மறதி நோய் ஆராச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: July 29, 2016
பார்வையிட்டோர்: 12,456 
 
 

கொழும்பில், டாக்டர் சோமசுந்தரம் முதியோர்களிடையே பிரபல்யமான வைத்தியர். டாக்டர் சோமரிடம் போனால் வியாதிகள் எல்லாம் சுகமாகிவிடும் என்பது பல முதியோரின் நம்;பிக்கை.

மனிதனுக்கு வயது ஏறும் போது நோய்களும் எங்கிருந்தோ வந்து உடம்பில் உறவாடத் தொடங்கும். இது இயற்கை. இருதய நோய், சிறு நீரக வியாதி, நீரிழிவு, அல்செய்மார், டிமென்சியா, எலும்புப்புரை, பார்கின்சன் , எபிலெப்சி என்ற கால்-கை வலிப்பு போன்ற நோய்கள் பல தோன்றுவது சர்வசாதாரணம். ஓவ்வொரு மரணத்துக்கும் ஒரு காரணம் தேவை.

டாக்டர் சோமசுந்தரத்தின் தந்தையரான டாக்டர் சுப்பிரமணியத்தின் ஆரம்பக்கல்வி யாழ்ப்பாணத்தில் உள்ள பரியோவான் கல்லூரியில். அதன் பி;ன்னர் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவகல்லாரியில் அவர் படித்து டாக்டர் பட்டம் பெற்றவர்.

யாழ்ப்பணத்திற்கு அருகேயுள்ள கரம்பன் என்ற ஊரைச் சேர்ந்தவர் சோமரின் தாய் மாமன் மாணிக்கம, யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பிரபல்யமான ஏற்றுமதி இறக்குமதி வியாபாரி. செல்வத்துக்கு குறைவில்லை. தன் படிப்புக்கு பண உதவி செய்தார் என்பதற்காக அவர் மகள் பாக்கியத்தை கொழுத்த சீதனத்தோடு டாக்டர சுப்பிரமணியம். மணந்தார். பாக்கியத்தோடு; சிறுவயது முதற்கொண்டே ஒன்றாகப் பழகியதினால் அவளை திருமணம் செய்ய அவர் சம்மதித்தார் என்றே சொல்லலாம்.

டாக்டர் சுப்பிரமணியம் தன் ஒரே மகன் சோமசுந்தரத்;தைத் தான் படித்த பரியோவான் கல்லூரியில் படிப்பித்தார். தன்னைப் போல் ஒரு மருத்துவராகி மருத்துவத் துறையில் பல ஆராச்சிகள் மூலம் கண்டு பிடிப்புகள் செய்து மருத்துவத் துறையில் பிரபல்யமாகி தன் மகன் பெயர்வாஙக வேண்டும் என்பது டாக்டர் சுப்பிரமணியம் கண்ட கனவு. அதையே பாக்கியமும் எதிர்பார்த்தாள். தன் ஒரே மகன் மேல் அவளுக்கு அளப்;பரிய பாசம். சகோதரங்கள் இல்லாத அவளுக்கு மகன் தான் எல்லாம். சுந்தரத்தி;ற்கு தந்தையை விட தாய் மேல் நம்பிக்கையும், அன்பும், நெருக்கமும்; அதிகம். தனது பிரச்சனைளுக்கு அவளிடம் ஆலோசனை கேட்பான்.

டாக்டர் பட்டம் பெற்று சில ஆண்டுகள்; கொழும்பு பெரிய வைத்தியசாலையில் வேலை பார்த்த பின்னர் கொழும்புக்கு அருகே உள்ள அங்கோடை மனநோய் வைத்தியசாலையில் வேலை பார்த்து, மன நோய்களுக்கு சிகிசசை செய்த அனுபவம் பெற்று பின்னர் மேற்படிப்புக்காக லண்டன்; சென்றவர் சுந்தரம்;. அங்குதான் மனநோயினை பற்றி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ஆராச்சிசெய்யும் போது வேதியலில் ஆராச்சியாளரான பயொ கெமிஸ்ட் சில்வியா என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த பெண்ணைச் அறிமுகம் கிடைத்தது. இருவருடைய தொழில்களும்; மருத்துவம் சம்பந்தப்பட்டபடியால் அவர்களுக்கிடையேலான சிந்தனைகள் ஒரே அலை நீளத்தில்; இருந்தன. அவர்களின் உரையாடல்களும் ஒத்துப்போயிற்று. கருத்துக்கள் ஒன்றானால் இனத்துக்கும் , நிறத்துக்கும், மதத்துக்கும் இடமில்லை என்பார்கள். முடிவு, இருவரும் காதலித்து திருமணம் செய்த கொண்டனர்.

டாக்டர் சுந்தரத்தின் தாய் பாக்கியம் மகன் டாகடரான ஒரு வுருடத்தக்குள் கணவனை இழந்தவள். சுந்தரம் படித்து டாக்டராவதற்கு அவளும் ஒரு முக்கிய காரணம். பாக்கியம் திருமணமான புதுதில் ஞாபக சக்தி மிக்கவள். சோல்லும் ஒரு ஓரு விஷயத்தையம் விரைவில் மறக்கமாட்டாள். கணவன் டாகடர் சுப்பிரமணியத்தாரின் நோயாளிகளை பற்றிய முழு விபரங்களையும் நினைவில் வைத்திரு;தாள். அதோடு மட்டுமல்ல செஸ் விiயாட்டை தன் மகன் சுந்தரத்தக்கு சொல்லிக் கொடுத்ததும் அவளே. அதோடுமட்டுமல்ல ஜோதிடத்தை தன் பெரியப்பாவின் உதவியோடு கற்றதினால் பல கலியாணப்; பொருத்தங்களைப் பார்த்து திருமணங்களை பணம் வாங்காது செய்து வைத்தவள். இவ்வளவு நல்லது செய்தும் பாவம் பாக்கியம், இறுதி காலத்தில் அல்செயமார் என்ற மறதி வியாதியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டாள். இவ்வியாதியானது ஒரு கணனியின் சிபியூ என்ற மையச் நெயலாக்கப்ப பகுதி செயற்;படாமல் போவதைப் போன்றது.

சுந்;தரம் -சில்வாவியா திருமணம் செய்தபோது பாக்கியத்துக்கு என்ன நடக்கிறது என்று புரியாத மன நிலை. அவளுக்கு இருந்த அல்செய்மார் வியாதி காரணத்தால் கொழும்பில் உள்ள “அமைதி” என்ற முதியோர் கவனிப்பு இல்லமொன்றில் ஒரு நேர்சின் மேற்பார்வைக்குக்கீழ்; இருக்க சுந்தரம் தான் மேற்படிப்புக்கு கேம்பிரிட்ஜுக்கு போகமுன் ஒழுங்குகள் செய்திருந்தார். அதற்குத் தேவையான செலவையும் அவரே கவனித்துக் கொண்டார்.

சுந்தரத்தின் தாய் பாக்கியத்துக்க கணவனின் மறைவுக்கு பின் எழுபது வயதிலிருந்து டிமென்சியாவாக ஆரம்பித்து படிப்படியாக வளர்ந்து காலப்போக்கில் முற்றி அல்செய்மார் வியாதியாக மாறியது. தான் எதைச் செய்கிறோம் என்று தெரியாது அளவுக்கு மறதி வியாதியால் இறுதி காலத்தில் வாழ்ந்தாள். வயது வந்தவர்களுக்கு அனேகருக்கு தள்ளாத வயதில் அரளை வந்து விடும். பலருக்கு தங்கள் வாழ்க்கையில் நடந்தவை மறந்துவிடும். அவர்களுக்கே தெரியாது தாம் எதைப் பேசுகிறோம், செய்கிறோம் என்று. அவர்களது மூலைக்கும் நாவுக்கும் தொடர்பிருக்காது. அதனால் பேச்சு தடுமாறும். காரணமில்லாமல் பாக்கியம் பேசுவது பலருக்குப் புரியாது. எதையோ அர்த்தமில்லாது பேசுவாள். ஒரு காலத்தில் புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அவள் இவ்வியாதி வந்தபின்; புத்தகங்களையும் பேப்பர்களையும் கிழிப்பாள். இறுதி காலத்தில் தாயை பீடித்தது மூலை சம்பந்தப்பட்ட “அல்செய்மார்” நோய் என்று டாக்டர் சோமசுந்தரதுக்கு அறிநது கொள்ள வெகுகாலம் எடுக்கவில்லை. தன் தாயைப் போல் அல்செய்மார் நோயால் மனநிலை பாதிக்கப்பட்ட பல நோயாளிகளை அங்கோடை மனநோய் வைத்தியசாலையில் சந்தித்த அனுபவம் அவருக்கு இருந்தது.

பாக்கியம் தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மறந்தாள். தன் பெற்றோரினதும், கணவனது பெயர்களையும். தான் யார் என்பதையம், முற்றாக மறநது விட்டாள். எப்போதும் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் அலட்டிக் கொண்டே இருப்பாள். கிட்டத்துச் சொந்தக்காரர்களை கூட அடையாளம் காணமாட்டாள். அவள் என்ன சொல்லுகிறாள் என்று எவருக்கும் விளங்காது. மேசையில் எவருடைய பொருட்கள் இருந்தாலும் தன் அறைக்குள் எடுத்துக்கொண்டு போய்விடுவாள்.

ஒரு நாள் “அம்மா உங்கள் பெரியம்மா வந்திருக்கிறா பேசப்போறியளே ?” என்று மகன் சுந்தரம் கெட்டதுக்கு “ நான் ஏற்கனவே பேசிவிட்டேன். திரும்பவும் பேசத் தேவையியில்லை” என்றாள் பாக்கியம். அவள் சொன்னது தனது பிம்பத்தை கண்ணாடியில் பார்த்து கதைத்;ததை நினைத்தே . தான் கதைப்பதை பார்த்து வேறு ஒருத்தி தன்னோடு கதைப்பதாக நினைப்பாள். அவ்வளவுக்கு புத்தி தடுமாற்ற நிலை. எதைச் சொன்னாலும் கேட்கமாட்டாள், காரணம் மற்றவர்கள் சொல்வதுவளுக்கு புரியாததே. தான் சொல்வது தான் சரி என்ற பிடிவாதக் குணம். அவள் மேல் பலருக்கு அனுதாபம். அவளோடு பேசாமல் இருப்பதுதான் நல்லது என்று அவளை ஒதுக்கி வைத்தார்கள். மரணத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாள் பாக்கியம். . இறுதிகாலத்தில் தாயின் நிலை டாக்டர் சுந்தரத்தை வெகுவாக பாதித்துவிட்டது. அங்கோடை வைத்திய சாலையில் தான் சந்தித்த மன நோயாளிகள்தான் அவரது நினைவுக்கு வந்தார்கள்.

தற்போது அல்செயமார் வியாதிக்கு தற்காலிகமாக நோய் வளர விடாமல் தடுக்கும் மருந்துகள் இருந்தாலும் முற்றாக நோயினை நீக்க மருந்து இல்லை என்பதையும் அறிந்தார் சுந்தரம். தொற்று நோய்கள் அல்செய்மார் வியாதியின் வளர்ச்சியை துரிதப்படு;த்தலாம் என்பது அவர் ஆராச்சிக் கட்டுரைகள் மூலம் வாசித்தறிந்தார். டிமென்சியா வந்த ஆரம்பக்கட்டத்தில் தாயுக்கு வந்த பொக்களிப்பான் என்ற சின்னம்மையும, மீசில்ஸ் என்ற தட்டம்மையும் அவளின் உடலை வெகுவாகப் பாதித்தனால் அவளுக்கு ஆரம்பத்தில் இருந்த டிமென்சியாவானது அல்செய்மார் வியாதியாக மாறியிருக்கலாம் என அவர்; நினைத்தது சரி என்பதை தனது ஆராச்சியின் போது அவர் அறிந்த உண்மை. சின்னம்மை நோய்; முதியோருககு வந்து அவர்கள் சரிவர கவனிக்கப்படாவிட்டால் அவர்களது மூலையை அந்நோய் பாதிக்கும் என்பதையும் அவர் அறிவார்.

தாயின் மரணம்; டாக்டர் சுந்தரத்தின் மனதில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அல்செய்மார் நோயுக்கு முடிவு காண புது மாற்று வைத்திய முறையை கண்டு படிக்க வேண்டும் என்று தீரமானித்தார். இனியாவது அந்நோயினால் வயது வந்த காலத்தில் பலர் கஷ்டப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாhர். அந்த நோயைப்பற்றி பிற நாட்டு மூலை நோயியல் டாக்டரர்களின் ஆராச்சிக்கட்டுரைகள் பலதை வாசித்தார். அதற்கு ஒரு தீர்வு காணவேண்டும் என்ற ஆர்வம் அதிகமாயிற்று. அவர் அதிர்ஷடமோ எனவோ ஸ்டெம் செல் (ளுவநஅ ஊநடட) எனப்படும் முதல்நிலை உயிரணு பற்றி ஆராச்சி செய்ய ஸ்கொலர்சிப்பி;பில் கொம்பிரிடஜ் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரிக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் கிடைத்தது. அதையே அவரது தந்தை டாகடர் சுப்பரமணயத்தினதம்; தாய் பாக்கியத்தினதும் விருப்பம் கூட.

அவருடை ஆராச்சிக்கு பயொ கெமிஸ்ட் ஆராச்சியில் ஈடுபட்ட சில்வியா பெரும் உதவியாக இருந்தாள.; . மூலையில் ஏற்படும்; பிலேக்ஸ் என்ற தட்டை வீக்கங்கள் அல்செய்மார் வியாதிக்குக் காரணமாகலாம் என்றும், அனால் அல்செய்மார் ஒரு தொற்றுவியாதியல்ல என்பதையும் நியூரோன் (நேரசயழளெ)இ என்ற நரம்பணுக்கோளோடும். முதல் நிலை உயரணுக்களோடும் சம்பந்தப்பட்டது என்பதையும் அவரால் அறிய முடிந்தது. புதிய நரம்பணுக்களை பாதிக்கப்பட்ட நரம்பணுக்களுக்கு முதல்நிலை உயரணு சிகிச்சை மூலம் புதுப்பித்தால் அல்செய்மார் வியாதிக்கு தீர்வு காணலாம் என்ற முடிவுக்கு வந்தார். இதற்கு அல்செய்மார் வியாதியால் இறந்த ஒருவரின் மூலையை தன் ஆராச்சி;;க்குப் பாவித்தார்.

ஆராச்சியின் போது அல்செய்மார் நோய் உள்ள பதினைந்து நோயார்களுக்கு அவர்கள் குடுமடபத்தின் அனுமதியோடு புது முதல்நிலை உயரணுக்களை அவர்கள் மூலையில் மாற்றம் செய்து அதன் விளைவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார் டாக்டர் சுந்தரம்.

“சில்வியா எனது ஆராச்சி வெற்றியடையும் என்று நினைகிறாயா?” மனைவி சில்வியாவை ஒரு நாள்; சுந்தரம் கேட்டார்.

“எனக்கு உங்கள் ஆராச்சி நிட்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உண்டு. பொசிட்டிவ்வாக இருங்கள். உங்கள் தாயைக் குணம் படுத்தி அவர் உயிகை; காப்பாற்ற உங்களால் முடியாமல் போய்விட்டதே என்று கவலைப்படாதீர்கள். இனியாவது பலரை அல்செயமார் வியாதியின் பாதிப்பில் இருந்து காப்பாற்றமுடியும் என்பதை எதிர்பாருங்கள்.” என்றாள் சில்வியா.

அவர் ஸ்டெம் செல் மாற்று மருத்துவம் செய்த பதினைந்து நோயளிகளை ஆறுமாதங்களாக அவதானித்து வந்ததில் அவர்கள் எல்லோருக்கும் மறதி நோய் படிப்படியாக குறையத் தொடங்கியது. அவர் எதிர்பார்த்த விளைவைக் கொடுத்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது. தாங்கள் யார் என்று அடையாளம் காணக்கூடியதாக அவர்கள் இருப்பதைக் கண்டாhர். தனது ஆராச்சியானது வெற்றயடைவதறகான அறிகுறிகள் டாகடர் சுந்தரத்துக்கும்; அவர் மனைவி சில்வியாவுக்கும் தெரிந்தது.

காலப்போக்கில அமெரிக்காவில,; நியூயோர்க் நகரில் நடந்த மருத்துவர்கள் மகாநாட்டில் அல்செய்மார் வியாதியை முற்றாக நீக்குவதற்கான தனது ஆராச்சியின் முடிவை வெளிட்டார். தனது ஸ்டெம் செல்மாற்று சிகிச்சையால்;, தான் பரிசோதித்த பதினைந்து நோயாளிகளும் நூற்றுக்கு நூறு விகிதம் பயன் அடைந்தார்கள் என்ற புள்ளிவிபரத்தையும் சொன்னார. ஒரு வருடத்துக்குள் அவர்களுக்கு இருந்த வியாதியில் ஏற்பட்ட மாற்றத்தை மகாநாட்டுக்கு வந்திருந்தோருக்கு விளக்கினார். சுகம் பெற்றவர்களை மகாநாட்டில் அறிமுகப்படுத்தி அவர்களோடு பேச வைத்து அவர்களுக்கு இருந்த வியாதியின் முன்னேற்றத்தைக் காட்டினார்

பல நாட்டு ஊடகங்களில் அச்செய்திக்கு கொட்டை எழுத்துகளில் முக்கியத்துவம் கொடுத்தது “ அல்செய்மார் நோயை இல்லாமல் செய்ய புது சிகிச்சை கண்டு பிடிப்பு” என்ற தலையங்கத்தோடு சுநதரத்தின பெயரையும் குறிப்பிட்டு செய்தி வந்தது. சுந்தரம் மனதுக்குள் தன்தாய் பாக்கியத்துக்கும் தந்தைக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *