கதையாசிரியர் தொகுப்பு: ஸ்ரீஜா வெங்கடேஷ்

30 கதைகள் கிடைத்துள்ளன.

சமையல் யாகத்தின் பலியாடு

 

  காந்திமதி ஆச்சி வியர்வையே வராமல் சமைத்துக் கொண்டிருந்தார். எப்படி வரும்? விஸ்தாரமான அந்த சமையலறை முழுவதும் குளிரூட்டப்பது. பொரிக்கும் , வதக்கும் புகை வெளியில் செல்ல அடுப்போடு கூடிய புகைபோக்கி. அதுவே விலை இருபதாயிரம் ரூபாயாமே? எப்படியோ அவருக்கு எல்லாமே வசதியாக இருந்தது. இதையெல்லாம் வைத்து அவரை பெரிய பணக்காரி என்று நீங்களாக முடிவு செய்துவிட வேண்டாம். ஒரு மிகப் பெரிய வியாபாரக் குடும்பத்தின் ஏழைச் சமையற்காரி தான் அவர். ஆச்சி என்றதும் செட்டிநாட்டைச் சேர்ந்தவர்


குமார் அண்ணா

 

  மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பக்கத்தில் தான் நான் அவரைப் பார்த்தேன். அசப்பில் குமார் அண்ணாவைப் போல இருந்தது. அந்த ஆள் பஞ்சகச்சம் உடுத்திக் குடுமியோடும் , கையில் தர்ப்பைக் கட்டோடும் போய்க் கொண்டிருந்தார். அண்ணா பலகலைக் கழகத்தில் பொறியியல் படித்த குமார் அண்ணா எதற்கு இந்தக் கோலத்தில் இருக்கப் போகிறார்கள்? அண்ணா இந்நேரம் அமெரிக்காவில் ஏதேனும் ஒரு பெரிய கம்பெனியில் வேலைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நினைத்து விட்டு விட்டேன். ஆனால் அந்த முகம் அப்படியே


நானாச்சு என்கிற நாணா

 

  நான் இப்போது சொல்லப் போகும் கதை நடக்கும் காலகட்டம் 1970கள். எனவே வாசகர்கள் என்னுடன் டைம் மிஷினில் அமர்ந்து அந்த காலத்தை நோக்கி பயணிக்கத் தயாராகும்படி கேட்டுக் கொள்கிறேன். H.G.Wells எனக்கு மட்டும் தனியாக ஒரு கால வாகனம் செய்து கொடுத்திருக்கிறார். நான் அதில் பலமுறை பயணித்திருக்கிறேன். உங்களையும் சில முறை அழைத்துச் சென்றுமிருக்கிறேன் எனவே தயக்கமின்றி ஏறுங்கள். திருநெல்வேலி மாவட்டம்.ஆழ்வார்குறிச்சி கிராமம். கீழத்தெரு எனப்படும் அக்ரஹாரம். கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலும் பிராமணர்கள் தான் வசித்து


மந்தரை

 

  சரயு நதி சலலத்து ஓடிக்கொண்டிருந்தது.அயோத்தி மாநகரம் இன்னும் தூக்கத்திலிருந்து விழித்திருக்கவில்லை.புள்ளினங்கள் கூட முழுமையாகக் கண் விழிக்காத அதிகாலைப்பொழுது.நதியை ஒட்டிய குடிசையின் சாளரத்து வழியாக ஒரு முகம் வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. சுருக்கம் விழுந்து காலம் என்னும் பேராற்றில் எதிர் நீச்சல் போட்டுக் களைத்து வருத்தம் நிறைந்த அந்த முகம் மந்தரையினுடையது.உங்களுக்கு புரியும்படி சொல்வதானால் கூனியுடையது.குழி விழுந்த அந்தக் கண்கள் பரதன் அவன் ஆசிரமத்திலிருந்து வருவதைப் பார்த்து பிரகாசம் அடைந்தன. அந்த நேரத்திலேயே குளித்து முடித்து அக்னிஹோத்ரம்


பாட்டியின் பெட்டி

 

  இந்த அறுபதாவது வயதில் தனியே நின்று ஒரு வீட்டை ஒழித்துக் காலி செய்து கொடுப்பது என்பது கடினமான காரியம் தான். நான் பிறந்து வளர்ந்த கிராமத்து வீட்டைத்தான் இப்போது காலி செய்து கொண்டிருக்கிறேன். அதை விற்பதா? இல்லை வாடகைக்கு விடுவதா என்பன போன்ற விஷயங்கள் இன்னும் தீர்மானிக்கப் படாத நிலையிலிருந்தன. போன மாசம் தன்னுடைய தொண்ணூறாவது வயது வரை அப்பா இந்த வீட்டில் தான் இருந்தார் அம்மாவோடு. இப்போது அம்மா தனியாகி விட்டாள் மேலும் அவளுக்கும்