ஆவிகள் உலகம்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: October 2, 2016
பார்வையிட்டோர்: 26,126 
 
 

மாரிமுத்து வாத்தியார் அமைதியானவர். பண்பு மிக்கவர். அரசு உயர் நிலைப் பள்ளியில் சென்ற வருடம் நல்லாசிரியர் விருது வாங்கி திருநெல்வேலி மாவட்ட கல்வியாளர்களால் போற்றப் பட்டவர்.

அவருக்கு வயது 47. இன்னமும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு திருமணம் செய்து கொள்ள ஆசைதான். ஆனால் வாத்தியாரின் தந்தை சுடலைமுத்து பெண் பார்க்கிறேன் பேர்வழி என்று அடிக்கடி சொதப்பியதால் ஒன்றும் கைகூடி வரவில்லை. சுடலைமுத்துவிற்கு தற்போது வயது 72.
சமீப காலங்களாகவே உடம்புக்கு முடியாமல் படுத்திருக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கல்விச் சுற்றுலா சென்றபோது அவர்கள் சென்ற பேருந்து ஒரு மலைச்சரிவில் உருண்டு கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டு, பதினெட்டு மாணவிகளும், இருபது மாணவர்களும் உயிரிழந்தனர். அதனால் மாரிமுத்து வாத்தியார் மிகுந்த மனவேதனையும் சோர்வும் அடைந்தார்.

இறந்த மாணவிகளில் காந்திமதி, கோமதி, முத்துப்பேச்சி, நீரஜா ஆகிய நால்வரும் இவரிடம் வீட்டிற்கு வந்து ட்யூஷன் படித்துக் கொண்டிருந்தவர்கள். இவர்களில் காந்திமதி ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டிரண்டு வருடங்கள் படித்துக் கொண்டிருந்ததால் அவளுக்கு வயது இருபதுக்கும் மேல் இருக்கும். தைரியம் அதிகம். வாத்தியாரை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்து உதட்டைக் கடிப்பாள். .

அன்று மாரிமுத்து வாத்தியார் தூக்கம் வராது மாடியில் தன்னுடைய படுக்கையில் புரண்டு கொண்டிருந்தார். கீழே அப்பா சுடலைமுத்து அவ்வப்போது பெரிதாக இருமிக் கொண்டிருந்தார். வாத்தியார்தான் கீழே சென்று வெந்நீர் போட்டு எடுத்து வந்து அவரை அருந்தச் செய்தார். சற்று இருமல் குறைந்தது.

மாடிப்படி ஏறி வரும்போது தன்னை எவரோ உரசியதுபோல் வாத்தியாருக்கு தோன்றியது. மனப் பிரமையாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டு தூங்க முயன்றார்.

இரவு ஒன்றரை மணி. கும்மிருட்டு.

படுத்துக் கொண்டிருந்த வாத்தியாரின் தலைமுடியை யாரோ பிடித்து இழுப்பதுபோல் தோன்ற, உடனே பயந்து எழுந்து லைட்டைப் போட்டு பார்த்தார். தலையணையை உதறினார். ஒன்றுமேயில்லை.

லைட்டை அணைத்துவிட்டு மறுபடியும் படுத்துக் கொண்டார்.

அடுத்த பத்து நிமிடம் கழித்து, தன் அருகே பெண்களின் பேச்சுக்குரல் கேட்க, வாத்தியார் அதட்டலாக, “எலே யாருல நீங்க?” என்றார்.

“சாரே…பயப்படாதீக நான்தான் காந்திமதி. என்கூட நீரஜா, முத்துப்பேச்சி, கோமதி வந்திருக்காவ.”

சந்தேகமேயில்லை காந்திமதிதான்.

வாத்தியார் பயத்தில் குழறலாக, “நீங்க எப்படி இந்த நேரத்துல இங்கன?” என்றார்.

“நாங்க ராத்திரிதான கும்மாளம் அடிப்போம்…! இப்ப ஆவியா இங்க வந்திருக்கோம். ஆனாக்க நீர் பயப்படவேண்டாம். ஆவியா இருக்கும்போது நாங்க ரொம்ப நல்லவங்க. பிசாசா மாறின பிறகுதான் எங்க குணமும் மாறும்.”

“ எ….என்னது பிசாசா மாறுவீங்களா? அது எப்பம்..?”

“அதுக்கு நாங்க இன்னமும் வயசுக்கு வரல.”

“வயசுக்கு வரலையா?”

“ஆமா நாங்க மனுஷியா இருந்தப்ப வயசுக்கு வந்தோம். செத்தபிறகு எல்லா மனிதர்களும் சில வருடங்களுக்கு ஆவியாத்தான் அலைவாங்க. அப்புறமா ஆண் ஆவிங்க பேயா மாறிருவாங்க…நாங்க பெண் ஜென்மங்க பிசாசா அலைவோம்.”

“அதெப்படி அவ்வளவு உறுதியா சொல்லுத?”

“பெண் என்றால் பேயும் இறங்கும்னு சொல்லுதாங்க இல்ல….அதனால பேய் என்றால் அது ஆண்.”

“செத்துப்போன நம்ம ஸ்கூல் ஆம்பள பசங்க எல்லாம் எங்கே?”

“விமலா, எஸ்தர் டீச்சர கணக்கு பண்ண போயிருப்பானுவ….யாருக்குத் தெரியும்?”

பேசிக்கிட்டு இருக்கையில், ஒரு கை அவரது கன்னத்தை வருடியது. காந்திமதியாகத்தான் இருக்க வேண்டும். இன்னொரு ஆவி அவரது இடுப்பைக் கிள்ளியது. மூன்றாவது ஆவி அவரது தொடைகளை அமுக்கி விட்டது.

“இனிமே நாம இப்படியே ஜாலியா இருக்கலாம். உமக்கு இன்னமும் கலியாணம் ஆகல…எங்களுக்கும் எதுவும் நடக்கல. தினசரி நாம இப்படி கொஞ்சிக்கிடலாம்.”

வாத்தியாரின் பதிலுக்கு காத்திராமல் காந்திமதி அவரை அணைத்துக் கொண்டாள்.

மாரிசாமி வாத்தியாருக்கும் இந்த நான்கு ஆவிகளுக்கும் தினசரி கொஞ்சல்களும், சில்மிஷங்களும் ரகசியமாக அரங்கேறி ஒரு தொடர்கதையாகிப் போனது. திருமணமாகாத வாத்தியாரும் ஆவிகளுடனான கிளுகிளுப்பில் மயங்கிக் கிடந்தார்.

அன்று சுடலைமுத்துவின் உடல் மிக மோசமாகி இறந்துவிட்டார்.

அடுத்த பதினைந்து நாட்களில் மாரிமுத்து வாத்தியாரின் முன்பு சுடலைமுத்து ஆவியாக பிரசன்னமாகி, “எல நீ ஆவிகளுடன் அடிக்கிற கூத்து நல்லா இல்ல. அவளுகளுக்கு இடுப்புக்குக் கீழ ஒண்ணும் இல்லல….காலா காலத்துல உனக்கு ஒரு கால்கட்டு போடாதது என் தப்பு தாம்ல. இப்பமும் ஒண்ணும் கெட்டுப் போகல. நம்ம தெரு மேற்க வடிவுன்னு ஒரு விதவைப்பெண் ஒரு நல்ல புருஷனுக்காக ஏங்குறால. என்ன அவ கொஞ்சம் தடாலடி பேர்வழி. நேர்ல போய் பேசி அவள நீ கட்டிக்க” என்றது.

“அதுசரிவே …இப்ப என்னச் சுத்தி இருக்கற நாலையும் நான் எப்படி விரட்டி விடறது?”

“ராத்திரி படுக்கறதுக்கு முன்னாடி, கட்டிலுக்கு அடில ஒரு விளக்குமாத்தையும், ஒரு ஜோடி செருப்பையும் போட்டு வையி…..அப்புறம் பாரு.”

மாரிமுத்து வாத்தியார் தினமும் அப்படியே செய்தார். என்ன ஆச்சர்யம் அன்றிலிருந்து அந்த நான்கு ஆவிகளும் வரவில்லை.

வாத்தியார் அடுத்த வாரமே வடிவைப் போய் பார்த்தார். வடிவு அழகிய வடிவில் மதர்ப்பாக இருந்தாள். அவளும் சம்மதிக்கவே இருவர் திருமணமும் சிறப்பாக நடந்தது.

அன்று அவர்களுக்கு முதலிரவு.

வாத்தியார் வடிவை அருகில் அழைத்து அவளின் இடுப்புக்கு கீழே உற்றுப் பார்த்தார். கால்கள் இருந்தன. சற்று நிம்மதியடைந்து அவளை ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டார்.

கட்டிலுக்கு அடியில் செருப்பும், விளக்குமாறும் இருந்ததைப் பார்த்த வடிவு, “இது என்னாத்துக்கு அசிங்கமா?” என்று முகம் சுளித்தாள்.

“ராத்திரி எனக்கு அடிக்கடி கனவு வரும்…இத போட்டு வச்சா கனவு வராது, காத்து கறுப்பு அண்டாது.”

“உம்ம ராத்திரில தூங்க விட்டாத்தான கனவு வரும்?” என்றவள் செருப்பையும், விளக்குமாற்றையும் தூக்கி வாசலில் கடாசிவிட்டு, தன் கைகளை தண்ணீரில் கழுவி, துண்டால் துடைத்துக் கொண்டாள்.

பிறகு வாத்தியாரை கட்டிலில் தள்ளி, விரக தாபத்துடன் கட்டியணைத்து சல்லாபத்தில் இறங்கினாள். வாத்தியாரும் கம்பங் காட்டில் காஞ்ச மாடு நுழைந்த மாதிரி வீரியத்துடன் சிலிர்ப்பிக் கொண்டார்.

அந்த நான்கு ஆவிகளும் அங்கு வந்து விட்டன. வாத்தியார் புதிதாக ஒருத்தியுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்ததைப் பார்த்து திகைத்தன. அவர்கள் வந்தது வாத்தியாருக்கும் புரிந்து விட்டது. செருப்பும், விளக்குமாறும் இல்லாதது அவைகளுக்கு வசதியாகப் போய்விட்டது. வாத்தியாரின் இயக்கங்களையே பார்த்துக் கொண்டிருந்தன.

காந்திமதி கிசுகிசுப்பாக “எட்டி நீரஜா…நம்ம வாத்திக்கு ஆனாலும் ரொம்ப நீளம்டி” என்று ஆரம்பிக்க, நீரஜா அப்பாவியாக, “ஆமா வாத்திக்கு வாய் நீளம்தான்” என்றாள்.

அப்போது அங்கு வந்துவிட்ட சுடலைமுத்து, “அடி செருப்பால… சோலியப் பாத்துக்கிட்டு போங்கடி ஆக்கங்கெட்ட கூவைகளா” என்று விரட்ட, காரியமே கண்ணாக மாரிமுத்து வாத்தியார் தன் மனைவியுடன் முயங்குதலில் மும்முரமாக இருந்தார்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “ஆவிகள் உலகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *