Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!

கதையாசிரியர் தொகுப்பு: ஹேமி கிருஷ்

8 கதைகள் கிடைத்துள்ளன.

மழை நண்பன்

 

  மழை எப்போது நிற்கும்?ப்ரியாவிற்கு சொல்ல முடியாத சங்கடம்.வாசலிலேயே நின்று வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.இந்த மழையில் எப்படி போவது?சத்யாவிடம் சொன்னால் கோபித்துக் கோள்வான். “நான் வரலையா?நீயெல்லாம் அவ்ளோதான்” என்பான். “பதினைந்து நாள் இம்ப்ளிமென்ட் ப்ரொக்ராம்.நான் பெங்களூர் வர்றேன் உன் அட்ரஸ் சொல்லு” ஒரு மாலைவேளை அலைபேசியில் அழைத்தான். “முதல்ல உன் ஆபிஸ் எங்கன்னு சொல்லு” “பெலந்தூர் ல இருக்கு” நான் ஒயிட் .’.பீல்ட்ல இருக்கேன் ரொம்ப தூரம் உன்னால அட்ரஸ் கண்டுபிடிக்கிறது கஷ்டம்..ஒரு காமன் ப்ளேஸ் ல


டேம்ரூஸும் டிசம்பர் மாதமும்!

 

  அதிகாலையில் ஜன்னல் திரையை விலக்கினேன்.பனிபடர்ந்த தோட்டத்தையும் ,பறவைகளின் சப்தங்களை கேட்கும்போதும் ,அந்த ரம்யமான பொழுது மிகவும் இனிமையாக இருந்தது.எனக்கு மிகவும் பிடித்த மாதம் இந்த டிசம்பர் மாதம்.ஏனோ டேம்ரூஸ் ஞாபகம் வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.இதே டிசம்பர் மாதத்தில்தான் தன் காதலை சொன்னான் டேம்ரூஸ். இள நிலை முடித்ததும் முது நிலை படிக்க விருப்பம்.ஆனால் அப்பா”என்னிடம் அவ்வளவு பணம் இல்லை.அடுத்த வருடம் சேர்த்து விடுகிறேன் என்றார்.ஒரு வருடம் சும்மா இருக்க பிடிக்கவிலை.எங்கள் ஊர்லே ஒரு பள்ளியில்


வசு சித்தியின் காதல்

 

  “என்னம்மா சொல்ற?ஏன் இந்த கல்யாணம் வேண்டாமாம்?” “பையன் எப்ப பாத்தாலும் வொர்க் ல இருக்கிறப்ப போன் பண்ணி மொக்கை போடறார்..சொன்னாலும் கேக்க மாட்டேங்கிறார்..எனக்கு பிடிக்கிலை, இந்த கல்யாணம் வேனாம்..நான் பண்ணிக்க மாட்டேன் ன்னு உன் தங்கச்சி அடம் பிடிக்கிறா.நாங்களும் எவ்வளவோ சமாதானம் செஞ்சு பார்த்தோம்.வேற மாப்பிள்ளை பாக்க சொல்றா…நீயே சொல்லு” “நிச்சயதார்த்தம் முடிஞ்சதும் இப்படி சொன்னா எப்படிமா?அவளுக்கு என்ன திமிரா?…நான் அவ கிட்ட பேசி பாக்கிறேன்” போனை வைத்தேன்.. அடுத்து தங்கைக்கு போன் போட்டேன்…விஷயம் கேட்டதும்