கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

325 கதைகள் கிடைத்துள்ளன.

எண்ணங்களின் குவியல்

 

 நல்ல தூக்கத்தில் இருந்த பத்மா, தூக்கத்திலேயே தன் கையை நீட்டினாள், முரளி தோள் தட்டுப்பட, அவன் தோள் மேலேயே கையை போட்டு ஆழ்ந்த நித்திரைக்குள் நுழையப்போனாள். சட்டென்று ஒரு நினைவு, முரளி வெளியூருக்கு சென்றிருந்தானே, அவ்வளவுதான், இந்த நினைவு வந்ததும், விருக்கென தூக்கம் கலைந்து எழுந்தவள் பக்கத்தில் பார்த்தாள். யாருமில்லை. அப்படியானால் தான் கையை போட்டு படுத்தது? கனவாய் இருக்கும் மனது சொன்னாலும், அவள் உள்ளுணர்வு இல்லை, முரளி தோள் மீது கை போட்டது உண்மை என்று


காலம்

 

 குளிரூட்டப்பட்டிருந்த அந்த பிரமாண்டமான அரங்கத்தில் வசீகரமாய்,அங்குள்ள ஒரு சில பெண்களின் மனதை கொள்ளை கொள்ளக்கூடிய தோற்றத்துடன் சுகேஷ். பிரிட்டிஷ் காரர்களை தோற்கடிக்கக்கூடிய விதத்தில் ஆங்கிலத்தில் சொற் பொழிவாற்றிக்கொண்டிருந்தான். நீங்கள் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். தெரியும் கண்டிப்பாய் உங்கள் கைபேசியில் கலர் கலராய் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். தவறாக நினைக்க வேண்டாம். கைபேசியில் ஏதோ ஒரு புத்தகத்தை பிரித்து ஏதோ ஒரு கதையை படித்து விட்டு அதற்கு ஒரு கமெண்ட்ஸ், இல்லை, ஒரு லைக் என்று போட்டு விட்டு அடுத்த


அப்பாவின் கோபம்

 

 இந்த பேப்பரை யார் இங்கே வச்சிரிக்கறது? கோபமான கேள்வி அந்த வீட்டில் ஒலிக்கவும் வீடே நிசப்தமாகியது. மீண்டும் அந்த கேள்வி ராமச்சந்திரனால் அங்கு நின்று கொண்டிருந்த மகன், மகள் மனைவியை நோக்கி வீசப்பட்டதும், நானில்லை..என்று தயக்கமாய் மகனிடமிருந்தும், மகளிடமிருந்தும் வந்தது. நீங்க இரண்டு பேரும் இல்லையின்னா இந்த பேப்பருக்கு கால் முளைச்சு இந்த இடத்துக்கு வந்திருக்குமா? மீண்டும் அவரிடமிருந்து கிண்டலான கேள்வி வர மனைவி மெல்ல முன் வந்து யாராவது படிச்சுட்டு மறந்து வச்சிருப்பாங்க. இப்படி சொல்றதை


பூலோகம் திரும்பி வந்தால்!

 

  “நீங்கள் இல்லாமல் உலகம் இல்லை” யாராவது சொன்னால் நம்பி விடாதீர்கள். உலகம் என்றில்லை, நம் குடும்பமே ஆகட்டுமே, இவனாலத்தான் இந்த குடும்பமே ஓடுது, சொல்லிவிட்டால், பெருமையாக நினைத்துக்கொள்கிறோம்.ஆனால் நாம் போய் விட்டால் எதுவும் நிற்பதுமில்லை, படுப்பதுமில்ல்லை. அதுபாட்டுக்கு தூக்கி போட்டுவிட்டு காலன் ஓடிக்கொண்டேதான் இருக்கிறான். அடடா நாம் இல்லாமல் குடும்பம் எப்படி இருக்கிறது என்று மீண்டும் பார்க்க வந்தால் அவ்வளவுதான்..! இப்படி பேசிக்கொண்டிருப்பவன் யாருமில்லை, இந்த கதையின் நாயகன்தான்.. இவ்வளவு கவலையுடன் பேசிக்கொண்டிருக்கிறான். அவன் பேசிக்கொண்டிருக்கும்


அதிர்ஷ்டமா? விதியா?

 

 “உங்களுக்கு எல்லாம் எங்களோட கஷ்ட நஷ்டம் புரியாது”, படிச்சு, பேனுக்கடியிலே உட்கார்ந்து கிட்டா, எங்க மாதிரி ஏழைங்களோட வருத்தம் எப்படி புரியும்?. நான்கைந்து பெண்களும், ஆண்களும், விசாரிப்பதற்காக வந்திருந்த பெண் கலெக்டரிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தனர். பெண் கலெக்டருக்கு அவர்கள் சொன்னதை கேட்டவுடன் சிரிப்புத்தான் வந்தது. வேண்டாம் இப்பொழுது சிரிக்க்க்கூடாது, அவர்கள் கோபத்தை இப்படி காட்டி ஆற்றிக்கொள்கிறார்கள். இதற்கு பின்னால் சூத்திரதாரிகளாய் இருக்கும் அரசியல்வாதிகளை இவர்களால் ஒன்றும் செய்ய முடிவதில்லை, நம்மிடம்தான் கோபத்தை காட்டமுடியும்? ஏன் நம்மால்


இராஜ தந்திரம்

 

  மகாராணி துர்கா கவலையில் ஆழ்ந்திருந்தாள். தனது கணவனின் படைகள் போரில் சற்று தொய்ந்து காணப்படுவதாக செய்திகள் பரவிக்கொண்டிருந்தது. எதிர் பார்த்த நண்பர்கள் தங்களது படைகளை அனுப்புவதாக் கூறியவர்கள் எதிராளியின் படை பலத்தை கண்டு பின் வாங்கி விட்டார்கள். இந்த நேரத்தில் உள் நாட்டில் அவரின் பங்காளிகள் சதிகள் செய்து கொண்டிருப்பதாகவும் தகவல் வந்திருக்கிறது. யோசனையுடன் குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டிருந்தவள் தன் வளர்ப்பு மகனாய் வளர்ந்து கொண்டிருப்பவனும் நம்பிக்கைக்குரிய படைத்தளபதியின் தம்பியுமான ராமையாவை அழைத்து வர


தொடர்ந்த கதை

 

 இரவு மணி இரண்டுக்கு மேல் இருக்கலாம், கதவு தட தடவென தட்டப்பட்டது.வெளி அறையில் படுத்துக்கொண்டிருந்த நான் திடுக்கிட்டு விழித்தவன் வேகமாக வந்து கதவை திறந்தேன். அதற்குள் உள் அறையில் தூங்கிக்கொண்டிருந்த மனைவியும் குழந்தைகளும் விழித்து என் பின்னால் நின்று கொண்டிருந்த்தை உணர்ந்தேன். கதவை திறக்கவும், வெளியே சண்முக சுந்தரம் நின்று கொண்டிருந்தார். எனக்குதெரிந்தவர், நண்பர், சார்.. அவர்து கண் உள்புறமாக துழாவியது. என்ன சார்? என்ன பிரச்சினை? மெல்ல அவரை ஆசுவாசப்படுத்தினேன். ஐந்து நிமிடம் பிரமை பிடித்தவர்


இறந்தவன் திரும்பி வந்தான்

 

 ராமசுப்பு இப்படி போவான் என்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. இந்தியாவின் ஜனத்தொகையில் ஒன்று குறைந்து விட்டது என்று மற்றவர்கள் நினைத்துக்கொள்ளலாம், ஆனால் ராம சுப்பு ஒரு இந்திய குடிமகனாய் எல்லாவிதமான சட்ட திட்டங்களையும் சரிவர பின்பற்றி இருப்பவன், அவனைப்போய்…. வாசகர்கள் ஆவலுடன் இருக்கலாம், இவனுக்கு என்னதான் ஆயிற்று? அதற்கு முன்னால் நம் ராமசுப்பு எப்படிப்பட்டவன் என்று மேலோட்டமாய் சொல்லி விடுவோம். சிக்னலில் சிவப்பு விளக்கு எரிந்து எல்லோரும் பாதையை கடந்து செல்ல்லாம் என்று தெரிந்தாலும் நம் ராமசுப்பு


சமரசம்

 

 கால்ஷீட் எல்லாம் பேசி முடித்து, சம்பளத்தொகையும் பேசி முடிக்கப்பட்டபின் அந்த சந்தோசத்தை கொண்டாடுவதற்காக தயாராக டேபிளின் மேல் வைத்திருந்த ஒயின் கிளாசை தூக்கி பிடித்து காட்டினான் ஷியாம். எதிரில் இருந்த தயாரிப்பாளர் தனபாண்டியன் தலை குனிந்து வணக்கம் சொல்லிவிட்டு நான் வருகிறேன் என்று திரும்பினார். என்ன சார்? நீங்க கலந்துக்கலையா? இல்லை சார் ஒரு இடத்துக்கு போகணும், தப்பா நினைச்சுக்காதீங்க. பணம் உங்க வீட்டுக்கு வந்துடும். வரட்டுமா, மீண்டும் கை எடுத்து வணங்கி விட்டு கிளம்பினார். சே


பட்டால் புரியும்

 

 வட இந்தியாவை நோக்கி சென்று கொண்டிருக்கும் இரெயில் அது. சாதாரண வகுப்பில் கூட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. தாள நயத்துடன் தடக்..தடக் என்ற சத்தம் கூட அந்த இரவில் படுத்து உறங்குபவர்களுக்கு தாலாட்டாக இருந்தது.. ஆயிற்று ஒன்றரை நாட்கள் ஆகி விட்டது. காலை பத்து மணிக்கெல்லாம் பம்பாயை அடைத்து விடலாம். அந்த தூக்க கலக்கத்திலும் விலுக்கென்று நிமிர்ந்து பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆளை பார்த்து நிம்மதியாகி மீண்டும் உறக்கத்திற்கு சென்றவன் அப்படியே அந்த ஆளின் மேலேயே சாய்ந்தும் கொண்டான்.