கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீஜா வெங்கடேஷ்

30 கதைகள் கிடைத்துள்ளன.

தாய்மை எனப்படுவது யாதெனின் . . .

 

  மகள் வர்ஷினியின் பிறந்த நாள் ஃபோட்டோக்களை ஒவ்வொன்றாகப் ரசித்துப் பார்த்துக்க் கொண்டிருந்தாள் சாவித்திரி. எல்லா ஃபோட்டொக்களிலும் குதூகலமே உருவாக இவளும் வர்ஷினியும் சிரித்துக் கொண்டிருந்தனர். வர்ஷினி அவள் அப்பாவிற்கு கேக் ஊட்டும் ஃபொட்டோ வந்த போது சற்று தயங்கியது சாவித்திரியின் உள்ளம். “ஏன் இவர் இப்படி உம்மென்றிருக்கிறார்?” யோசித்துப் பார்த்தால் சில நாட்களாகவே ராகவன் மிகவும் குழப்பத்தில் இருப்பதாகத் தோன்றியது சாவித்திரிக்கு. பிறந்த நாளுக்கு உடை வாங்கும் போதும் சரி , கேக்குக்கு ஆர்டர் கொடுக்கும்


ஊவா முள்

 

  வீட்டிற்கு வந்திருந்த தேன்மொழியையும் , பாலுவையும் உபசரித்துக் கொண்டிருந்தாள் என் மனைவி. வந்தவர்கள் யாரெனெத் தெரிந்தும் அவள் செய்த உபசாரங்கள் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. உள் அறையிலிருந்து அம்மா , என் மனைவியைக் கடிந்து கோண்டாள் , “நீ என்ன அந்த நாசமாப் போறவளை வீட்டுக்குள்ள கூப்பிட்டு வெச்சி , காபி குடுத்து சீராடிக்கிட்டு இருக்க? வாசல்லயே நிக்க வெச்சு பேசி அனுப்பியிருக்கலாமில்ல? ஒடம்புல எவ்ளோ தைரியமிருந்தா திரும்பியும் இந்த வீட்டுப் படியேறி வருவா?ஒரு தடவ


பரமன் சேர்வையும் வால் மார்ட்டும்

 

  பீடியை ஆழ இழுத்து ரசித்துப் புகைத்துக் கொண்டிருந்தார் பரமன் சேர்வை. தாமிரபரணிப் பாசன விவசாயி. அதனால் அந்த எழுபது வயதிலும் நல்ல ஆரோக்கியம் . உழைத்து உழைத்து உரமேறிய தேகம். “ஹா.. இந்தப் பீடி இல்லாடா மனுஷன் செத்துப் போவான். இந்தவயசுலயும் வகுரு என்ன பசி பசிக்கி? சோறாக்க எப்படியும் இன்னும் அரை மணியாகும். அப்புறம் டிராக்டர் ஓட்டப் போயிருக்கற மகன் வரணும். சாப்பிட ஒரு மணியாயிரும். அது வர இந்தப் பீடி தான்” என்று


காய சண்டிகை

 

  அவளை நான் முதன்முதலில் பார்த்தது ஒரு மார்கழி மாதத்தில் தான். உடல் பெருத்து உப்பி , வயிறு எது , இடுப்பு எது மார்பு எது என்றே இனம் பிரித்துச் சொல்ல முடியாத ஒரு பெண்ணை மார்கழிப் பனியில் பார்த்தால் என்ன ? இல்லை சித்திரை கடுங்கோடையில் பார்த்தால் தான் என்ன? ஆனால் இந்த கவித்துவமான எண்ணமெல்லாம் அவளை எங்கள் ஊருக்கு வரவழைத்த இயற்கை அல்லது கடவுளுக்குத் தெரிந்திருக்க வில்லை.அவளுக்கு வயது முப்பத்தைந்தும் சொல்லலாம் ,


உயிர் வெளிக் காகிதம்

 

  நான் கோடியில் ஒரு ஜீவன். என்னை நான் ஒருத்தி என்றோ ஒருவன் என்றோ சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்பதில்லை சொல்லிக் கொள்ள முடியாது. இல்லை! நீங்கள் நினைப்பது போல இல்லை!. நான் திருநங்கை அல்ல. அவர்களைத்தான் ஒருத்தி என்று குறிப்பிட முடியுமே. எப்படி ஆண்களில் திரு நங்கைகள் உண்டோ அதே போல் பெண்களிலும் உண்டு என்பது உங்களுக்குத் தெரியுமா? அந்த வகையைச் சேர்ந்தது தான் என் பிறப்பு. பெண்களுக்குரிய எந்த வளர்ச்சியும் இருக்காது. அதே சமயம்