கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

359 கதைகள் கிடைத்துள்ளன.

சமூகம்

 

 சுமார் நூறு பணியாளர்கள் பணி புரிந்து கொண்டிருந்த கம்பெனி அது. பத்து மணி இருக்கலாம். வேலை செய்து கொண்டிருந்த வேலப்பனை பர்சனல் டிபார்ட்மெண்டில் கூப்பிடுவதாக ஆள் வந்து சொல்லவும் பகீர் என்றது. எதற்கு கூப்பிடுகிறார்கள்? காலையில் உள்ளே நுழையும்போது காவலரிடம் சண்டை போட்டதாலா? அவனாகத்தான் நம்மை கிண்டலடித்தான், அதற்குத்தானே அவனிடம் வாக்குவாதம் செய்தோம்? போய் வத்தி வைத்து விட்டானா? கடவுளே! இனி அங்கு போனால் அவ்வளவுதான், நான்கைந்து பேரை பார்க்க சொல்வார்கள். இது ஒரு மாதிரியான பழி


பிள்ளையாருடன் நான்!

 

 வழக்கம்போல் வேகமாக எங்கள் தெரு மரத்தடி பிள்ளையாருக்கு கையை வீசி வணக்கம் போட்டு விட்டு பறப்பவன் இன்று நின்று நிதானமாய் “பிள்ளையாரப்பா நீதாப்பா காப்பத்தணும்”, மனதுக்குள் வேண்டிக்கொண்டு கன்னத்தில் போட்டு விட்டு பிள்ளையாரை பார்த்தேன். அலங்காரத்தில் இருந்தாலும் சரி சாதாரணமாய் இருந்தாலும் சரி முகத்தில் ஒரு புன்னகையை காட்டித்தான் உட்கார்ந்திருப்பார். இன்று ஏனோ கொஞ்சம் அதிகப்படியான் புன்சிரிப்பை காட்டுவது போல் எனக்கு தோன்றீயது. என்ன பிள்ளையாருக்கு அலங்காரம் அதிகமா இருக்கு, மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். சட்டென்று பிள்ளையார்


என்னை நானே அறியாமல்

 

 நல்ல இருள்…வேகம்…வேகம், என் இரு சக்கர வாகனத்தின் வேகம் என்னை அந்தரத்தில் பறக்கவைப்பது போல் இருந்தது.தலைக்கவசமும் போடாமல் இருந்ததால் தலைமுடிகள் தறி கெட்டு பறந்தது, அப்படியே ஒரு கையால் தலையை அந்த வேகத்திலேயே அழுத்தி விட்டாலும் காற்றை எதிர்த்து எழுந்து பேயாட்டம் ஆடின. சுகமான சந்தோசமாய் இருந்தது. பாதை இருளாய் இருந்தாலும் வண்டிகளின் முன் வெளிச்சங்கள் அந்த பாதை முழுவதும் தொடர் மின்னலாய் மின்னிக்கொண்டே இருந்தன. நேரம் எவ்வளவு இருக்கும்? தெரியவில்லை, பனிரெண்டுக்கு மேல் இருக்கலாம். இன்னும்


இடையில் வந்த குழப்பம்

 

 காட்சி-1 நண்பா தயவு செய்து எனக்கு எதிரா நிக்கறவனுக்கு சப்போர்ட் பண்ணாத ! அதெப்படி, அவனால எனக்கு காரியம் ஆக வேண்டியிருக்கே அப்ப நம்ம நட்புக்கு மரியாதை தரமாட்டே? நட்பு வேறே, பிசினஸ் வேறே, நான் அவன் கூட உறவாடறது என் பிசினசுக்குத்தான் அப்ப நீ அவனுக்கு சப்போர்ட் மட்டும் பண்ணு. பிரச்சாரம் பண்ணாதே நான் இந்த ஊர்ல பிரபலமான பெரிய மனுசன், அதை அவன் பயன்படுத்த நினைக்கிறான். காட்சி-2 இவனெல்லாம் ஒரு நண்பன் ! என்ன


அப்பாவின் கணிப்பு

 

 உங்க அப்பா வந்திருக்காரு ! முகத்தை கடு கடுவென வைத்தவாறு ராமனாதனிடம் சொல்லிக்கொண்டிருந்தாள் பார்கவி, அப்பொழுதுதான் குளித்து முடித்து துண்டை கட்டிக்கொண்டு வெளியே வந்திருந்தார். ராமனாதனுக்கும் எரிச்சலாய் வந்தது, என்ன மனுசன், அப்படி என்ன பணத்தேவை இவருக்கு வந்து விடுகிறது. அம்மாவும், இவரும்தான், வீடு சிறியதாய் இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் போதும். சுற்று வட்டாரத்தில் பெயர் பெற்ற வைதீகர், மாதம் இரண்டு மூன்று இடங்களுக்கு ஹோமம் செய்ய பூஜை புனஸ்காரம் செய்ய யாராவது கூப்பிடுவார்கள். அவர்கள் கொடுக்கும்


இடப்பெயர்ச்சி

 

 மேற்கு மலை தொடரில் அந்த மலை பிரதேசத்தில் சூரியனின் கதிர் வீச்சு ஓய்ந்து போய் தன் வீச்சை சாய்த்து வீசிக்கொண்டிருந்தான்.அனேகமாக மணி மாலை நான்கு மணிக்கு மேல் இருக்கலாம். வாகன புகைகளோ, அல்லது அவைகளின் ஒலிகளோ எதுவுமே கேட்காத அந்த இடம் பார்ப்பதற்கு ரம்யமாய் இருந்தாலும் புதிதாய் வருபவர்களுக்கு அச்சத்தை தரக்கூடியதாகவே இருந்தது அந்த இடம். அந்த இடத்தில் ஆரம்பித்து அடர்ந்த காடுகளாய் உள்ளே செல்லும் காடு மலை உச்சி வரை பரந்து, உயரமான மரங்களால் நிறைந்து


கடைவாய் பல்

 

 குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்தில் உள் புறத்தில் உட்கார்ந்திருப்பவர்கள் அமைதியாக திரையை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.திரையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த மேடையில் “மைக்” அருகில் நின்று கொண்டு ஒரு இளைஞன் அந்த திரையில் நடமாடிக்கொண்டிருந்த “என்னை” பற்றி விளக்கி கொண்டிருந்தான். இந்த திரையில் காண்பிக்கப்படும் நபர் நடுத்தர மக்களை சேர்ந்த ஒருவர் இவரின் முகத்தை மட்டும் மறைத்துள்ளேன். இதுவரை ஒரு “மைக்ரோ போனை” வெளியில் எங்கு வைத்தாலும், அவைகள் நமக்கு “ஒலியிலோ”, அல்லது “ஒளி வடிவத்திலோ” வேறொரு இடத்திலிருந்து பார்க்க முடியும். இந்த


சொத்தா? உயிரா?

 

 “பணம் சம்பாதிக்கறதுக்கு துப்பில்லை” சண்டை போட்டு விட்டு வெளியூரில் இருக்கும் அம்மா வீட்டிற்கு போயிருந்த மனைவி பத்து நிமிடத்தில் பேருந்தில் வந்து இறங்கப்போகிறாள். அவளை கூட்டி போவதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தான் தியாகு. அவனும்தான் என்ன செய்வான் “சாண் ஏறினால் முழம் சறுக்குது” என்கிற கதைதான். மில்லுக்கு வேலைக்கு போய் சம்பாதித்து வண்டி எப்படியோ ஓடிக்கொண்டிருக்கிறது.அவள் அம்மா வீட்டிற்கு போயிருப்பது கூட கொஞ்சம் பணம் மாமனாரிடம் கடன் கேட்பதற்குத்தான்..கவலையுடன் பேருந்துக்காக காத்திருந்தான் தியாகு ! நல்லா பார்த்துக்குங்க


எதிர்பார்ப்பு

 

 “டேய் மாப்ளே நீ எங்கேயோ போகப்போறடா ! செல்வாவின் தோளைப்பிடித்து சொன்ன ஹரி போதையில் இருந்தான். நடக்கக்கூடிய நிலையில் இல்லை.நிற்பதற்கே செல்வாவின் தோளைப்பிடித்தே நிற்க வேண்டியிருந்தது. அவன் தோளை தட்டி விட நினைத்த செல்வா பாவம் கீழே விழுந்து விடுவான் என்ற எண்ணத்தில் சரி சரி ரூமுக்கு வா என்று அவனின் இடுப்பில் கை கொடுத்து இழுத்தவாறே சென்றான். உள்ளுக்குள் அவன் மீது எரிச்சல் வந்தது. காலையில் செலவுக்கு ஐம்பது ரூபாய் கேட்டான் சுத்தமாக என்னிடம் பணமில்லை


தனிமை

 

 கச கச..வென்ற மக்களும்,வாகனங்களும் சென்று கொண்டிருக்கும் பாதையை சிரமப்பட்டு கடந்து வரும்போது அப்படியே அமைதியாக காட்சியளிக்கும், பெரிய பெரிய பங்களாக்களாக அமைந்துள்ள இப்பகுதியை கடக்கும்போது, நம் மனம் “வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்” என்று மனதில் கண்டிப்பாய் தோன்றும். இதில் அதோ இரண்டாவது வரிசையில் நான்காவதாக இருக்கும் அந்த பங்களாவில் ! தலை சுற்றுகிறது, மயக்கம் வருவது போல இருக்கிறது. வயதானாலே எல்லா தொந்தரவுகளும் வந்து விடுகிறது, மனதுக்குள் சிரிப்பு வந்தது. வயசாயிடுச்சுன்னு சொன்னா அவ்வளவுதான் வீட்டுக்காரருக்கு அப்படி