கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீஜா வெங்கடேஷ்

30 கதைகள் கிடைத்துள்ளன.

கிச்சா

 

  தாமிர பரணி நதி சுழித்து ஓடும் நெல்லை மாவட்ட சின்னஞ்சிறு கிராமம். எல்லா கிராமங்களைப் போலவே இங்கேயும் அக்கிரகாரம் உண்டு. எல்லா அக்கிரகாரங்களைப் போலவே இங்கும் சுமாரான வசதியுள்ளவர்கள் , ஏழைகள் , படு ஏழைகள் அதற்கும் கீழுள்ளோர் என எல்லோரும் உண்டு. அதில் நாலாவது வகையைச் சேர்ந்தவன் தான் நம் கிச்சா. ஒல்லியான தேகம் , முகத்தில் தாடி மீசை , அழுக்கு வேட்டி , எப்போதும் நிலைத்த பார்வை. இது தான் கிச்சா.


மரக்கோணியும் நயினாரும்

 

  நயினார் தன்னுடைய 25 வருடப் பழைய ரேடியோவைத் தட்டிப் பார்த்தார். தலை கீழாக கவிழ்த்துப் பார்த்தார். ம்ஹூம்! எதற்கும் மசியவில்லை அந்த கருவி. கம்மென்றிருந்தது. அவருக்கு தன்னைச் சுற்றிய உலகமே மௌனமாகி விட்டாற் போலத் தோன்ற திகைத்துப் போனார். நயினார், நெல்லை மாவட்ட விவசாயி. வயது எழுபதும் இருக்கலாம் அதற்கு மேலும் இருக்கலாம். உழைத்து உழைத்து உரமேறிய உடலமைப்பு. அரையில் ஒரு வேட்டி , மேலே நைந்து பழசாகிப் போன சிவப்புத் துண்டு. ஊருக்கோ ,


காதலென்னும் தேரேறி…

 

  அந்த சாஃப்ட்வேர் அலுவலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. ஆனந்துக்கு அப்போது உடனே சுதாவைப் பார்க்க வேண்டும் போல இருந்தது. மனதில் போட்டு பூட்டி வைத்த இரண்டு வருடக் காதல். இன்னமும் அவளிடம் சொல்லவில்லை. சொல்லக் கூடாது என்றில்லை. அவள் என்றாவது ஒரு நாள் தன்னோடு சுமுகமாகப் பேசுவாள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து தள்ளிப் போட்டு தள்ளிப் போட்டு இரண்டு வருடங்களாகி விட்டது. ஆனந்துக்கு இன்னமும் அவன் அந்த ஆபீசில் சுதாவை முதல் முதலாகப்


இதயங்களில் ஈரமில்லை !

 

  அது ஒரு ஒர்க்கிங் விமன்ஸ் ஹாஸ்டல். அந்த ஹாஸ்டல் வார்டன் வேணி . நிச்சயமாக ஆறடி உயரம், அதற்கேற்ற பருமன் என்று அவளைப் பார்த்தவர்கள் யாரையும் நிமிர்ந்து பார்க்க வைக்கும் ஆகிருதி. அவளுடைய அந்த ஆகிருதி தான் அவளுக்கு அந்த ஹாஸ்டல் வார்டன் வேலையைப் பெற்றுத் தந்தது. ஆனால் அவள் மனசு பூ மாதிரி லேசானது என்பது வெகு சிலருக்கே தெரியும். வேணியின் சொந்த ஊர் திருநெல்வேலிப் பக்கத்தில் ஏதோ ஒரு கிராமம். சிறு வயதிலேயே


ஒட்டிக் கொண்டது…

 

  அது அவளோடு எப்பொதிலிருந்து ஒட்டிக் கொண்டது என்று அவளுக்குத் தெரியவில்லை. பிறக்கும் போதே ஒட்டியதா? இல்லை பூப்படைந்த பிறகா? என்பதெல்லாம் அவளுக்கு ஞாபகமே இல்லை. இத்தனை நாட்கள் அது ஒட்டியிருந்ததை அவள் உணர்ந்ததாகவே தெரியவில்லை. திடீரென்று ஒரு நாள் அவள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் போதுதான் அது அவளோடு ஒட்டியிருக்கிறது என்ற உணர்வு அவளுக்கு ஏற்பட்டது. வெளியில் வந்த பிறகு எங்கு ஒட்டியிருக்கிறது என்று தேடிப் பார்த்தாள். எதுவும் பிடி கிடைக்கவில்லை. ஆளுயரக் கண்ணாடி முன் பிறந்த