Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

322 கதைகள் கிடைத்துள்ளன.

தேர்தல்

 

 (இந்த கதை கரு என்னுடையது அல்ல, திரு மகரிஷி அவர்களின் 1972ல் எழுதிய “ஒலிபெருக்கிகள் ஓய்ந்து விட்டன” என்னும் சிறுகதையில் இருந்து எடுத்தது) இரவு ஒன்பது மணி ஆகியும் அந்த அலுவலகம் சுறு சுறுப்பாகத்தான் இருந்தது ராஜேஸ்வரி எக்ஸ்போர்ட் கம்பெனி முதலாளியும், மேனேஜிங்க டைரக்டருமான ராமபத்ரன் தனது கம்பெனியின் நிர்வாக தலைவரும் டைரகடருமான மிஸஸ் ரூபாவதியை அழைத்தார். எஸ் சார் உள்ளே நுழைந்த ரூபாவதியை கவனித்தார். வயது நாற்பதுக்கு மேல் இருக்கலாம், இன்னும் அழகு இருந்தது. பார்ப்பவர்களையும்,பேசுபவர்களையும்


துரோகமான நட்பு

 

 மழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது, ஆனால் குளிர் மட்டும் குறையாமல் இருந்தது. சென்னை மாநகரத்தை விட்டு ஐந்தாறு கிலோ மீட்டர் தள்ளியிருந்த அந்த நகரம் இந்த இரவு பதினோரு மணி அளவிலும், வாகனங்கள் குறையாமல் சென்று கொண்டிருந்தன. சென்னைக்கும், உள் தமிழ் நாட்டுக்கும் அது முக்கியமான பாதை ஆதலால் இரவு முழுக்க கூட வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கும். வாகனங்கள் சென்ற அளவுக்கு எதிர் வினையாக ஆட்கள் நடமாட்டம் சுத்தமாக குறைந்து ஒரு வித தூக்கத்தில் இருந்தது அந்த


ஓடிய காலங்கள்

 

 காலை மணி பத்துக்கு மேல் இருக்கலாம், நரசிம்மன் பென்ஷன் வாங்க கிளம்பி விட்டார். பாக்கியம் வரும்போது ஏதாவது வாங்கி வரணுமா? உள்ளிருந்து அவரை வழி அனுப்ப வந்த மருமகளிடம் கேட்டார். வேணாம், வேணாம், நீங்க வந்தப்புறம் பாத்துக்கலாம், இப்ப வெயிலு அதிகமா இருக்கே, கொஞ்சம் தாழ்ந்தொன்ன போக கூடாதா? வேணாம், வேணாம், மூணு மணிக்குள்ள ட்ரசரி ஆபிசுக்குள்ள இருக்கணும், இல்லையின்னா நாளைக்கு வர சொல்லிடுவான்.இப்பவே நடக்க ஆரம்பிச்சா ஒரு மணி நேரத்துல போய் சேர்ந்திடுவேன், வயசாச்சில்ல, சொல்லியவாறே


கடத்தப்பட்ட குழந்தை

 

 ஏதோ யோசனையில் பேருந்தில் உட்கார்ந்து சென்று கொண்டிருந்த சாக்க்ஷிக்கு எதிர் சீட்டில் உட்கார்ந்து தன் மழலை குரலால் பக்கத்தில் இருக்கும் பெண்ணிடம் ஏதேதோ கேட்டுக்கொண்டு வந்தது கவனத்தை கவருவதாக இருந்தது. இருந்தால் அந்த குழந்தைக்கு நான்கு அல்லது ஐந்து வயதுக்குள் இருக்கலாம், மென்மையான நீல கலரில் சட்டையும், அழுத்தமான நீலத்தில் ஸ்கர்ட்டும் உடைகள் விலையுயர்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால் அருகில் உட்கார்ந்திருந்த பெண்ணுக்கு இவள் கண்டிப்பாய் உறவாய் இருக்க வாய்ப்பு இல்லை, அந்த பெண்ணும் மாநிறமாய் இருந்தாலும்


சியாமளாவின் எதிர்பார்ப்பு

 

 ராஜேந்திரன் தம்பதிகளுக்கு இப்பொழுது ஒரே கவலை தங்கள் பெண் சியாமளா எப்பொழுது திருமணத்துக்கு சம்மதிப்பாள் என்பதுதான். சில நேரங்களில் இந்த பெண்ணுக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்து விட்டோமோ என்கிற கவலையும் வருவதுண்டு. ராஜேந்திரன் தன் மனைவி கமலாவிடம் இதை பற்றி சொல்லி எல்லாம் உன்னால்தான் என்று சத்தம் போடுவார். அதற்கு கமலா இதுக்கு காரணமே நீங்கள் கொடுத்த செல்லம்தான் என்று பதில் கொடுப்பாள். சியாமளா இவர்கள் கவலைப்படுவது போல கல்யாணமே செய்து கொள்ளக் கூடாது என்ற


ஓசை

 

 டொக்…டொக்..டக்…டக்..தட்..தட்… இந்த சத்தம் பாரிஜாதம் திருமணமாகி முதன் முதல் தாம்பத்யம் நடத்த கணவன் அருகில் படுத்திருக்கும் போது கேட்டது. இது என்னங்க சத்தம் ? கணவன் முருகேசனிடம் கேட்டாள். பக்கத்துல மோல்டிங் வேலை நடக்குது. இராத்திரி பத்து மணிக்குமா? இராத்திரி பகல் அப்படீன்னு கிடையாது. காலையில இருந்து மறு நா விடியற வரைக்கும் கேட்டு கிட்டே இருக்கும். அதன் பின் அவர்கள் தூக்கத்திற்குள் போகும் வரைக்கும் கேட்டு கொண்டே இருந்தது.. பாரிஜாதம் பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு போக


இருட்டு

 

 கொஞ்ச காலமாக இருட்டு என்னை அதிகமாக அலைக்கழிக்கிறது. அதுவும் சில நேரங்களில் என் உணர்வுகளை தூண்டி இனி வாழ்ந்துதான் என்ன பயன்? என்கிற எண்ணத்தையும் தூண்டி விடுகிறது. இருபது வருட காவல் துறையில் நான் பார்க்காத பயமுறுத்தல்களா? மிரட்டல்களா? ஆனால் இந்த மூன்று மாத காலமாய் இருட்டு என் உள் மனதுக்குள் புகுந்து பல கேள்விகளை எழுப்பி விடுகிறது. நடு இரவில் கூட எழுப்பி விட்டு இத்தகைய எண்ணங்களை உருவாக்கி விடுகிறது. சரி பகலிலாவது பலரிடம் பேச்சு


கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடங்கள்

 

 அந்த சிறைச்சாலை கொட்டடியில் அடைக்கப்பட்டிருந்த கைதிகளை பெயர் சொல்லி அழைத்தான் அந்த காவலன். அனைவரும் வரிசையாய் வந்து நின்றனர். ம்..நடங்கள், அவர்கள் கால்களில் கட்டியிருந்த சங்கிலிகளை அவிழ்த்தவன் விரட்டினான். இன்று மன்னரின் தாய் நினைவு நாளாயிறே ! அரசுக்கு எதிராக பேசியவர்களை சுட்டு கொல்ல நாளைக்குத்தான் நாள் குறித்திருந்தாரே, திடீரென்று இன்றே ஏன் இவர்களை கொண்டு வர சொல்கிறார், ஒரு காவலாளி மற்றொரு காவலாளியிடம் கேட்டான். காவலாளி சிரித்தான், மன்னரை பற்றி தெரியாதா? என்ன செய்வார், என்ன


என் கதை சினிமாவாகப் போகிறது

 

 புதிய கதை ஒன்று எழுதி முடித்திருந்தேன்.கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் சமூகத்தில் இன்று கரைந்து கொண்டிருக்கும் பாசத்தை பற்றி தந்தைக்கும் தனயனுக்கும் நடக்கும் உணர்வு போராட்டங்களை விவரித்திருந்தது. கதை வெளியாகி, எழுத்தாளர்களும் விமர்சகர்களுமான திருவாளர்கள் முகம்மது இப்ராகிமின் ‘ஆச்சர்யமும்’, அர்.வி ரங்கராஜனின் ‘கண்டிப்பும்’, வசந்த் ஸ்ரீனிவாசனின் ‘நைஸும்’, வேல் முருகனின் ‘அருமையும்’, திருமதிகள் மங்கை மனோவின் ‘சூப்பர் சகோவும்’, தேவபானியின் ‘அருமையும்’, திவ்யா பாலாஜியின் ‘அருமை ஆச்சர்யங்களும்’ விமர்சனங்களாக வந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருந்தது. மதியம் சாப்பிட்டு


ஒரு எழுத்தாளன் கல்லூரிக்கு போகிறான்

 

 தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல் உலகம் முழுக்க தனது எழுத்துக்களால் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கும் பல பல தமிழ் எழுத்தாளர்கள் எல்லாம் சத்தமில்லாமல் அமைதியாய் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்க நான் மட்டும் எனது ஊருக்குள் ஒரு எழுத்தாளனாய் பிரபலமாகியிருந்தேன். அதாவது என்னை நானே பிரபலப்படுத்தி கொண்டிருந்தேன். இதற்கு பெரிய சித்து வேலைகள் எல்லாம் தேவையில்லை. எங்கள் ஊரில் நடக்கும் திருவிழாக்கள், பண்டிகைகளில் நடக்கும் நாடகங்கள், நிகழ்ச்சிகள் போன்றவைகளுக்கு வசனம் எழுதுவது, ஜால வார்த்தைகளை கோர்த்து எதிரணிகளை கலங்கடிப்பது, கவிதை