கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

328 கதைகள் கிடைத்துள்ளன.

இவர்களின் அன்பு வேறு வகை

 

 கந்தசாமி தலையில் கை வைத்து உட்கார்ந்து கொண்டிருந்தான். உள்ளே அவன் மனைவி இவனை அர்ச்சனை செய்து கொண்டே வேலைகளை கவனித்துக்கொண்டிருந்தாள். ஒரு வேலை செய்ய துப்பிருக்கா ? எனக்குன்னு வந்து சேர்ந்திருக்கே ! யாராவது ஏதா கேட்டாங்கன்னா துக்கி கொடுத்திக்குடுவாரு, இவரு பெரிய துரை. சில வார்த்தைகளை நாம் எழுத்தில் எழுதக்கூடாது. தேமே..என்று கேட்டுக்கொண்டிருந்தான் கந்தசாமி. அவன் அப்பிராணி என்று பூரணமாய் சொல்ல முடியாவிட்டாலும், எதையும் நம்பிவிடுபவன்.அவன் கண்டானா? அந்தப்பெண் பொய் சொல்கிறாள் என்று. ரேசன் கடையில்


ஏதோ ஒன்று மட்டுமே கிடைக்கும்

 

 “சரி என் கல்யாணத்துக்காவது வருவியா மாட்டியா? கேட்ட கனகாவின் கண்களை உற்று நோக்கிய ஆனந்த மூர்த்தி சொல்ல முடியாது, அந்த நேரத்தில் என் மனநிலை எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தது. அது சரி உன் இஷ்டம் நான் கிளம்புகிறேன் எழுந்தாள் கனகா. உன் கணவனை கேட்டதாக சொல், கொஞ்சம் கோபக்காரன் அனுசரித்து போ சொல்லிவிட்டு அவனும் எழுவது போல் பாவனை செய்தான். கிளம்பு என்கிறான், இதை புரிந்து கொண்ட கனகா ரெஸ்டாரெண்டை விட்டு வெளியே வந்து காரை


கிராம வாழ்க்கையில் இப்படியும் இருக்கும்

 

 அன்று என் கிராமத்துக்கு வந்திருந்தேன்.நல்ல வெயிலில், பஸ் கிடைக்காமல் நடந்து வந்ததில் களைப்பாய் இருந்தது.வந்தவுடன் அம்மா கொடுத்த ஒரு சொம்பு குளிர்ந்த தண்ணீரை குடித்தவுடன் உடம்பு கொஞ்சம் குளிர்வது போல் இருந்தது. வெயிலில் வந்தவுடன் உடனே தண்ணீரை அப்படி குடிக்க கூடாது என்று அடிக்கடி மற்றவர்களுக்கு அறிவுரை சொல்லும் வைத்தியன் நான். ஆனால் அனுபவப்படும்போது அதுவெல்லாம் ஞாபகத்துக்கு வருவதில்லை. அதுவும் மனோதத்துவ வைத்தியர் நான், எனது வைத்தியத்தில் பேச்சுதான் முக்கியம். நோயாளியின் கவலைகளிலிருந்து அனைத்தையும் பேச்சின் மூலம்


இன்னும் மறைந்து விடவில்லை மனிதாபிமானம்

 

 காலையிலிருந்து நல்ல சவாரி கிடைத்துக்கொண்டிருந்த்து சரவணனுக்கு. இப்படியே பத்து இருபது நாட்கள் கிடைத்தால் சம்சாரத்தின் “பிரசவ” செலவை ஈடு கட்டி விட முடியும் என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டவனை யாரோ கையை தட்டி கூப்பிடும் சத்தம் கேட்டவுடன் அனிச்சையாய் திரும்பி பார்த்தான். கை தட்டி கூப்பிட்டது அவனைத்தான் என்றவுடன் மீண்டும் ஒரு உற்சாகம் மனதுக்குள் வந்த்து. சர்ரென்று வண்டியை திருப்பி கூப்பிட்டவரின் அருகில் சென்றான். R.S. புரம் வரைக்கும் போய்ட்டு திரும்பி வரணும் எவ்வளவு கேக்கற? கேட்டவருக்கு அம்பதிலிருந்து


ராமுவின் துப்பறியும் மூளை

 

 உக்கடம் பெரிய கடைவீதியில் உள்ள “கணபதி ஆயில் ஸ்டோர்” எண்ணெய் கடையில் எண்ணெய் ஊற்றிக்கொண்டிருந்த சாமியப்பண்ணன் உடல் நிலை சரியில்லாமல் ஒரு மாதம் விடுமுறை எடுத்து விட்டார். கணபதி ஆயில் ஸ்டோரில் மேலும் ஒரு பணியாளர் உண்டு, அவருடன் முதலாளி கணபதியப்பனும் இருப்பதால் இந்த ஒரு மாதம் சமாளித்துக்கொள்ளலாம் என முடிவு செய்து விட்டார்கள். ஆனால் கூட்டம் அலை மோத கண்டிப்பாக ஒரு ஆள் தேவை என்று ஆகிவிட்டது. தெரிந்தவ்ரகளிடம் சொல்லி வைத்தார் கணப்தியப்பன். அடுத்த நாள்


ராமுவின் பெரும் உதவி

 

 சுந்தராபுரம் என்னும் ஒரு ஊரில் மயில்வாணன் என்னும் ஒரு வியாபாரி இருந்தார் அவருக்கு ராமு என்னும் ஒரு மகன் இருந்தான். ராமு அந்த ஊரில் உள்ள நடு நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தான். மயில்வாகணன் அருகில் உள்ள ஒரு நகரத்தில் கடை ஒன்று நடத்தி வந்தார். தினமும் காலையில் சைக்கிளில் அந் நகரத்துக்கு சென்று கடையை திறந்து வியாபாரத்தை பார்த்துவிட்டு இரவு ஒன்பது மனிக்கு மேல்தான் வீடு திரும்புவார். அவரது கடையில் விவசாயத்துக்கு தேவையான உரங்கள்


புதியதாக வந்த நட்பும், உதவியும்

 

 ஒரு ஊரில் ஒரு விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் நல்ல பலசாலியாகவும் புத்திசாலியாகவும் இருந்தது. அந்த விவசாயிடம் ஏராளமான மாடுகள் இருந்தன.அந்த மாடுகளை தினமும் மேய்ச்சலுக்கு விவசாயியும் அந்த நாயும் கூட்டிச்செல்வர்.தினமும் காலையில் கிளம்பி அருகில் உள்ள மலைக்காடுகளுக்கு அழைத்துச்சென்று மாடுகளை மேய விட்டுவிட்டும் மாலையில் வீட்டுக்கு கூட்டி வருவர்.விவசாயி மாடுகளின் பின்னால் நடந்து வர, நாய் இரு பக்கமும் மாறி, மாறிச்சென்று கட்டுக்கோப்பாக காட்டுக்கு கூட்டிச்செல்லும்.இவ்வாறு


பூக்களுக்கும் போட்டி உண்டு

 

 குட்டீஸ் நீங்கள் பூங்காவிற்கு சென்றிருக்கிறீர்களா? அங்கு விதம் விதமான மலர்களை பார்த்திருப்பீர்கள். அவைகள் ஒவ்வொன்றும் பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கின்றன.நீங்கள் அதை பார்த்து இரசித்திருப்பீர்கள்.அப்பொழுது அங்குள்ளதிலேயே எந்த பூ அழகு என்று பேசிக்கொண்டிருப்பீர்களா?கண்டிப்பாக செய்திருப்பீர்கள். இப்படித்தான் ஒரு நாள் குழந்தைகள் கூட்டம் ஒன்று பூங்காவை சுற்றிப்பார்க்க வந்தது. அங்குள்ள மலர்களை பார்த்து ஒரே சந்தோச கூச்சலிட்டன.மலர்களுக்கும் குழந்தைகளை பார்த்தவுடன் மகிழ்ச்சி தாங்கவில்லை. என்னைப்பார் என்னைப்பார், என்று காற்றில் தலை சாய்த்து தன் மகிழ்ச்சியை தெரியப்படுத்தின.எல்லாம் பார்த்துவிட்டு செல்லும்போது


புத்திசாலி சகோதரர்கள்

 

 ராமுவும், சோமுவும் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிற மாணவர்கள். இவர்களின் பெற்றோர் அந்த ஊரில் விவசாயம் செய்து வந்தார்கள். இருவரும் நல்ல புத்திசாலிகள். அவர்கள் அம்மாவுக்கு எல்லா உதவிகளும் செய்து நல்ல பிள்ளைகளாகவும் பெற்றோர் சொல் பேச்சு கேட்கும் குழந்தைகளாகவும் இருந்தனர். ராமுவும், சோமுவும் உள்ளுரில் உள்ள பள்ளியிலியே படித்து வந்தனர்.அவர்கள் படித்து வந்த பள்ளி அவர்கள் வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி இருந்தது.தினமும் நடந்தே பள்ளிக்கு சென்று மாலையில் பள்ளி விட்டவுடன் வீடு


புத்தி சாதுர்யத்தால் சண்டையை சமாதானமாக்கியவன்

 

 முன்னொரு காலத்தில் கந்தன் என்னும் ஏழை விவசாயி வாழ்ந்து வந்தான். அவனிடம் சிறிதளவே நிலம் இருந்தது, அதனையே உழுது பயிர் செய்து வாழ்ந்து வந்து கொண்டிருந்தான்.அவனுக்கு மனைவியும், குமரப்பன் என்ற மகனும் இருந்தான். இவர்கள் மூவரும் அவர்கள் நிலத்தை ஒட்டிய இடத்தில் குடிசை போட்டு வாழ்ந்து வந்தனர். கந்தனும், அவன் மனைவியும் நல்ல உழைப்பாளிகள். குமரப்பன் புத்திசாலி குழந்தையாக இருந்த போதிலும்,கல்வி கற்க வைக்க இவர்களிடம் வசதி இல்லாததால் தினமும் விடியலில் மூவரும் எழுந்து பழையதை கரைத்து