கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

339 கதைகள் கிடைத்துள்ளன.

கடத்தல்

 

 இரவு பத்து மணி இருக்கும், கடைசி வேலைக்காரனும் விடைபெற்று சென்று விட்டான், வாசலில் ஒரு கூர்க்கா மட்டுமே நின்று கொண்டிருந்தான், பங்களாவில் புகழ் பெற்றஅறிவியல் விஞ்ஞானி மாதவன் தூங்குவதற்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தார். அப்பொழுது மணிஏறக்குறைய பதினொன்று இருக்கலாம், போன் மணி அடித்தது, அதை எடுத்தவுடன் சார்.. நான் தற்கொலை பண்ணிக்கொள்ளப்போகிறேன்..என்று விசும்பும் ஒரு பெண் குரல்…சிறிது பதட்டமானார் மாதவன் ஹலோ.. கொஞ்சம் அவசரப்படாதீர்கள், நீங்கள் யார் என்று சொல்லுங்கள், நான் சியாமளா..உங்களுடைய மாணவி..சியாமளா..சியாமளா..கொஞ்சம் பொறு அவசரப்படாதே, நீ


முடிவல்ல ஆரம்பம்

 

 “கை ரேகை சொல்கிறது” அதை நான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் ஜோசியக்காரர். தனபாலுக்கு அப்படி ஒன்றும் ஜோசியத்தில் நம்பிக்கையில்லை, நண்பன் பாலுவின் வற்புறுத்தலுக்காக வந்துள்ளான். வந்த இடத்தில் பாலுவின் கையை மட்டும் பார்த்துவிட்டு கிளம்பியிருந்தால் பரவாயில்லை! பாலுதான் இவர் கையையும் பார்த்து சொல்லுங்கள் என்று இவன் கையை பிடித்து நீட்டினான்.இவனும் நம்பிக்கையில்லாமல் ஜோசியரிடம் கையை நீட்டினான். உங்களுடைய வாழ்க்கை தனிக்கட்டையாகத்தான் இருக்கும் என்று ஜோசியக்காரர் சொன்னவுடன் பார்த்தாயா எவ்வளவு கரெக்டாக சொல்லுகிறார் என்று கண்களாலே ஜாடை காண்பித்தான்


வெற்றி பெற்று தோற்றவன்

 

 இந்த கதை நடைபெற்ற காலம் 1975 லிருந்து 1985க்குள் நாயர் கடையில் கூட்டம் அலை மோதியது, அவர் கடையில் காலையில் போடும் போண்டா, வடை,பஜ்ஜி, போன்றவகைகளை வாங்க போட்டா போட்டி இருக்கும். அதே போல் நாயர் டீ ஆற்றும் அழகே தனி! எத்தனை பேர் வந்தாலும் ஒரே மாதி¡¢ முகத்தை வைத்துக்கொண்டு (மகிழ்ச்சியாக இருக்கிறாரா கவலையாக இருக்கிறாரா என கண்டே பிடிக்க முடியாது) அன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இரண்டாவதாக டீ குடிக்க ஆசைப்பட்டு நாயரே கொஞ்சம் டிகாசன்


உழைப்பு

 

 “அம்மாவ்” குரல் கேட்டு வெளியே எட்டிப்பார்த்தேன், வெளியே எட்டிப்பார்த்தேன், அம்மா இல்லெங்களா?தலையில் காய்கறி கூடையுடன் ஒரு பெண், உள்ளே எட்டிப்பார்த்து மனைவிக்கு குரல் கொடுத்தேன், சமையலறையில் இருந்த என் மனைவி என் குரல் கேட்டு வெளியே வந்தாள், இந்தப்பெண்ணை பார்த்தவுடன் முனியம்மா இன்னைக்கு காய் இருக்கே என்றவள் இவள் முகம் வாடுவதைப்பார்த்து சரி சரி இறக்கு என்று தலையிலிருந்த காய்கறிக்கூடையை இறக்க ஒரு கை கொடுத்தாள். ஸ்..அப்பாடி என தன்னுடைய புடவைத்தலைப்பை விசிறி போல் விசிறிக்க்கொண்டு அம்மா


நடத்துனர்

 

 பஸ்ஸுக்காக நீண்ட நேரம் காத்துக்கொண்டிருந்தேன். இந்த அவினாசி சாலையில் நிறைய பஸ்கள் வரும், ஆனால் எதுவுமே நாம் எதிர் பார்க்கும் நேரம் வராது. பொதுவாக காலை வேலைக்கு போகும் நேரம் 8மணி முதல் 9மணி வரையிலும் வேலைமுடிந்து போகும் மாலை 6 மணி முதல் 8 மணி வரையிலும் கண்டிப்பாக பஸ்ஸை குறித்த நேரத்தில் எதிர்பார்க்க முடியாது.அப்படியே குறித்த நேரத்தில் வந்தாலும் கண்டிப்பாக எங்கள் நிறுத்தத்தில் நிற்காது. இது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் இரவு ஏழு


கல்யாணம்

 

 ராம் காஞ்சனாவின் கையைப்பிடித்துக்கொண்டு கண்களில் அன்பு மிளிர “காஞ்சனா” நீ ஏன் என்னை புரிந்துகொள்ள மறுக்கிறாய்? அவளின் குனிந்த தலையை நிமிர்த்தி அவள் கண்களை கூர்ந்து பார்த்து என்ன சொல்ல நினைக்கின்றன உன் கண்கள் தயவு செய்து சொல்லிவிடு மயக்கத்துடன் சொன்னான், நிமிர்த்திய காஞ்சனாவின் கண்கள் கலங்கியிருந்தன “ப்ளீஸ்” நான் திருமணம் செய்யகூடிய நிலையில் இப்பொழுது இல்லை நான்….நான்.. கேவினாள்.. “கட்” டைரக்டர் சங்கர் கத்தினான் என்னம்மா நீ இந்த வசனத்த எமோசனலா சொல்லனும், இதோட ஏழு


இறைவனின் முடிச்சு

 

 “இந்த லோகத்திலே இறைவன் சந்தோசத்தையும் கொடுப்பான், அதன் பின்னால் துக்கத்தையும் கொடுப்பான்.” அதுபோலவே இன்றைக்கு சங்கரின் நிலைமையும் காணப்பட்டது, அவனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நர்ஸ் சொன்னவுடன் அவன் மனது எல்லையில்லா சந்தோசத்துடன் தன் மனைவியை பார்க்கச்சென்றான், அங்கே அவன் மனைவி புவனாவின் அருகில் ரோஜாவைப்போல அழகான குழந்தையை பார்த்தவன் மனதில் ஆயிரம் மத்தாப்புக்கள் வெடித்தது போல் இருந்தது, ஆனால் அவன் பார்வை குழந்தையின் கால்களை பார்த்தவுடன் கலக்கம் ஏற்பட்டு,அவன் சந்தோசம் அனைத்தும் வடிந்துவிட்டன.வலது


புனிதன்

 

 ஏசி அறை! வெயிட்டிங்க் ஹாலில் நண்பர்கள் பெருமாளும், சரவணனும், தொழிலதிபர் சிவக்கொழுந்தை காண காத்திருந்தனர்.இருவருக்கும், ஏறக்குறைய வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும், செகரட்டரி இவர்களை இன்னும் ஐந்து நிமிடத்தில் கூப்பிடுவதாக சொல்லியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் இந்த அறையின் அலங்காரங்களும், தோரணையும் பெரும் பிரமிப்பை உண்டாக்கியிருந்தன. மெல்லிய நடுக்கம் கூட உண்டாயிற்று! இங்கிருக்கும் சூழ்நிலையில், நாம் வந்த காரியம் நடக்குமா? இருவருக்கும் அதுவே யோசனையாக் இருந்தது. செகரட்டரி உள்ளே அழைத்தார். வெளியில் இருந்ததை விட உள் அறை மிகபிரமாதமாக


சோலையின் சுயநல காதல்

 

 அரசு மருத்துவக்கல்லூரி! கல்லூரி விடுதி அறையில் சோலை தன் காதலியின் வீட்டாரைப்பற்றி கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக்கொண்டிருக்கிறான். அவன் நண்பன் அன்வர் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறான், மூன்றாவது ஆண்டு தேர்வுகள் முடிந்த நிலையில் சோலயிடம் ஊருக்கு போகவில்லையா என்று கேட்டதற்குத்தான் இந்த கோபம், வெளியே மாணவர்கள் மூட்டை முடிச்சுகளை கட்டி ஊருக்கு கிளம்புவதற்கு தயாராகிக்கொண்டிருக்கின்றனர்.அன்வர் இவனை விட்டுச்செல்ல தயங்கினான், நீ என்ன செய்யப்போகிறாய்? இந்த விடுமுறையை இங்கேயே கழித்துவிட விரும்புகிறாயா? ஆம் நீ வேண்டுமானால் உன் ஊருக்கு சென்று வா..


ராம சுப்புவின் சமாளிப்பு

 

 வழக்கம் போல ராம சுப்பு ஒன்பது மணி அலுவலகத்துக்கு,பத்து நிமிடம் தாமதமாக வந்தான். அலுவலகத்துக்குள் நுழைந்ததும், அலுவலகம் அமைதியாக இருந்தது, வள வள வென பேசும் ஆபிஸ் பாய் பாண்டி கூட அமைதியாய் இருந்தான்,ராம சுப்பு பாண்டி முன்னால் வைத்திருக்கும் அட்டென்டஸ் ரிஜிஸ்டரை தேடினான், பாண்டி.. சார் ரிஜிஸ்டர் மானேஜர் ரூமுக்கு போயிடுச்சு,மானேஜர் உள்ளேதான் இருக்கறாரு. ஆடுத்து நடக்க இருக்கும் நாடகத்தை பார்ப்பதற்கு தயாரனவன் போல் முகத்தை வைத்திருந்தான். ராம சுப்புவுக்கு கால்கள் வெடவெடத்தன, எப்பொழுதும் 9.30க்குத்தான்,