்னைப் பெருமைப்படுத்தவும்.’’

‘‘என்ன தைரியம் உமக்கு? பாகவதத்தை நீ புதுப்பித் திருக்கிறாயா? சரி சரி… அதை நீயே வைத்துக் கொள். பாகவத சுலோகங்களை நான் சொல்கிறேன். அவற்றை நீ எழுதிய சுலோகங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், பிறகு நீயே உனது அறியாமையை உணர்ந்து கொள்வாய்!’’ என்ற அந்தணர், தொடர்ந்து சுலோகங்களைச் சொன்னார்.

என்ன ஆச்சரியம்! ஜயதேவர் எழுதியதையே ஓர் எழுத்து மாறாமல் அவர் சொல்லி வந்தார். திகைப்படைந்த ஜயதேவர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அந்த ணர் பாடிய சுலோகங்களை சபையோர் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஜயதேவரின் மன தில் பளிச்சென்று ஒரு மின்னல். ‘அந்தணராக வந்திருப்பவர், லோக நாயகனே!’ என்று நொடிப் பொழுதில் அடை யாளம் தெரிந்து கொண்டார் அவர்.

மோகினியாக வந்தவன், மோகக்குழல் இசைத்தவன், கோவர்த்தனகிரியைக் குடையாகப் பிடித்தவன், குவலயம் காப்பவன்இப் போது தனது நாமத்தையே ‘சங்கீர்த்தனம்’ செய்து அற்புதத் திருவிளையாடல் புரிவது விளங்கி யது. உடனே ஜயதேவர் நாத் தழுதழுக்க, கண்களில் ஈரம் கசிய… கரங்களை சிரத்துக்கு மேல் உயர்த்தி, ‘‘மாதவா, மதுசூதனா, ஜனார்த்தனா, உன் மாயையை யாரறிவர்!’’ என்று பலவாறு புகழ்ந்து வணங்கினார். ஜயதேவர் கண்ணிமைத்துப் பார்ப்பதற்குள் அந்தணராக வந்தவர் மாயமாக மறைந்தார்.

அசரீரிக் குரல் ஒன்று, ‘‘ஜயதேவா, நீ பாடிய இந்த பாகவத கிரந்தத்தை அவையறிய யாமே அரங் கேற்றத் திருவுளம் கொண்டோம். உனது பக்தி யில் யாம் எம்மையே மறந்தோம். சுக முனிவர் இயற்றிய பாகவதத்தைப் படித்த பலனை, உனது பஜ கோவிந்தத்தின் ஓர் அத்தியாயத்தைப் படித்தாலே அடைவார்கள்!’’ என்று அருளியது.

பக்தியால் முக்தி பெற்ற ஸ்ரீஜயதேவர் சுவாமிகள் அருளிய பகவத் பாடல்கள் மற்றும் கீத கோவிந்தப் பாடல்கள் நமக்குக் கிடைத்த ஒரு வரப் பிரசாதம் என்றால், அது மிகை ஆகாது!

– செப்டம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *