கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீதர் நாராயணன்

2 கதைகள் கிடைத்துள்ளன.

அகலிகை

 

  அந்த மழை நாள் காலையில் ஈரத்தலைமுடியை காய வைக்கக்கூட நேரமில்லாமல் வேர்க்க விறுவிறுக்க பயிலரங்குக்குள் நான் நுழைந்த பொழுது கிருபாநிதி வகுப்பை துவங்கியிருந்தார். புரஜக்டரின் ஒளி வெள்ளத்தில் திரையில் பவர்பாயிண்ட் ஸ்லைடுகள் பரப்பப்பட்டிருக்க அரங்கு முழுவதும் அரையிருட்டில் புன்னகைகள் தெரிந்தன. ’ஹ! இதோ சுபா வந்துவிட்டார்கள். இன்று முழுவதும் ஆண்களோடு மட்டும்தான் மாரடிக்க வேண்டுமென்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன்’ ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எங்கள் நிறுவனத்தின் சார்பாக நடைபெறும் சாஃப்ட் ஸ்கில் பயிற்சி வகுப்பு அது.


குரு பெயர்ச்சி

 

  காஃபி மேக்கரில் கோப்பையை நிறைக்கும்போது ஃப்ளாஸ்ஸி பின்னாலிருந்து முழங்கையை சுரண்டினாள். ‘எப்படிப் போயிட்டிருக்கு ரோசெஸ்டர் பிராஜெக்ட்?’ இன்றைய தேதியில் கம்பெனி முழுவதும் இந்த பிராஜெக்டைப் பற்றித்தான் பேச்சு. மின்னசோட்டா அரசின் சிவப்பு நாடா பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புலம்பிவிட்டு வெண்டைக்காய் வழவழப்போடு ‘50-50 சான்ஸில் ப்ராஜெக்டை வென்று விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மேசை மேல் டிரேக் (Drek) ’Product Manager – Rochester Project’ என்ற குறிப்போடு கூடவே ’இராமநாதன் தணிகாசலம்’ தலைப்போடு ரெஸ்யூம்