பேசும் மனித உருப்படிவம் (Talking Menninquin)

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 9,600 
 
 

மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். ஆனால் மோகன் பெண் பிள்ளைகள் விளையாடுவதைப் போல் பொம்மைகளோடு விiளாயாடுவதைக் கண்டு பலர் அவனைக் கேலி செய்தார்கள். பெற்றோருக்கு மோகன் ஒரே மகன் என்றபடியால் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். ஆதனால் அவன் எப்படி விளையாடினாலும் அவர்களுக்கு அதைப்பற்றி; கவலை இல்லை. அவன் கேட்டதை வாங்கிக் கொடுத்தார்கள். மோகன் படிப்பில் கவனம். தான படித்து மென் பொருள் பொறியியலனாக வரவேண்டும் என்பது அவன் ஆசை. அமெரிக்காவில் மைக்கிரோ சொப்;ட் ஸ்தாபனத்தில் மென் பொருள் பொறியியலானாக அதிக சம்பளத்தில் வேலை செய்யும் தாய் மாமனே இதற்குக் காரணம்.

பொம்மைகளுக்கு ஆடை அணிவித்து விளையாடும் பழக்கம் அவன் வளர்ந்தும் பெரியவனானாலும் அவனை விட்டு அப்பழக்கம் போகவில்லை.

அவனின் பொழுதுபோக்கு விண்டோ சொப்பிங் எனப்படும் கடைகளில் உள்ள சாளரத்தினூடாக விளம்பரத்துக்கு காட்சியாக வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து இரசிப்பது. ஓரு சேலைக் கடையில்இ அழகிய மெனன்குவின் என்று அழைக்கபபடும் பெண் உருவப் படிவத்துக்கு தினமும் காஞ்சிபுரம், தர்மபுரம் சில்க், திருபுவனம், சின்னாலம்பட்டு, பெனாரிஸ,; மணிபுரி சேலைகளை தினத்துக்குத்; தினம் மாற்றி அணிவித்து சாரளத்தினூடாக வாடிக்iகாயளர்களின பார்வையைக் கவர்ந்தார் “வள்ளி எம்போரியம்” என்ற பிரபல சேலைக் கடையின் சொந்தக்காரர சின்னச்சாமி செட்டியார்;. அவரது வணிக யுக்தியால் அவருக்கு சேலை வியாபாரம் ஓகோ என்று நடந்தது.

சாரளத்தினூடக பெண் மெனன்குவின்; உருவத்தைப் பார்த்து ரசித்த சில வாடிக்கையாளர்கள் அப்பொம்மை அணிந்திருக்கும் சேலை போன்று ஒன்று இருந்தால் தாருங்கள் என்று கடைக்குள் போய் கேட்பார்கள்.அநத அளவுக்கு அந்தப் வாய் பேசாத பெண் உருவப்படிவம் மக்களை கவர்ந்துவிட்டது.

பல கடைகளின் சாரளத்தினூடாக பெண் படிவங்களை பார்த்து இரசித்துபடி நடந்து கொண்டிருந்த மோகனுக்கு ஒரு பெண் மெனனகுவின் உருவப்படிவம் மிகவும் பிடித்துக் கொண்டது. தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று கனவு கண்டு அவன் மனதில் பதிந்த உருவத்தை அப்படியே அது ஒத்து இருந்ததே அதற்கு காரணம். ஆனால் ஒரு வித்தியாசம் அநத மெனனகுவின்னின் தலையில் மல்லிகைப் இருக்கவில்லை. கழுத்தில் நகை இருக்கவில்லை. அது கண்சிமிட்டவில்லை. பேசவில்லை. அதைப்பற்றி; மோகன் கவலைப்படவில்லை. அவனுக்கு உடலின தோற்றமும,; அழகிய முகமும், நி;ண்ட கணகள் , துடி இடை, மெல்லிய விரலகள் அதெல்லாம் அவன் கணட தன வருஙகால மனைவியைப் போலவே இருந்தது.

தினமும் மோகன் அக்கடைக்குப் பேர்ய் சாளரத்தினூடாக அப் பெண் படிவத்தை உற்று பார்த்து இரசித்தபடி பல நிமிடங்கள் நிற்பான். அதோடு பேசுவதாக நினைத்து தன் வாயுக்குள் முணமுணுப்பான். அது பேசாது. அதே நிலையில் அது அசையாது நின்றது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் தன் முணுமுணுப்பை அவன் நிறுத்துவதாக இல்லை.

மோகனின் விசித்திரமான நடத்தையைக் கடைவாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி கவனித்து விட்டான்.

“என்ன இவன் ஒருவன் தினமும் வந்து அந்தப் பொம்மையைப் பார்க்கிறான. தன் வாயுக்குள் ஏதோ முணுமுணுக்கிறான். ஒருவேலை பைத்தியக்காரனோ, அல்லது கடையைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போடுகிறானோ என்று நினைத்தான்; செக்கியூரிட்டி. ஒரு நாள் மோகன் அப்பெண் உருவப்படிவத்தைப பார்த்து இரசித்த படி நின்றபோது செக்கியூரிட்டி அவன் முதுகில் தட்டி, “ ஏய் உன்னைத்தான். ஏன் அப்படி தினமும் வந்து இந்தப் பொம்மையைப் விறைத்து பார்த்தபடி பல நிமிடங்கள் நிற்கிறாய். வாயுக்குள் முணுமுணுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா? வேறு வேலை உனக்கு இல்லையா? அது ஒரு வெறும் பொம்மை. உன்னோடு பேசாது. அசையாது” என்றான் செக்கியூரிட்டி.

“அது பரவாயில்லை. என் மனதில் நான் கற்பனையில் கண்ட என் வருங்கால மனைவியின் தோற்றத்தைப் போல் இருக்கிறது. அது தான் அதன் அழகை இரசிக்கிறேன்” என்றான் மோகன்.

அவன் சொன்ன பதிலைக் கேட்டுவிட்டு “ அத வெறும் பொம்மை அப்பா. அதோ பார் உன்னைப் பார்த்து கண் சிமிட்டக்கூட இல்லை“ என்றான் செக்கியூரிட்டி..

“ஏன் அதனால் பேசவோ கண் சிமிட்டவோ முடியாது? “

“நீ என்ன சொல்லுகிறாய். பொம்மை எப்படி பேசும்”? அதிசயத்தோடு செக்கியூரிட்டி கேட்டான்.

“நான் ஒரு மென்பொருள் பொறியியளாலன். ஆதனால் தான் சொல்லுகிறன. இநத பெண்ணைப் பேசவும் கண்சிமிட்டவும் வைக்க என்னால் முடியும் என்றான்”

“நீ என்ன விசர் கதை சொல்லுகிறாய்;? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை” செக்கியூரிட்டி; மூளை குளம்பி மோகனைக் கேட்டான்.

“உனக்கு விளங்கும்படி சொல்லப்போனால் நான் ஒரு கொம்பியூட்டர் சொபட்வெயர என்ஜினியர். மைக்கிரோ சொப்ட் ஆராச்சி ஆய்வகத்தில் வேலை செய்கிறேன். புதுப் புது கண்டுபிடிப்புகளுக்கு புரோகிறாம் எழுதுவது என் தொழில். தற்போது குரல் கேட்டு பதில சொல்லும் ; கருவிகளைப் பற்றி ஆராச்சி செய்கிறேன். இதை ஸ்பீச் ரெகக்னிஷன் செயல முறை என்பார்கள்.”

“அப்படி என்றால் என்ன.?

“உதாரணத்துக்கு நீ ஒரு கடிதம் எழுதும் போது முதலில என்ன செய்கிறாய்”?

“கடிதத்தை கொம்பியூட்டர் கீபோர்ட்டை பாவித்து டைப் செய்கிறேன்”

“உனக்கு டைப் அடிக்கத் தெரியாவிட்டால் என்ன செய்வாய்?”

“கொம்பியூட்டரைப் பாவிக்காமல் பேனாவைப் பாவித்து பேப்பர் ஒன்றை எடுத்து; கடிதத்தை எழுதுவேன்”

“உனக்கு எழுதவும் தெரியாவிட்டால் என்ன செய்வாய்.”?

செக்கியூரிட்டி விழித்தான்.

“உன் பிரச்சனையைத் தீர்க்க வழி உண்டு”

“என்ன வழி”

“அது தான் பேசும் குரலை எழுத்தாக மாற்றும் செயற்பாடு. அதாவது நீ எதை சொல்ல விரும்புகிறாயோ அதை உன் வாயால் சொன்னால் அது அதை எழுத்தாக மாற்றி உன் கடிதத்தை தாயார் செய்யும். சிலர் தங்களது செக்கரட்டரிக்கு கடிதத்தை டிக்டேட் செய்வார்கள். அதை அவள் சுருக்கெழுத்து மூலமாகவோ அல்லது நெரடியாகவோ டைப்செய்வாள். நான் சொன்ன செயல் முறையைப் பாவித்தால் செக்கரடடரி தேவையில்லை” என்றான் மோகன்.

“நீ சொல்வது இது சாத்தியமா?”

“ஏன் சாத்தியமில்லை. இப்பொது செய்கிறார்களே என்பது உனக்குத் தெரியாதா.”

“இல்லைஇ எனக்குத் தெரியாதே

“நான சொல்லவந்தது அதை விட ஒரு படி மேல். அதாவது நான் பேசினால் கொம்பியூட்டர எழுத்தாக மாற்றாமல் குரலாக மாற்றும். உதாரணத்துக்கு உன பெயர் என் என்று கேட்டால்இ என் பெயர் மல்லிகா என்று பதில் தரும். உன் வயது என்ன என்று கேட்டால் அதற்கு என் வயது பதினாறு என்று பதில் அளிக்கும். நீ உடுத்திருக்கும் சேலை எந்த ரகம் என்று கேட்டால், காஞ்சிபுரம் சில்க் என்று பதில் சொல்லும். விலை என்ன என்று கேட்டால் ஐயாயிரம் ரூபாய் என்று பதில் சொல்லும்.”

“அதுக்கு எப்படி விலை தெரியும்?” செக்கியூரிட்டி கேட்டான்.

“இது தெரியாதா உனக்கு. ஏற்கனவே சீலைக்கு ஏற்ற விலையை கடை சொந்தக்காரன் கொம்பியூட்டரில் பதிவு செய்திருப்பான். செய்யச் சொன்னதைச் செய்வது தான் கொம்பியூட்டரின் வேலை. அதைச் செயற் படுத்த வைப்பது புரோகிராமர். கொம்பியூட்டருக்கு சுயமாக சிந்திகத் தெரியாது” என்றான் மோகன்.

“நீ சரியான புத்திசாலி;. சரி வா உன்னை இந்த கடை முதலாளியிடம் அழைத்து செல்கிறேன். அவருக்குக நீ எனக்குச் சொன்னதைச் சொல்லி விளங்கப்படுத்து. அவருக்கு உன் திட்டம் பிடித்திருந்தால் நிட்சயம் ஏற்றுக்கொள்வார். அதன் பிறகு உன் கனவுக் கன்னியைப் பேசவைக்கலாம்.” என்றான் சிரித்தபடி காவல்காரன்.

******

செக்கியூரிட்டியோடு போய் மோகன் வள்ளி எம்போரியம் முதலாளி சின்னச்சாமி செட்டியாரைச் சந்தித்தான். செக்கியூரிட்டி நடந்த கதை முழுவதையும் முதலானிக்கு எடுத்தச் சொன்னான். அவர் சற்று நேரம் வாயில் விரல் வைத்து யோசித்தார். மோகன் கொடுத்த பிஸ்னஸ் கார்டை வாங்கிப் பார்த்தார்.

“தம்பி உன்னால் நீ சொல்வதுபோல் செய்து காட்ட முடியுமா? உண்மையில் நீ இதைச் செய்ய முடியுமென்றால் இது ஒரு புதுமையான வணிக யுக்தியாக அமையும். நான் எப்பவும் புதுமையை விரும்புகிறவன்” என்றார் செட்டியார்.

“ஐயா உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையாகவே ஒரு பெண்ணை, அந்தப் பெண் மெனன்குவின் இருக்கும் இடத்தில், சாரளத்தில் கண்காட்சியாக பல மணி நேரம் சற்றும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்க வைக்க நினைத்தால் அதுக்கு பலர் சம்மதிக்கமாட்டார்கள். அப்படி சம்மதித்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கவேண்டிவரும்;. மெனன்குவின் சொல்லப் போகும் சேலயின், விலையை நீங்களே தீர்மானித்து மெனன்குவின் அணியும் சேலைக்கு ஏற்ப பதிவு செய்யலாம். அதோடு சேலை பற்றிய விபரங்களையும் பதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் அனேகமாக என்ன கேள்விகள் கேட்பார்கள் என்பது உங்களுக்கத் தெரியும் தானே. அதற்கேற்ற பதில்களை தாயாரிப்போம். கடுமையான கேள்விக்குப் பொருத்தமான பதில் பதிவு செய்திருக்காவிட்டால் மெனன்குவின் “மன்னிக்கவும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று சொல்லிவிடும்”. மெனன்குவின் பேசும் போது கண்களை சிமிட்டவும், உதட்டை அசைக்கவும் செய்யலாம். பார்ப்பவர்களுக்கு உண்மையாகவே ஒரு பெண் பேசுவது போல இருக்கும்”, மோகன் விளக்கம் கொடுத்தான்.

“சரி மோகன் இதை செயல் படுத்திக்காட்ட எவ்வளவு காலம் எடுக்கும் என்று நினைக்கிறீர்” செட்டியார் கேட்டார்.

“உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் ஒருமாதத்துக்குள் செயற்படுத்திக் காட்டுவேன். ஆனால் ஒன்று…”

“ ஆனால் என்ன மோகன்? முன் பணம் ஏதும் உமக்குத் தேவையா?”

“ பணம் தேவையில்லை ஐயா. ஆனால் நகல் உரிமை எனப்படும் கொப்பிரைட்’ எனது”.

“அது நியாயமானதே. எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே பணம் தருவேன்” என்றரர் செட்டியார்

******

நாட்கள் சென்றன. அன்று மோகன் தான் உருவாக்கிய பேசும் மெனன்குவின் எப்படி செயலாற்றுகிறது என்பதைப் பார்க்க செட்டியாரின் “வள்ளி எம்போரியம்” கடைக்கு போயிருந்தான். அவ் மெனன்குவனின் பாதத்தில் “ நான் ஒரு பேசும் மடந்தை” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து அவனுக்கு மனதுக்குள் சதோஷம். சாளரத்தில உள்ள பேசும் மெனன்குவின்னின் இனிமையான குரலைக் கேட்க ஒரே கூட்டம்.

“இனி நான் தினமும் வந்து அதோடு பேசப்போகிறேன். என் காதலியின் குரலை தொடர்ந்து கேட்டு எனக்கு அலுப்பு தட்டிவிட்டது” என்றான் பேசும் மெனன்குவினை பார்த்து இரசித்த ஒரு இளைஞன் ஒருவன்;.

மோகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். மோகனைக் கண்ட செக்கியூரிட்டி உடனே அவனிடம் வந்து, அவன் முதுகில் தட்டி, “நீ சாதித்து விட்டாய் தம்பி” என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *