கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

325 கதைகள் கிடைத்துள்ளன.

இலட்சியமும் யதார்த்தமும்

 

 ஏதோ ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அங்கு குழுமியிருந்த அனைவரிலும், கதாநாயகன், நாயகி இருவர் உட்பட அனைவரையும் விட அந்த லைட்பாய் கவனத்தை கவர்ந்தான். சில நேரங்களில் நாயகியின் பார்வை அந்த பையனை நோக்கி செல்வதை கதாநாயகனாக நடிப்பவர் பொறாமையாக பார்த்தார். டைரக்டரை கூப்பிட்டு ஏதோ சொன்னார் அவர் அந்த பையனை கூப்பிட்டு ஏதோ சொல்ல அவன் சரிங்கசார் என்று தலையாட்டிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.கதாநாயகன் முகத்தில் இப்பொழுது பளிச்… ஒரு சில கதாநாயகர்கள்,


கடல் அலை

 

 இருள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையிலும் கடலையே வெறித்து பார்த்து உட்கார்ந்து கொண்டிருந்த வயதானவரை நேரமாகிவிட்டது என்று குழந்தைகளையும், ஒருசிலர் தங்களுடைய கணவன்மார்களையும் இழுத்துக் கொண்டு சென்றவர்கள் வியப்பாய் பார்த்துக்கொண்டு சென்றார்கள். ஒருசிலர் பாவம் என்ற தோரணையில் கூட பார்த்து சென்றிருக்கலாம். மனிதக் கூட்டங்கள் தன்னை அதிசயமாய் பார்த்து செல்வதையோ இல்லை பாவமாய் பார்த்து செலவதையோ கண்டு கொள்ளும் மனோநிலையில் பெரியவர் இல்லை. இப்பொழுது பெரியவர் இன்னும் வரக் காணோம் என்று பதட்டப்பட்டு தேடுவோர் யாருமில்லை. காணாமல் போய்விட்டார்


ஓய்வு என்பது ஆரம்பம்

 

 ராமபத்ரன் ஒரு கம்பெனியின் அதிகாரியாக இருந்தார். கம்பெனி கணக்கு விசயம் தன்கணக்கு விசயம், ஆகியவற்றிற்கு வங்கிக்கு செல்லும் போதெல்லாம் வாங்கசார் என்று அன்புடன் அழைத்து உரிமையோடு பழகும் நாராயணன், கடந்த ஒரு வருடங்களாக கண்டுகொள்வதே இல்லை.இதற்கும் முன்னர் போல் கம்பெனி விசயமாக போவதில்லை, தன்னுடைய சேமிப்பு கணக்கு விசயமாகத்தான் போகிறார். அப்படி போகும் போது நாராயணனை பார்த்தாலும் சின்ன சிரிப்புடன் சரி அவர் பாட்டுக்கு வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார். ராமபத்ரன் எப்பொழுதும் மரியாதையை எதிர்பார்ப்பவர் இல்லை என்றாலும்,


மனக்கவலை

 

 அலுவலகத்துக்கு போன பின்னால் தான் தெரிந்தது பாலகிருஷ்ணனுக்கு திடீரென்று “ஹார்ட்அட்டாக்” வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என்று. அப்பொழுதே நான்கைந்து பேர் ஒரு மணிநேர அனுமதி பெற்று போய் பார்த்துவிட்டு வந்துவிட்டார்கள். நான் போகவில்லை. போன உடன் பார்த்துவிட்டு வரும் நட்பு அல்ல எங்கள் நட்பு. அதனால் மாலை அங்கு சென்று பார்த்து விட்டு நிதானமாய் போகலாம் என்று முடிவு செய்து கொண்டேன். மாலை நாலு மணிக்கெல்லாம் அலுவலகத்தில் முன் அனுமதி பெற்று ஹாஸ்பிடலுக்கு சென்றேன். கண்டுபிடிப்பது ஒன்றும்


சைக்கிள்

 

 இந்த சைக்கிளைத்தான் எங்கேயாவது கொண்டு போய் போடுங்களேன், இருக்கற கொஞ்ச இடத்தையும் பிடுச்சுகிட்டு போகவர வழியில்லாமல். .மனைவியின் கத்தலால், பேப்பர் படித்துக் கொண்டிருந்த நான் என்னமோ ஏதோவென்று ஓடிவந்தேன். என்ன கமலா ஏன் இப்படி கத்தற? இப்ப சைக்கிள் என்ன பண்ணுச்சு? இந்த கேள்வியை கேட்டவுடன் ஆங்காரத்துடன் என்னை பார்த்தவள் இருக்கற இரண்டே முக்கால் செண்ட் வீட்டுல இதைய வேற அலங்காரத்துக்கு வாசலில நிக்க வச்சுக்கறீங்க. போக வர வழிய அடைச்சுகிட்டு, அதோடு விட்டிருந்தாலும் பரவாயில்லை. இங்க


பொறாமை

 

 கடந்த இரண்டு மூன்று நாட்களாக காரணமில்லாமல் அலுவலகத்தில் எனக்கு எதிரில் உட்கார்ந்திருக்கும் ராமசாமியின் மீது எரிச்சல்வந்தது. எதற்கு என்று காரணம் புரியவில்லை. நானும் யோசித்து யோசித்து அதனாலேயே எரிச்சல் அதிகமானதுதான் மிச்சம். இதற்கும் அவர் என்னிடம் எந்த விசயத்திற்கும் வந்ததில்லை. தானுண்டு தன் வேலை உண்டு என்று வந்து போய்க் கொண்டிருப்பவர். இது என்ன இப்படி காரணம் இல்லாமல் எரிச்சல்படுவது என்று நானே என்னை கடிந்து கொண்டேன். அவர் மீது பொறாமைபடுகிறேனோ? இதற்கும் அவர் என்னை கண்டால்


முதல் புத்தகம்

 

 நான் கொஞ்சம் கதைகள் எழுதியிருக்கிறேன், அதை புத்தகமா போடலாமுன்னு நினைக்கிறேன். தாராளமா போடலாம், எவ்வளவு காப்பி வேணுமின்னு நினைக்கிறீங்க? என்கிட்ட பணவசதி அவ்வளவு இல்லை. குறைஞ்சபட்சம் எவ்வளவு காப்பி குறைவான பட்ஜெட்டுல போடமுடியும். முந்நூறுலிருந்து எவ்வளவு வேணுமின்னாலும் போடலாம். எவ்வளவு ஆகும்? அவர் தொகையை சொன்னதும் மலைத்து போகிறான், அவ்வளவு ஆகுமா? ஆமாங்க, அதுக்கு மேலே காப்பி அதிகமாக அதிகமாக உங்களுக்கு தொகை குறையும். ஆனால் குறைந்த பட்சம் இத்தனை காப்பியில இருந்துதான் போடமுடியும். இவன் யோசனையில்


பக்கத்து வீட்டுக்காரன்

 

 இன்ஸ்பெக்டர் எதிரில் உட்கார்ந்திருப்பவர்களை உற்றுபார்த்தார். எதை வைத்து உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் சரியில்லை என்கிறீர்கள்? சார் எப்பவுமே அந்த ஆள் எங்களோட சுமுகமா இருந்ததில்லை. ஆனா அவங்க சம்சாரம் கொஞ்சம் நல்லா பழகுவாங்க. ஒருவாரமா அவங்களை பாக்கமுடியலை. அவங்க எங்கயாவது வெளியே போயிருக்கலாமில்லையா? அவங்க எந்த விசயமுன்னாலும் அக்கம் பக்கத்துல சொல்லுவாங்க. ஊருக்கு போறத பத்தி யாருகிட்டயும் சொல்லவேயில்லை. சரி அவசர விசயமா அவங்க வெளியூருக்கு போயிருக்க வாய்ப்பிருக்கில்லயா?. சரிங்க சார் அப்படி இருந்தாலும் இந்த ஆள்


பிணைக்கைதி

 

 மதிய நேர பயணம் மிகவும் சுகமாக இருந்தது. அதுவும் பொள்ளாச்சி பஸ் நிலையத்தின் எதிரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு பஸ்ஏறியவன் பஸ் அந்த மலைப்பகுதியில் வளைந்து வளைந்து செலவது மனசுக்கு ஊஞ்சல் ஆட்டுவது போல் உணர்த்த அப்படியே கண்ணயர்ந்துவிட்டேன். திடீரெனகண்டக்டர் “வண்டிஅஞ்சுநிமிசம்நிக்கும்” டீ சாப்பிடறவங்க சாப்பிட்டுட்டு வந்துடலாம் “அறிவிப்பை கேட்டு சட்டென விழிப்பு வர எங்கிருக்கிறோம்? என்றேதெரியாமல் இரண்டு நிமிடங்கள் நிதானித்தேன். பிறகுதான் பஸ் ஏறியதும், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கிவிட்டு அப்படியே சீட்டில்


கோழிகுழம்பு

 

 சே என்ன வாழ்க்கை,மனிதர்களிடையே வாழ்வது என்பது நமக்கு தொல்லைதான், நன்றியுள்ளவன் என்று சொல்லியே நம்மை வசப்படுத்தி வேலை வாங்கிக் கொள்கிறான், உடன் இருந்த நண்பனிடம் வாலை ஆட்டிக்கொண்டே புலம்பினேன். அப்பனே புலம்பாதே, நாமாவது கிராமத்தில் தெருவில் வசிக்கிறோம், நகரத்துக்குள் நம் இனத்தார்கள் மிகவும் கேவலப்பட்டு கிடக்கிறார்கள். பணக்காரர்கள் வீட்டில் வசிக்கும் ஒரு சிலர் மட்டுமே நன்றாக இருப்பதாக கேள்வி. தெருவில் வாழ்வதால் நம்மை சாதாரணமாக நினைத்து விடாதே. உண்மையில் மனிதனுக்கு நம்மை கண்டால் மிகவும் பயம். அதுவும்