கதையாசிரியர் தொகுப்பு: ஷோபாசக்தி

1 கதை கிடைத்துள்ளன.

ரூபம்

 

 இவன் வீட்டின் வாசற்படியை அடைந்தபோது, வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ஷே உரையாற்றிக்கொண்டு இருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு, தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். ‘உங்களைக் கௌரவமாகவும் சுய மரியாதையுடனும் வாழவைப்பது, என்னுடைய பொறுப்பு. நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன்’ என ராஜபக்ஷே தமிழில் பேசிக்கொண்டு இருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்ஷேவின் முகம் நிறைத்து இருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும், நவீனமாகவும், துல்லியமான