ஒரு மாபெரும் பயணம்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 26, 2023
பார்வையிட்டோர்: 4,622 
 
 

நாங்கள் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நூடுல்சை தன் சிறிய முள் கரண்டியினால் சுற்றிக் கொண்டிருந்த என் மகன் கேட்டான்.

“அப்பா, இந்த ஊரை விட்டு நீங்கள் என்னை எங்கேயும் கூட்டிச் செல்லவில்லை. ஊருக்கு வெளியே என்ன இருக்கிறது என்று பார்க்க ஆசையாக இருக்கிறது.”

“வெளியில் எதுவுமே இல்லை, மகனே.” என்றேன் நான்.

“அது எப்படி? எனக்கு புரியவில்லை.”

“உனக்கு கிட்டத்தட்ட ஐந்து வயது ஆகப் போகிறது. நீ உண்மையை அறிய வேண்டிய வயது தான்.” சொல்லிவிட்டு நான் என் மனைவியை பார்த்தேன். அவள் சரி என்பது போல தலையசைத்தாள்.

“மகனே, நீ ஊர் என்று அழைப்பது உண்மையில் ஒரு ஊரல்ல, விண்வெளியில் வேகமாகச் செல்லும் மாபெரும் விண்கலம். இங்கு அறுபது குடும்பங்கள் வாழ்கின்றன, அதில் நம் குடும்பமும் ஒன்று. நான் இந்த விண்கலத்தில் தான் பிறந்தேன், என் அப்பாவும் அப்படித்தான், நீயும் அப்படியே. நாளை உன் குழந்தைகளும் இங்கு தான்பிறப்பார்கள்.”

என் மகனின் குட்டிக் கண்கள் ஆச்சரித்தில் விரிந்தன. “நாம் எங்கே போய்க் கொண்டிருக்கிறோம்?”

“பல்லாயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கிரகங்களை நோக்கி. அங்கு சென்று காலனி அமைக்கப் போகிறோம். அங்கு போய்ச் சேர லட்சக்கணக்கான வருடங்கள் பிடிக்கும். இப்படி தலைமுறை தலைமுறையாக பிரயாணம் செய்வது தான் ஒரே வழி.”

பொள்ளாச்சியில் பிறந்து இன்ஜினீரிங் பட்டம் பெற்று தற்போது அமெரிக்காவில் வடக்கு கரோலினாவில் ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார். எழுத ஆரம்பித்தது கோவிட் சமயத்தில் ஒரு வாரம் வீட்டில் முடங்கிக் கிடந்த போது. முதலில் எழுதியது ஆங்கிலத்தில் தான்.  அமெரிக்காவில் குடியேறி இருபத்தைந்து வருடங்கள் எந்த தமிழ் வாசனையும் இல்லாத ஒருவரால் தமிழில் எப்படி எழுத முடியம்? சிறுகதைகள்.காம் தளத்தைப் பற்றி அறிந்த போது இவருக்கும் தமிழில் எழுத வேண்டும் என்ற ஆசை வந்தது. அப்போது இவருக்கு கை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *