கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

339 கதைகள் கிடைத்துள்ளன.

ராசுக்குட்டியின் கதை

 

 நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு பதினைந்து வருடங்கள் முன்பு அந்த ஊரின் நிலச்சுவாந்தாரர் திருவாளர் குப்பண்ணன் அவர்களுக்கும் திருமதி மாரியம்மாள் அவர்களுக்கும் ஒரே மகனாய் அவதாரம் எடுத்தார் ராசுக்குட்டி, ஏகப்பட்ட சொத்துக்களுக்கு வாரிசாக ராசுக்குட்டி பிறந்ததற்கு அவர்கள் வீட்டில் ஒரே கொண்டாட்டம். சும்மாவா பின்னே !, பதினைந்து ஏக்கரா தோட்டம்,தென்னந்தோப்பு,வயல், இத்தனைக்கும் எதிர்காலத்தில் சொந்தக்காரனாக போகும் ராசுக்குட்டிக்கு வீட்டில் ஒரே செல்லம்தான். சுதந்திரம் வந்தபோது ஓரளவு விவரம் வந்துவிட்ட ராசுக்குட்டிக்கு அதனை அனுபவிக்கும் ஆற்றல் 1960க்கும் மேல்


பேராசை சொந்தங்களும் கை கொடுத்த நண்பர்களும்

 

 மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள், உங்கள் கணவன் இறந்துவிட்டார் என்று. இனி கணவன் உடலை எடுத்துச்செல்ல வேண்டும். கையில் இருப்பதோ இருபத்தி எட்டு ரூபாயும் கொஞ்சம் சில்லறையும். அந்த வேதனையான கட்டத்திலும் சி¡¢ப்பு வந்தது வந்தனாவுக்கு மாதம் இருபதாயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசாங்க ஊழியைக்கு இறந்த கணவனை வீட்டுக்கு எடுத்துச் செல்லக்கூட வசதியில்லை.கைபேசியை பார்த்தாள்,”சுத்தமாக கணக்கில் இல்லை”எங்காவது தொலைபேசி வசதி இருக்குமா என தேடினாள். தொலைபேசியை எடுத்த முஸ்தபாவுக்கு பெண்ணின் விசும்பல் மட்டுமே கேட்டது. ஒரு நிமிடம் அதை


எழுத்தாளன் வியாபாரி ஆகிறான்

 

 சுரேஷ் இப்பொழுது வலைதள வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளராகிவிட்டான்.அவனது கதைகளும் வலைதளத்தில் அடிக்கடி வெளியாகிக்கொண்டிருக்கின்றன. ஆனாலும் அவனுக்கு ஒரு எதிர்ப்பார்ப்பு தோன்றியது, கணினி உபயோகிப்பவர்கள் மற்றும் கை பேசி வைத்திருப்போரும் இவனது கதைகளை வாசிப்பது இவனுக்கு பெருமைதான் என்றாலும், அச்சில் வந்தாலும் நன்றாக இருக்குமே. என்று நினைத்தான்.அதற்காக பத்திரிக்கைகளும் இவனது கதைகளை வாங்க போட்டி போட்டுக்கொண்டிருக்கவில்லை,அப்படியே ஒரு பத்திரிக்கையில் வந்தாலும் இவனாக அந்த பத்திரிக்கையை கையில் வைத்துக்கொண்டு அந்த பத்திரிக்கையை காண்பித்து என் கதை வந்துள்ளது என்று


எழுத்தாளர் சங்கர நாராயணன் எழுதிய துப்பறியும் கதை

 

 எழுத்தாளர் சங்கர நாராயணனுக்கு அவரது எழுத்து திறமையின் மேல் சந்தேகம் வந்து விட்டது. அன்பு மனைவியின் தங்கை சுமதி ஆசையாய் அவரிடம் ஒரு துப்பறியும் கதை எழுதிக்கொடுங்கள் என்று கேட்டுவிட்டாள், அதற்காக மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார். கதைதான் வரமாட்டேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.மூளையை போட்டு கசக்கிக்கொண்டிருக்கிறார்.காதல் கதை எழுதச்சொல்லியிருந்தால் இந் நேரம் வர்ணனையிலேயே வடித்துக்கொடுத்திருப்பார், துப்பறியும் கதை என்பதால் கற்பனை கொஞ்சம் சண்டித்தனம் செய்கிறது. சுமதியே அவருக்கு ஒரு யோசனையும் கொடுத்தாள். அவரது மருமகன் அதாவது அக்காவின்


நிச்சயித்தது ஒன்று நடந்தது ஒன்று

 

 காலையில் கண் விழித்து கதவைத்திறந்து வெளியே வந்த “செல்வத்தின்” முகத்தில் “பனி” வந்து மோதியது.அதை மெல்ல துடைத்துக் கொண்டவன் மனது எல்லையில்லா இன்பத்துக்கு சென்றது. இப்படிப்பட்ட இடத்திற்கு தனக்கு பணி மாற்றல் தந்ததற்கு இறைவனுக்கு நன்றி சொன்னான். இன்னும் கொஞ்சம் வெளியே நடந்து வீட்டை ஒட்டி செல்லும் பாதைக்கு வந்தவன் வளைந்து, வளைந்து செல்லும் பாதையும். எதிரில் வருபவர் கூட தெரியாத அந்த உறை பனியும்,கண்ணுக்கு எட்டிய மலை முகடுகளும் அவனை இன்ப மயக்கத்திற்கு கொண்டு சென்று


வாசம் இழந்த மலர்

 

 அன்று என் கையைப்பிடித்து என்ன அழகான கைகள் உனக்கு என்று சொன்ன நீங்களா, என் கையைப்பிடித்து இழுத்து கீழே தள்ளினீர்கள், விழுந்து தலையில் அடிபட்டு மயங்கி கிடந்த என்னை சிறிதும் லட்சியம் செய்யாமல் வேகமாக சென்றுவிட்டீர்களே, கொஞ்சம் கூட படிப்பறிவு இல்லாமல் கிராமத்தில் இருந்து உங்களை நம்பி வந்த எனக்கு நீங்கள் கொடுத்த தண்டனை மிக பயங்கரமல்லவா? உங்களுடன் இருபது வருடங்கள் வாழ்ந்து நீங்களே தெய்வம் என நினைத்துக்கொண்டிருக்கும் எனக்கு இப்பேர்ப்பட்ட தண்டனை தேவையா? அதன் பின்


சங்கமேஸ்வரியின் லட்சியம்

 

 அப்பா எனக்கு இந்த கல்யாணம் வேணாம்ப்பா ! சொன்ன மகளின் தலையை தடவி ஏன் சாமி” இப்படி சொல்ற,மனதில் வந்த ஏமாற்றம் தெரியாமல் மகளிடம் அன்புடன் கேட்டான் அண்ணாமலை, அப்பா, அம்மாவும் இல்ல, நீ மட்டும் தனியா இருக்கற, இது வரைக்கும் நான் இருந்ததனாலே நீ நிம்மதியா இருந்தே, இப்ப நான் உன்னைய விட்டுட்டு போயிட்டன்னா அப்புறம் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவ, மகளின் தலையை மெல்ல தட்டி ஏம்மா நாம என்ன பொ¢ய பங்களாவிலயா இருக்கோம், இந்த


புரிந்துகொண்டவன் பிழை

 

 முதலிலேயே சொல்லி விடுகிறோம், இந்த கதை ஒரு அறுபது எழுபது வருடங்களுக்கு முன்னர் நடந்தது.அது ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத கிராமம், போக்குவரத்து வசதிகள் கூட அதிகம் காணப்படாத கிராமம். அந்த ஊரின் பெரிய மனிதரான பரமசிவத்திற்கு பாட்டு என்றால் உயிர், நன்கு பாட வேண்டும் என்று ஆசைப்பட்டவர். சரியான பாட்டு வாத்தியார் கிடைக்காததால் அவரின் ஆசை அற்ப ஆயுளிலே முடிந்துவிட்டது. இருந்தாலும் பாட்டு பாடும் ஆசை அவர் மனதில் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.


சாமான்யனின் சரித்திரம்

 

 (நாம் இரு நூற்றாண்டுகள் பின்னோக்கி கி.பி.1774 க்கு போவோம்) லண்டன் மாநகரில் பிரபல மருத்துவ மனை ஒன்றில் !. “கிளைவ்” நீங்கள் இப்பொழுது குணமாகிவிட்டீர்கள், உங்கள் மனதை போட்டு அலட்டிக்கொள்ளாதீர்கள், தயவு செய்து அமைதியாக இருங்கள், நீங்கள் அமைதியாகிவிட்டால் இன்றே கூட உங்களை வீட்டுக்கு அனுப்பிவிடுவேன், “டேக் ரெஸ்ட்” தட்டிக்கொடுத்துவிட்டு டாக்டர் அருகில் இருந்த அவர் மனைவி மார்கரெட் மஸ்கலீனிடமிருந்து விடைபெற்று அடுத்த நோயாளியை பார்க்க சென்றார். கிளைவ் விரக்தியாய் புன்னகைத்தார். அமைதியாம் அமைதி! எங்கு கிடைக்கும்


தொழிலாளியும்முதலாளியும்

 

 ராஜசேகர் இல்லம், விடியற்காலையில் அவர்கள் வீட்டிலிருந்து அவர் தங்கை,கணவர்,மற்றும் அவர்கள் குழந்தைகள் உடன் அவரின் இரு குழந்தைகள் அனைவரும் வால்பாறை செல்வதற்காக ஒரு ஆடம்பர வேனில் கிளம்பினர். அவரின் மனைவி மட்டும் இவருக்காக தான் வரவில்லை என்று சொல்லிவிட்டார், ராஜ சேகருக்கும் ஆசைதான் இவர்களுடன் செல்ல வேண்டும் என்று, ஆனால் இன்று கம்பெனி விசயமாக ஒரு பெரிய புள்ளியை பார்க்க வேண்டும், ஆதலால் அவர் செல்லவில்லை,அனைவரையும் அனுப்பிவிட்டு ஒரு சோபாவில் அமர்ந்து பேப்பர் படிக்க ஆரம்பித்தார். போன்