கதையாசிரியர் தொகுப்பு: வ.ஸ்ரீநிவாசன்

13 கதைகள் கிடைத்துள்ளன.

ஓரு அந்தக் காலத்துக் காதல் கதை

 

  தமிழ்வாணன் மாடியிலிருந்து இறங்கி வருகையிலேயே எதிர் வீட்டு வாசலில் பூஷணம் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து விட்டான். நல்ல வேளையாக கம்பிகளுக்குப் பின்னால் திண்ணையில் மீசைக்காரரைக் காணோம். அகம் நிறைந்து முகம் மலர சிரித்தான். பூஷணம் முகத்திலும் புன்னகை. யாராவது பார்த்து விட்டால்… என்று உறைந்த சிரிப்போடு நடக்க ஆரம்பித்தான். தமிழ்வாணன் சராசரி உயரம். எண்ணை போட்டு கர்லிங் பண்ணிக் கொண்ட கிராப். பென்சிலால் வரைந்தது போல் சரியாக வெட்டப் பட்ட மீசை. வெள்ளைச் சட்டை. பேன்ட்.


இராமேஸ்வரமும், சனீஸ்வரனும்

 

  அருணாசலம் தன் முப்பது வருட உத்தியோக காலத்தில் ஒரு தடவை கூட பயண விடுமுறைச் சலுகையை உபயோகித்ததில்லை. இந்தத் தடவை விட்டால் போச்சு. ரிடையர் ஆவதற்கு முன், ‘இந்த சர்க்காருக்கு உழைத்து, உழைத்து ஓடானதற்கு என்னத்தைக் கண்டோம்’ என்று அடிக்கொருதரம் அலுத்துக் கொள்ளும் மனைவி கோகிலத்தையும், பள்ளி அரையாண்டு விடுமுறையில் போரடித்துக் கொண்டிருந்த பேத்தி சாந்தாவையும் எங்காவது கூட்டிக் கொண்டு போக வேண்டும் என்று முடிவு பண்ணினார். பையனும், மருமகளும் பேத்தியை அனுப்புவதற்கு ஓகே சொல்லியாகி


உயிரிழை

 

  பூதம் அவனைக் குறித்துச் சொல்லியது: ” நீ சாகணும், நான் பார்க்கணும்”. அது அவனை நேராகப் பார்த்துச் சொல்லியிருந்தால் கூட அவனுக்கு அவ்வளவு பயமாக இருந்திருக்காது. அது சுவரைப் பார்த்து சொல்கிற மாதிரி, போஸ்டரில் இருப்பவனைப் பார்த்து சொல்கிற மாதிரி, தூரத்தில் போகிறவனைப் பார்த்துச் சொல்கிற மாதிரி, தான் கனவில் கண்டவனை நினைத்துச் சொல்கிற மாதிரி சொன்னதுதான் அவனுக்குப் பீதியையும் கவலையையும் உண்டு பண்ணியது. அந்த பூதம் ரொம்ப நாட்களாக அங்கு இருக்கிறது. வேலைக்காரி பெருக்கும்போது