கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ்

3 கதைகள் கிடைத்துள்ளன.

கரிசனம்

 

  தான் பதவிக்கு வந்திருந்த முதல் வாரத்தில், நீதிமன்ற அலுவல்களில் மிகவும் கண்டிப்பு காட்டினார், புதிதாகப்பதவியேற்றிருந்த அந்த முன்சீப். ஶ்ரீவில்லிபுத்தூர், சிறிய வட்டாரம் என்பதால், அவரையே மாஜிஸ்திரேட்டாகவும் கூடுதல் பதவியேற்கச் சொல்லியிருந்தார்கள். சிவில் வழக்குகளில், வழக்கை சவ்வு மிட்டாய் போல இழுத்தடிப்பதற்கு, மகாகனம் பொருந்திய பெருமைமிகு வக்கீல் பெருமக்கள் கைக்கொள்ளும் சகலவிதமான நீதிமன்ற சித்து வேலைகளும் புதிய முன்சீப்புக்கு ஏற்கனவே அத்துபடி என்பதால், எக்ஸ்-பார்ட்டி எனப்படும் ஒரு தலைப்பட்ட தீர்ப்பை ரத்து செய்து, வழக்கை மீண்டும் விசாரணை


ஒலவ மரம் வீழ்த்திய காதை

 

  ‘இந்த மரம் மட்டும் தேக்கா இருந்திச்சி, இப்ப லட்ச ரூவா தேறும்’ என்றாள் அய்யாக்கண்ணு, தன் இடது கையால் தட்டியபடி. அவனது இடது கை தட்டப்பட்ட இடத்தில் ஒரு உயர்ந்த ஒலவ மரம் நின்றது. உயர்ந்து, பருத்து, கிளை பரப்பி, எங்கும் விரிந்து, கோடி இலைகளுடன் பச்சைப் பசேலென்று, கண்ணால் பார்க்கும் போதே போய்க் கட்டிக் கொள்ளத் தோன்றும் அழகு. ‘கட்டிக்கொள்ள’ என்றால் ஒரு ஆள் போய் அதைக் கட்டிக்கொள்ள முடியாது. மதுரை திருமலை நாயக்கர்


பனைமரத்து முனியாண்டி சாமியும் வன்னியம்பட்டி பச்சையப்பனும்

 

  நஞ்சைக் காட்டின் கிழக்குக் குண்டில், வரத்து வாய்க்காலை ஒட்டி, வாமடை பிரிந்து செல்லும் இடத்தில் கரையான் பூச்சிகள் புற்று வைத்த மேட்டில், நிலத்தின் ஈரம் சொத, சொதவென மாறாது நின்றிருக்கும் இடத்தில், சம்பந்தா சம்பந்தமில்லாமல் தனித்து நின்றது அந்த ஒற்றைப் பனைமரம். சாமி வயக்காடு என்றால் யாருக்கும் அடையாளம் சொல்லத் தெரியாது. இனாம் நாச்சியார் கோவில் கிராமத்தின் வடக்கு விளிம்பில் உள்ள காடு தான் சாமி காடு என்று ஊருக்குப் புதிதாய் வருபவருக்கு அடையாளம் காட்டப்பட்டது.