அகலிகா! நான் உன்னைக் காதலிக்கிறேன்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை புனைவு
கதைப்பதிவு: January 13, 2023
பார்வையிட்டோர்: 15,565 
 
 

கௌதம முனிவன் நிஷ்டை கலைந்து கண்ணை விழித்தான். அந்த ஆரண்யம் மிக அடர்த்தியாக இருந்தது. எதிரில் அவனைச்சுற்றி மரங்கள் செடிகள். கொடிகள். மெல்ல யோசித்தான். தான் எங்கே இருக்கிறோம் தண்டகாரண்யம்? அல்லது மேருமலை? புரியவில்லை. கொஞ்சம் யோசித்தான். நீண்டகால தவத்தால் அவனுக்கு சக்தி பெருகி இருந்தது. தவவலிமை கூடியிருந்தது. ஆனால் அதுவெல்லாம் பிரயோக படுத்த அவன் மனம் ஒரு படவில்லை. தான் எங்கு இருக்கிறோம். எங்கே. எங்கே. எங்கே. மெல்ல யோசித்தான். நினைவு வந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நினைவு வந்தது. கடைசியாக அவளை தன் மனைவியை ரிஷி பத்தினியான அகலிகையை தன் பிரிய சகியை கல்லாக சபித்தது ஞாபகத்துக்கு வந்தது உட்கார்ந்தே யோசித்தான். தன் பர்ணசாலைக்கு போக வேண்டும். அங்கே போய் என்ன செய்வது? ஒரு கமண்டலம் நீர் கொண்டுவர ஒரு மனைவி வேண்டும். பூக்கள் சொரிய ஒரு மனைவி வேண்டும்.

கண்ணை மூடி யோசித்தால் கௌதமன். ஒரு மகரிஷி கொஞ்சம் பொறுமை காத்து இருக்கலாம். ஏன் என் மனம் அவசரப் பட்டது. அப்படி அகலிகையை சபிக்க ஏன் அவசரம் வந்தது. அவள் தவறு செய்தாளா. இந்திரன் செய்த தவறுக்கு அவள் ஏன் பொறுப்பேற்க. வேண்டும். தனக்கு தவ வலிமை இருப்பதால் அவளை கல்லாக்கி இந்திரனை சபித்து ஆகிவிட்டதா. என்ன கர்வம் இது. அகலிகை ஏன். எப்படி பொறுமை காத்தாள். அகலிகை நினைத்திருந்தார் தன்னைக் கல்லாக்கி இருக்க முடியும். பத்தினிகளின் பொறுறுமையால் ஆண்கள் உயிர் பிழைக்கிறார்கள்.

சுற்றிலும் வெறும் வெருமை. தான் எத்தனை தவம் செய்து எவ்வளவு தவவலிமை பெற்றதனால் என்ன பலன். எனக்கென்று ஒரு பெண் இல்லை. தனக்கு ஆயிரம் பெண்கள் அனுப்பி வைக்க சக்கரவர்த்திகள் எத்தனை இருக்கிறார்கள். ஆனால் அவர்களில் ஒருத்தி கூட என அகலிகை ஆக முடியாது. என் காமத் தீயை. எனது அன்பை. எனது உள்ளக்கிடக்கையை. என் மனதை. உணர்ச்சிகளை எல்லாம் அறிந்து கொள்ள அகலிகை ஒருத்தியால் மட்டுமே முடியும். எங்கே என் அகலிகை? எங்கேயிருக்கிறாய் கண்ணே?

அகலிகா! நான் உன்னை காதலிக்கிறேன். என் சகியே. என் தர்மினியே நான் உன்னை. உன்னைத்தான் காதலிக்கிறேன் கண்ணே!.

கௌதமன் கீழே விழுந்து அழுதான். புலம்பினான். என் முதல் வேலை அகலிகாவை சாபத்திலிருந்து விமோசனப்ப் படுத்துவதுதான். இன்னும் கல்லாக இருக்கிறாயா அகலிகா?

சட்டென்று ஞாபகம் வந்தது ராம அவதாரத்தில் அகலிகாகலிகாவுக்கு சாபவிமோசனம் கிடைத்திருக்குமே. அவள் என்னை தேடி வந்திருக்க வேண்டுமே. என்னையன்றி அவருக்கு வேறு யார் துணை. எங்கே இருக்கிறாய் அகலிகா. அகலிகா. என்னை உன்னால் கண்டுபிடிக்க முடியவில்லையா கண்ணே. நீ ரிஷி பத்தினி பல ஆயிரம் சக்திகள் கொண்டவர்கள் ஆயிற்றே. ஏன் என்னை தேடி வராது இருக்கிறாய். நான் நிஷ்டையில் இருக்கலாம். ஆனால் நீ என் அருகில் அல்லவா இருக்க வேண்டும். அகலிகா என்னை வெறுத்து விட்டாயா. உன்னால் முடியாது. ஏனென்றால் நீ என்னை காதலித்தாய். எப்பொழுதும் நீ என்னை காதலித்துக் கொண்டு இருப்பாய்.

அகலிகா நான் உன்னை காதலிக்கிறேன். மறுபடி கண் மூடினான்.

ஸ்ரீராமன் கால்பட்டு அகலிகை மறுபடி மனுஷி ஆனது. ஆனால் மறுபடி கல்லானது. ஞானக்கண்ணை திறந்தபோது திருஷ்டியில் எல்லாம் தெரிந்தது. ஞானக் கண்ணில் எல்லாம் புரிந்தது. கொஞ்சம் அதை விரித்தான். ஒரு சம்பாஷனை காதில் வந்தது. ஒரு பனிப் பெண்ணும் அகலிகையும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

‘ரிஷி பத்தினி! நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்’.

‘மகளே! நானாக இங்கு வரவில்லை. நான் கரை பட்டேன். என் கதை நீ அறிவாய் அல்லவா. என் புருஷன் கவுதமன். அவர் என்னை சபித்தார் நான் கல்லானேன். இங்கேயே இருக்கிறேன். ஆனால் எப்பொழுதும் என் கணவனை அன்றி நான் வேறு யாரையும் அறிந்ததில்லை நான் கௌதம ரிஷியைக் காதலிக்கிறேன்.ஶ்ரீராம்ன் கால் பட்டு நான் மறுபடி மனுஷி ஆனேன் ஸ்ரீராமன் எவ்வளவு உயர்ந்தவன் தெரியுமா.’

‘ரிஷி பத்தினி! ஸ்ரீராமன் அவ்வளவு உயர்ந்தவன் என்றால்’.

‘ஏன் இழுக்கிறாய் மகளே? ஸ்ரீராமன் உயர்ந்தவன் என்பதில் உனக்கு என்ன மாறுபாடு?’

‘அன்னையே நான் சிறியவள் ஒரு சேடிப்பென். நான் அவதார புருஷர் களைப்பற்றி தங்களிடம் பேசும் அளவுக்கு அறிவில்லாதவன். தாங்களும் மிக உயர்ந்த ரிஷி பத்தினி. அதை அப்புறம் பேசலாம் தாயே, ஏன் மகரிஷி உங்களை சபித்தார்?’.

‘தவறு என்னுடையது மகளே! ஒரு பிரம்ம முகூர்த்தம் அந்த வேளையில் நான் உறங்கிக் கொண்டிருந்தேன். ஆழ்ந்த உறக்கம். அப்பொழுது கௌதமனின் நினைவு வந்தது. எவ்வளவு பெரிய சங்கடம்ம்.ம் ரிஷிகளில் உயர்ந்தவன் கவுதமன் அவனைப்பற்றி நினைத்தபோது அவனைப்பற்றிய பெருமிதத்தில் எனக்கு காமம் வந்தது. நானும் பெண் தானே.சில நாட்களாய் நாள் அவனுடன் கூட வில்லை. அந்த ஏக்கம். நான் காமத்தீயில் வெந்து கொண்டிருந்தேன். தியானங்களில் ஆழ்ந்திருந்த அவனுக்கு அது புரியவில்லை.எனக்கு மிக ஆழ்ந்த உறக்கம்.ம் மிக அதிகப்படியான காமம். அப்பொழுது திருடனாக என்னிடம் வந்த இந்திரன் என்னை புணர்ந்து விட்டான். அப்போதும்கூட நான் கௌதமன் நினைவில் இருந்தேன். என்னை புணர்ந்தது கௌதமன் என்றுதான் உணர்ந்திருந்தேன். கௌதமன் வரும்வரை எனக்கு என்ன நேர்ந்தது என்பது எனக்கே தெரியாது. கவுதமன் சபித்த போதே நான் அனத்தும் உணர்ந்தேன்.. கௌதமன் என்னை சுவைத்ததை மிக சந்தோஷமாக ஏற்றுக் கொண்டதாக நான் உணர்ந்திருந்தேன் என்னை புணர்ந்தது இந்திரன் என்று தெரிந்ததும் நான் துடித்துப் போனேன் சாவைக்கொள்ளக் கூடநான்தயாராக இருந்தேன். ஆனால் கௌதமனை என்னை அவ்வாறன்றி கல்லாகவே சபித்தான் நான் கவுதமனை நன்றியுடன் நினைக்கிறேன். நான் சாம்பலாகி நீரில் கரைந்து இருப்பேன் இன்று கல்லாகி மறுபடி மனுஷியாகி உன் எதிரில் பேசிக்கொண்டிருக்கிறேன் மகளே. ஸ்ரீ ராமனை பற்றி ஏதோ ஆரம்பித்தாய் அது என்ன பெண்ணே!’.

‘அது வேண்டாம் தாயே. நீங்கள் ஸ்ரீராமனை தெய்வ புருஷனாக கொண்டிருக்கும் வேளையில் என் சந்தேகங்கள் அர்த்தமில்லாதவை. நான் சிறு பெண். அறிவில்லாதவன்.. உங்களுக்குப் பணிவிடை செய்வதே என் அதிகபட்ச புண்ணியம். இதில் ஒரு அவதார புருஷனை பற்றி பற்றி உங்களிடம் நான் சம்பாஷி ஷிப்பது மிகப்பெரிய தவறு தாயே’.

‘இல்லை நீ ஏதோ சொல்ல வருகிறாய் உன் மனதில் இருப்பதை சொல்லிவிடு’.

‘தாயே நீங்கள் கட்டாயப்படுத்துவதால். நான் என் ஐயத்தை கேட்கிறேன் ஸ்ரீராமன் முற்றிலும் உணர்ந்தவர். சீதாபிராட்டி கற்பின் இலக்கணம்’.

ராவணனிடம் இருந்து பிராட்டியை காப்பாற்றிக் கொண்டு வந்த ஸ்ரீராமன் அவளை ஏன் நெருப்பில் இறங்கச் சொன்னான். அவளது கற்பை ஏன் பரிசோதித்தான்?.

‘என்ன சொல்கிறாய் மகளே ஸ்ரீராமன் சீதையை நெருப்பில் இறங்கச் சொல்லி அவளது கற்பை சோதித்தானா என்னால் நம்ப முடியவில்லையே’.

‘அதுமட்டுமல்ல தாயே ஸ்ரீராமன் ஒரு சலவைத் தொழிலாளியின் தரமற்ற பேச்சை நம்பி பிராட்டியை பிரிந்திருக்கிறார்ர். இது ஸ்ரீராமன்.போன்றவர்கள்.. சரியான தெய்வ புருஷர்கள் உதாரண புருஷர்களாக இருக்க வேண்டுமேயன்றி இப்படி சாதாரண மனிதர்களாக ஶ்ரீராமன் ஆக வேண்டுமா தாயே.

அகலிகை குழப்பத்துடன் பார்த்தாள். ஸ்ரீராமன் சீதையை அவளது கற்பை சோதித்தான். அல்லது சந்தேகப்பட்டான் என்பது அகலிகையின் மனசில் ஒரு வலியை அளவுகடந்த வேதனையை உண்டாக்கியது.

‘மகளே! இந்திரன் என்னை தீண்டியது எனக்குப் பிடிக்கவில்லை. இந்திரன் தேவாதி தேவன். ஆனால் என் மனதில் கௌதமன் இருந்தான், என்னை தீண்டியது கௌதமன் என்றே நினைத்தேன். ஆனால் மகளே ஸ்ரீராமன் மனிதப்பிறவி அல்லவா. அவன் என்னை தீண்டி சாபவிமோசனம் கொடுத்து இருருக்கிறானே. இந்திரன் தீண்டியது தவறானால் ஸ்ரீராமன் தீண்டியதும் தவறுதானே. அதை எப்படி என்னால் அனுமதிக்க முடியும் தவிர மகளே நீ சொல்கிறாய்ஶ்ரீ ராமன் தன் மனைவியை கற்பின் செல்வியை சீதையை நெருப்பில் புகுந்து வரச் சொன்னான் என்கிறாய். அது எந்த விதத்தில் நியாயம் அப்படி சொல்லும்போது ஸ்ரீராமன் தெய்வப்பிறவி அல்லன்.மனிதனாகிறான் ஒரு சாதாரண மனிதன் கால் பட்டா நான் சாபவிமோசனம் பெற வேண்டும். இல்லை மகளே என்னை கௌசிகன் தவிர வேறு யாரும் தீண்டக்கூடாது. ஒருவேளை கௌசிகன் இந்திரனை தண்டிக்காமல் விட்டு இருந்தால் நான் அவனை என் கற்பின் சக்தியால் மூவுலகத்திலும் அவனில்லாமல் செய்திருப்பேன்.

‘தாயே ராமச்சந்திர மூர்த்தியின் திருவுள்ளம் என்னவென்று என்னை போன்ற சாதாரண பணிப்பெண்ணுக்கு என்ன தெரியும் நான் தவறாக சம்பாஷிஷிக்கிறேன். ஒரு நிமிடம் தாங்கள் ரிஷி பத்தினி என்பதை நான் மறந்துவிட்டேன் என்னை மன்னிக்க வேண்டும். ஸ்ரீராமனை பழுது சொல்ல யாராலும் முடியாது அவன் இந்திரனுக்கு மேலானவன் ஏகபத்தினி விரதன் அவன் கால்பட்டே தங்களுக்கு மனித வடிவம் வந்தது.

‘நீ சொல்வது சரிதான். ஆனால் அவன்என் தாய்க்கு நிகரான சீதையை சந்தேகப்பட்டது தவறல்லவா..’

‘இல்லை தாயே உலகம் சீதையை கற்புக்கரசி என்று போற்ற வேண்டும் என்ற உள்ளக்கிடக்கையில் ஸ்ரீராமன் தாயை நெருப்பில் போக வைத்திருக்கலாம். தேவ ரகசியங்களை என்னை போன்ற சாதாரண அறிவுள்ளவர்கள் விவரித்தல் சரியா தாயே. என்னை மன்னிக்க வேண்டும் தாயே!’.

‘மகளே சீதை கற்பின் சிகரம் அவளை வருத்திய ஒருத்தன் காலில் பட்டு எனக்கு சாப விமோசனம் கிடைக்க கூடாது. நீ உன் இருப்பிடம் செல். என் கௌதமன் உயர்ந்தவன். அவசரப்பட்டு எந்த ஒரு யோசனையும் இன்றி என்னை சபித்து விட்டான் ஆனால் ஸ்ரீராமன் யோசித்து பிராட்டியை தீயில் இறக்கி இருக்கிறான். ஸ்ரீ ராமனை விட என் கௌதமன் உயர்ந்தவன் எனக்கு இந்த சாபவிமோசனம் வேண்டாம். என்னைக் கல்லாக சபித்த என் புருஷனே என்னை மனுஷி ஆக்கவேண்டும் என்னை மனுஷியாக அவன் ஒருவனே தகுதியானவன். எனக்கு என் கணவன் கையால் சாபவிமோசனம் கிடைக்கட்டும். நான் கற்புள்ளவள் என்பது நிஜமானால் நான் மறுபடி கல்லாகி விடுகிறேன்.மறுபடி என் கணவன் கௌதமன் என்னிடம் வருவான் அவன் என்னை தீண்டி நான் மனுஷியாவேன். இது என். பிரார்த்தனை நடக்கும் போ. உனக்கு மங்களம்.நீ போ. ஓம் ஓம் ஓம்’.

அகலிகை கண்ணை மூடி முழு முதல் கடவுளை நினைத்து கல்லாக வரம் கேட்டாள் கௌதமன் தவவலிமை அந்தக் கற்புக்கரசியைகல்லாக சமைத்தது. தவறு தவறு அவளது தவ வலிமை மறுபடி அவளை க் கல்லக்கியது.

(சாபவிமோசனம் என்ற சிறுகதையில் புதுமைப்பித்தன் மிக அழகாக இந்தக் கருத்தை படைத்திருக்கிறான் என்பதை வாசகர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன்)

பணிப்பெண் தன் எதிரில் இருந்த கல்லின் முள் மண்டியிட்டு கண்ணீர் உகுத்து வணங்கி எழுந்தாள் ‘தாயே மகரிஷி உங்களைத் தேடி வருவார் நீங்கள் மறுபடி பழைய சோபையுடன் கம்பீரமாக தாம்பத்தியத்தில் ஈடுபடும் நாள் வந்தே தீரும்.

மௌனமாக பணிப்பெண் நடந்தாள்.


கௌதமனின் ஞானத்தில் மனைவியின் உறுதி சங்கல்பம் கத்தியை பாய்ந்தான்.

‘ரிஷி பத்தினி! நான் உனக்கு சாப விமோசனம் தருவேன்நான் உன் மனக் கிடக்கை உன் காமம் உன் காதல் உன் பணிவிடை எதுவும் புரியாத ஒரு மரக்கட்டை யாக இருந்து விட்டேன் என் தவறுகளை உணர்கிறேன். என்னை மன்னித்து விடு கண்ணே. அகலிகா நான் உன்னை தேடி வருவேன் என்னை உன்னுடன் சேர்த்துக்கொள். நான் என்ன தவறு செய்து இருந்தாலும் அது உன் பொருட்டு நீ எனக்கே உரியவள் என்பதால் என்னை தவிர யாருக்கும் நீ உரியவள் அல்லல்ல் என்பதால் நான் தவறு செய்துவிட்டேன்..’

கௌதமன் கண்ணைத் திறந்தான் அவன் செய்கை அவனுக்கே வெட்கமாக இருந்தது.

‘அகலிகா நான் தவறு செய்துவிட்டேன் மகரிஷி என்ற ஆணவத்தில் இருந்து விட்டேன் உன்னை சபித்தது. துரோகம் நீ கூட வில்லை இந்திரன் கூடும்போதும் கூட நீ என்னையே உணர்ந்தாய் நீ கற்புக்கரசி. நான் ஜமதக்னி ரேணுகாவை கண்டித்தது போல உன்னை துண்டித்து விட்டேன் ரேணுகா மகாமாயா ஆகிவிட்டாள் பராசக்தி ஆகிவிட்டாள். ஆனால் நீ என்னுடன் இருக்க வேண்டும். உன்னை நான் இழந்தால் என் தவவலிமை வீணாகும். நீயே என் தவவலிமை நீயே எனது சக்தி. உன்னை நான் ஆசீர்வாதம் செய்து விமோசனம் கொடுத்து என்னுடடன்டன்வைத்து வைத்துக் கொள்வேன். கௌதமன் உன்னிடம் வருகிறான். என்னை மன்னித்துவிடு கண்ணே!’.

மகரிஷி கீழே விழுந்து அழுதான். என் தெய்வமே என் அன்பிற்குரிய ரிஷி பத்தினி. கற்பின் சிகரமே! பெண்ணில் உயர்ந்தவளேளே!.

அகலிகா! நான் உன்னை காதலிக்கிறேன்!.


‘ஐயா. நீங்கள் இந்தப் பகுதியில் புதியவராக இருக்கிறீர்கள். நீங்கள் யார்?”.

‘நான் மிகவும் பழயவன். என்னை உங்கேஉக்குத்தெரியாது..சொன்னால் புரியாது. அதை விடுங்கள் நீங்கள் யார்?’.

கௌதமன் கூற்று எதிரில் இருந்தவனுக்கு பயத்தை உண்டு பண்ணியது இந்த ஆள் யாராக இருந்தாலும் மிகவும் பலசாலி. இவனினிடத்தில் ஏதோ ஒன்று இருக்கிறது ஜாக்கிரதையாகப் பேச வேண்டும்…

‘ஐயா நான் ஒரு சாதாரணமனிதன். செல்வ வசதி உள்ளவன் என்று சொல்லுவார்கள்கள். ஆனால் அதில் என்ன பயன் என் மனைவி என்னை விட்டு ஒதுங்கி வேறு ஒருத்தன் வாழ்கிறான்’.

‘அது எப்படி முடியும். விசித்திரமாக இருக்கிறதே?’.

‘இதில் என்ன விசித்திரம் ஐயா நிறைய பேர் அப்படித்தான் வாழ்கிறார்கள். நான் வெறுத்து போய் ஒதுங்கி வந்துவிட்டேன் பல பெண்கள் இப்படி ஆண்களை விட்டு ஒதுங்கி வாழ முடியும்’.

‘சட்டமும் சமூகமும் சம்பிரதாயங்களும் இதை ஒத்துக் கொள்கின்றனவாவா?’

‘ஐயா நீங்கள் கேட்பது புதுமையாக இருக்கிறது. ஏதோ திரேதாயுகத்தில் இருக்கிற ஒருவன் பேசுகிற மாதிரி இருக்கிறது. இது கலியுகம் இல்லையா இந்த யுகத்தில் இப்படித்தான் இருக்கும். அறிவு பொருந்திய நீங்கள் இதை உணரவில்லையா?’.

கௌதமன் சிரித்தான் ‘ஆமாம் ஆமாம். நான் திரேதாயுகத்தில் மனிதன் எனக்கு தெரியவில்லை. நீங்கள் சொல்வது சரி. கலியுகத்தில் இஇப்படி எல்லாம் நடக்கும் என்றுதான் பகவான் சொன்னார் அது உண்மை’.

‘ஐயா! தாங்கள் பகவான் பற்றி பேசுகிறீர்கள்.தாங்கள் யார்?’.

‘அதைச் சொன்னால் உங்களுக்கு புரியாது. நீங்கள் என் கண்ணைத் திறந்து இருக்கிறீர்கள். ஒரு யுக மாற்றத்தைச் சொல்லி இருக்கிறீர்கள் எனது ஆசீர்வாதம். நான் என் வழியில் செல்கிறே.ன் நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடருங்கள் உங்கள் மனம் அமைதி ஆகட்டும்’.

கௌதமன் அவனை விட்டுப் பிரிந்தார்.


கௌதமன் கல்லைத் தொட்ட போது அகலிகை உயிர்பெற்று சிலிர்த்து எழுந்தாள்.

மகரிஷி தங்கள் ஆசீர்வாதம் தங்களை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

‘அப்படி சொல்லாதே அகலிகா! என் கண்ணே! கண்ணே! உன் மறு உயிராக நான் இங்கே வந்திருக்கிறேன் நான் என்னை உணர்ந்தேன். இந்த யுகத்தை உணர்ந்தேன். நான் உன்னை தீண்டினால் அஅன்றி என் தவவலிமை என்னை அண்டாது. பாவிகளுக்கு தவவலிமை கூடாது. என் உயிரானவளே. எனது அன்பே. கண்ணே அகலிகா. என் தவறுகளை மன்னித்து என்னை ஏற்றுக்கொள். ரிஷிபத்தினி. நீ என் தெய்வம் கற்பின். சிகரம். நீ என்னை சேர்ந்தாலன்றி நான் மனிதனாக முடியாது மகரிஷியும் ஆக முடியாது கண்ணே!’.

‘ஆனால் மகரிஷி நான் தீண்டபட்டவள். பர புபுஷனால்னால் தீட்டுப் பட்டவள். என்னை நீங்கள் தொட்டால் தங்கள் தவ வலிமையை குன்றும் தங்களை பார்த்ததே எனது பாக்கியம். அகலிகை காமத் தீயால் கலங்கியவள் நான் உங்களுடன் சேர முடியாது. பார்க்கவும் அருகதையற்றவன் சுவாமி’.

‘தவறு கண்மணி. நாம் கலியுகத்தில் இருக்கிறோம் அதற்காக தவறு செய் என்று கேட்கவில்லை. எந்த யுகமும் தவறுகளை நியாயப்படுத்தாது. நானே தவறு செய்தவன். நான் அதை சரி செய்ய வேண்டும். எனக்கு நீ அந்த சந்தர்ப்பத்தை தர வேண்டும். அதுவே பத்தினி தர்மம் என்னை வேக விடவும் என்னை சாக விடுவதும் உன்னால் முடியாது. அன்பே அது!’

‘உனக்கு அழகல்ல கண்ணே. நான் என்னை உணர்ந்து விட்டேன். நீ உன்னை உணர்ந்து கொள். இந்த யுகத்தின் வழிகாட்டிகளாக நாம் இருப்போம். செய்யாத தவறை தண்டிப்பது யுக தர்மம் அல்ல கண்ணே!கண்ணே!’.

ரிஷபத்தின் கௌதமனின் கை சேர்ந்தாள். விசாலமான அவள் புன்னகையில் கௌதமன் உடல் சேர்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *