கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீரஞ்சனி

5 கதைகள் கிடைத்துள்ளன.

தடம் மாறும் தாற்பரியம்

 

 அந்த CAS எனப்படும் ‘சிறுவர் ஆதரவுச் சபைக்’ கட்டிடத்துக்குள் நுழையும் போது, மனசு கொஞ்சம் படபடத்துக் கொள்கிறது. “பாரபட்சமின்றி இருக்க வேணும்; வெறும் குரலைக் கொடுக்கிறது தான் எங்கடை வேலை; மற்றும்படி எந்தக் கலந்துரையாடலிலும் நாம் ஒரு பங்காளர் இல்லை” என்றெல்லாம் மொழிபெயர்ப்பாளருக்கான வகுப்புக்களில் திரும்பத்திரும்பச் சொல்லி மனதில் பதிக்கப்பட்டிருந்தாலும்கூட, சில நேரங்களில் அந்தக் கலந்துரையாடல்கள் ஏற்படுத்தும் உணர்வுகள் மனசை மிகவும் இம்சைப்படுத்தி விடுவதற்கு, நானும் ஒரு தாயாக இருப்பதும் ஒரு முக்கிய காரணம் தான். வரவேற்பறையினுள்


இழை ஒன்று விடுபட்டுப் போகிறதா ?

 

 “ரவியின்ரை முகத்திலை இப்பத்தான் கொஞ்சம் களை கட்டியிருக்கு.”, “ஒம், பாவம் அவன். இரண்டு பிள்ளையளோடையும் சரியாக் கஷ்டப்பட்டுப் போனான்” கலியாண வீட்டிலிருந்த இரண்டு பேர் கதைத்துக் கொண்டிருந்த போது இடையில் புகுந்து “திரும்பக் கலியாணம் கட்ட மாட்டன் எண்டு நிண்டவனை மனம் மாத்திச் சம்மதிக்க வைச்சது நான் தான்.” எண்டு பெரிய பெருமையாய்ச் சொல்லிக்கொள்கிறா மாமி. எனக்கு அவர்களின் கதையைக் கேட்க எரிச்சல் எரிச்சலாய் வருகிறது. அம்மாவை விபத்தில் இழந்த போது ஏற்பட்ட ரணத்தை விட அப்பாவும்


ஓரங்க நாடகம்

 

 ‘ரீச்சர், இண்டைக்கு நாங்கள் நாடகம் நடிக்கலாமோ?’ இது சுதன். அவன் சொல்லி முடிப்பதற்குள் இன்னும் சிலரும் ‘ஒம் ரீச்சர், நாங்கள் நாடகம் செய்து கனநாளாச்சு. நாடகம் செய்வோம்,’ என வேண்டுகோள் விடுக்கிறார்கள். காலையில் தமிழ் வகுப்புக்கு வந்ததும் அன்று படிக்க வேண்டிய விடயம் பற்றிக் கலந்துரையாடுவோம். பின் அது சம்பந்தமான சில வாசிப்பும் எழுத்தும் கலந்த பயிற்சிகளை மாணவர்கள் செய்வார்கள். நிறைவாக வகுப்பு முடிய முன் இருக்கும் 30 நிமிடங்களுக்கு தமிழில் கதைக்கும் ஏதாவது ஒரு குழு


பிரமைகள்

 

 “நாட்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்த காலங்களில் கூட, கல்லூரி அனைத்து துறைகளிலும் ஓங்கி நிற்க அயராது பாடுபட்ட மாமனிதர், எமது கல்லூரியின் பொற்கால அதிபர் திருவாளர் சிவசுந்தரம் அவர்களை கல்லூரி பற்றிய சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றேன்” என்று பழையமாணவர் சங்கத் தலைவர் பாபு சொன்ன போது பலத்த கர கோஷங்களுக்கும் விசிலடிகளுக்கும் ஆரவாரங்களுக்கும் மத்தியில் கதிரையை விட்டு எழும்புகிறேன் நான். கண்களில் நீர்த்திவலைகள், மனம் எங்கும் பல பட்டாம் பூச்சிக்கள், உடம்பு


ஏமாற்றங்கள்

 

 “அம்மா, அம்மா” எனப் பல தடவை மகள் கூப்பிடுவதைக் கேட்டும் கேட்காதது போல் தனது வேலையில் வெகு மும்முரமாக நின்றாள் கலா. “என்ன, மது கூப்பிடுறது கேட்கேல்லையே? பிறந்தநாளும் அதுமா அவனை அழவிடாமல் போய்ப் பாரன்” என்று பத்திரிகைக்குள் தலையையும் வாய்க்குள் சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு சொன்னான் மனோ. “நீங்கள் இருந்த இடத்திலை இருந்து கொண்டு சும்மா கதையுங்கோ. நான் விடிய எழும்பின நேரத்திலையிருந்து சமையலோடை அவதிப்படுறது தெரியேல்லையே, ஏன் நீங்கள் போய்ப் பாக்கக் கூடாதே?” பட்டாசுபோல்