கதையாசிரியர் தொகுப்பு: ஷ்ருதி

1 கதை கிடைத்துள்ளன.

சிந்துஜா

 

  சார்ஜரில் போட்ட கைபேசியை எடுத்துப் பார்த்ததும் அய்யோ என்றிருந்தது. 100க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் மெசேஜஸ் குவிந்துகிடந்தன. புது குரூப் ஒன்றில் சேர்த்துவிட்டிருக்கிறார்கள். எவன் சேர்த்தான் என்றும் தெரியவில்லை, என்ன குரூப் அது என்றும் தெரியவில்லை. குரூப் பெயர் ‘தொலைந்த சிறகுக’ளாம். கண்றாவிகளை எழுதி கவிதைகளென்று சொல்லிக் கொள்வதே முக்கால்வாசிப் பேருக்கு இப்போது வழக்கமாகிப்போயிற்று. 2013ல் இளங்கலை முடித்தவர்களுக்கான ரீயூனியன் குரூப். முக்கால்வாசி பெயர்களும் முகங்களும் மறந்துபோனதால் ஆர்வமாக ஒவ்வொரு ஹாய் ஹலோவின் ப்ரொஃபைல் படத்தையும் ஆராய்ச்சி