கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீ.தாமோதரன்

236 கதைகள் கிடைத்துள்ளன.

வழி மாறிய சிந்தனை

 

  “வாட் யூ வாண்ட்? வரவேற்பறையில் அமர்ந்திருந்த பெண்ணின் கேள்வியை கவனிக்கமல் அவள் போட்டிருந்த, உடை அலங்காரத்தைக்கண்டே மிரண்டு விட்டான் கார்த்திகேயன், பதிலை ஆங்கிலத்தில் சொல்லவே மனதுக்குள் வார்த்தைகளை கோர்த்து சொல்ல யோசித்தான். மறூபடி அவள் அந்த கேள்வியை கேட்கவும், திடுக்கிட்டு, “இண்டர்வியூ”வுக்கு கூபிட்டிருக்காங்க, என்று தமிழிலிலேயே சொன்னான்.நீங்கள் இடது பக்கமாய் போய் வலது புறம் உள்ள அறையில் உட்காருங்கள். இதை ஆங்கிலத்தில்தான் சொன்னாள். அந்த மொழியை உச்சரித்த அழகை இரசித்தவன், “தேங்க்யூ” இதை ஆங்கிலத்தில் தைரியமாக


போர்

 

  எதிரே நின்று கொண்டிருந்த படைகளை பார்த்தார் ராசா, எங்கிருந்து வந்தார்கள் இந்த வெள்ளையர்கள், நம் நாட்டின் மீது போர் தொடுக்க அவசியம் என்ன? இது எல்லாம் யாருடைய கைங்கர்யம், தெய்வங்களா நம் தலை மீது கை வைத்து நம்மை போர் புரிய ஆட்டுவிக்கிறார்கள்?. எப்பொழுது போர் அறிவிக்க போகிறார்கள்? பக்கத்தில் இருந்த ராணி சிரித்தாள். ஏன் சிரிக்கிறாய்? கேட்டார் ராசா. இல்லை இந்த வெள்ளையர்களை பாருங்கள், அவர்களுக்கு அவர்களுடைய நிறத்தை பற்றி பெருமை, அதை நாம்


“பீனிக்ஸ்” பறவை

 

  காரில் வந்து அலுவலக வாசலில் இறங்கிய ராஜா ராமன் கடைசி தடவையாக காரை தடவி பார்த்தான். தான் ஆரம்ப காலத்தில் இருந்த பொழுது, முதன் முதலில் வாங்கிய கார், இந்த கார் இவனுடனே பதினைந்து வருடங்களாக இருந்தது. இருந்தது என்பதை விட அவனுடனே வாழ்ந்தது. இவன் எந்த ஊருக்கு வாடிக்கயாளரை பார்க்க கிளம்பினாலும், முந்தைய நாளில் அதனுடன் நண்பனுடன் பேசுவது போல பேசிக்கொள்வான். நாளைக்கு சென்னைக்கு கிளம்பறோம், இரயில்ல போலாம், உன் கூட வந்தா தான்


நான் வாழ்ந்த வாழ்க்கை

 

  உள்ளே நுழைந்த எனக்கு இது ஒரு அறை போல் தென்படவில்லை. வெளியில் இருந்து உள்ளே நுழைவதற்கு கதவு இருந்தது, அதனுள் நுழைந்தேன்..உள்ளே பார்த்தால் அகன்ற வெட்ட வெளியாகத்தான் தெரிகிறது.. ஆச்சர்யம் ஆட்கள் தானாக பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் சென்று கொண்டே இருக்கிறார்கள். என்னை தாண்டி கூட போய்க்கொண்டிருக்கிறார்கள், கதவை தாண்டியும் போகிறார்கள், உள்ளேயும் வருகிறார்கள். நான் மட்டும் உள்ளே செல்ல முடியாமல் ஓரமாய் ஒதுங்கி நின்று கொண்டிருக்கிறேன்.. அட….எதிரில் வருவது நம்ம தாய் மாமா மாதிரியிருக்குதே. ஆமாம்,


சதுரங்க புத்திசாலிகள்

 

  வீட்டு முன் ஹாலில் விடாமல் அடித்துக்கொண்டிருந்த டெலிபோன் சத்தம் கேட்டு அங்கு வந்து போனை எடுத்த தொழிலதிபர் மயில்சாமி,ரீசிவரை காதுக்குள் வைத்ததும் வந்த செய்தியை கேட்டவுடன் ஐந்து நிமிடங்கள் ஆடாமல் அசையாமல் நின்றார். அவருடனே அலுவலகத்துக்கு வரும் மகன், அங்கு வந்தவன் அப்பாவின் அந்த நிலையை பார்த்து என்னப்பா? என்ன விசயம்? குரல் கேட்டதும் தன்னிலை பெற்ற மயில்சாமி “மந்திரி சுகவனம்” போயிட்டாராம்மா வருத்தத்துடன் சொன்னார். இதை கேட்ட மயில்சாமியின் மகன் மந்திரி போயிட்டாருன்னா நீங்க