கதையாசிரியர் தொகுப்பு: ஷமிலா ஜானகிராமன்

1 கதை கிடைத்துள்ளன.

தூது

 

  பிள்ளையார்பட்டி கோயில் கல்யாண மண்டபம் களைகட்டி இருந்தது. கெளரி அக்காவுக்கும் சங்கர் மாமாவுக்கும் கல்யாணம். தாலி கட்டுவதற்கு அரை மணி நேரம் இருந்தபோது அந்தச் செய்தி வந்தது. சங்கர் மாமாவின் சித்தப்பா மும்பாயில் இறந்துவிட்டார். அவசர அவசரமாக கெளரி அக்காவின் அப்பாவிடம் சங்கர் மாமாவின் அப்பா ஏதோ சொல்ல முன்னவரின் முகம் வாடியது. போட்டது போட்டபடி கிடக்க சங்கர் மாமாவின் குடும்பத்தினர் மும்பாய் செல்ல ஏற்பாடுகள் செய்யத் துவங்கினார். கெளரி அக்கா அழுதாள். பெரியம்மா சமாதானம்