கடவுள் மீட்டிங் அறைக்குள் நுழைந்து, தனது குழு பணியாளர்களை வரவேற்று, பேசத் தொடங்கினார்.
“இது ஒரு கடுமையான முடிவு என்று எனக்கு புரிகிறது. உங்களில் பலர் டைனோசர்களின் பரிணாம வளர்ச்சியில் நெருக்கமாக ஈடுபட்டிருக்கிறீர்கள். அத்தனை டைனோசர்களையும் ஒரு சிறுகோள் தாக்குதலில் கொல்ல முடிவெடுத்தது உங்களை வெகுவாக பாதித்திருக்கும்.”
அவர் சற்று நிதானித்து, சோகமான முகங்களைப் பார்த்து, மறுபடி தொடர்ந்தார்.
“ஆனால் நம்முடைய விதிகள் தெளிவாக உள்ளன. ஒரு கிரகத்தில் எந்த ஒரு இனமும் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்தக் கூடாது. அப்படி செலுத்தினால், அவை அழியப்பட வேண்டும்.”
யாரும் எதுவும் சொல்லவில்லை.
அவருடைய முடிவு இறுதியானது என்று அவர்களுக்குத் தெரியும். ஒவ்வொருவராக அறையை விட்டு வெளியேறினர்.
கடவுள் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டார்:
இனி ஒருபோதும் இந்த முடிவை எடுக்க அவசியம் வராது என்று நினைக்கிறன்.