கதையாசிரியர் தொகுப்பு: வ.அ.இராசரத்தினம்

14 கதைகள் கிடைத்துள்ளன.

பாலன் வந்தான்

 

 “எங்கள் வீட்டுக்குப் பாலன் வருவானா?” என்று ஆயிரத் தடவை கேட்டுவிட்டாள் பிலோமினா. அன்று விடிந்தால் நத்தார்த் திருநாள். “நிச்சயமாக வருவார்” என்ற பதிலைத்தான் திருப்பித் திருப்பிச் செல்லிக்கொண்டிருந்தாள் அம்மா. “அவர் எப்போது அம்மா வருவார்?” “இரவைக்குத்தான் வருவார்.” “அவர் வந்தா எனக்குக் காட்டுவாயா அம்மா?” “ஓ, கட்டாயமாகக் காட்டுவேன்.” “அவர் எப்படி அம்மா இருப்பார்?” தம்பியைப்போல அழகாக இருப்பார்.” “அவர் என்னோடு விளையாட வருவாரா?” “அவரும் உன்னைப்போலக் குழைந்தை தானே. விளையாடக் கட்டாயமாக வருவார்”. “ஏன் அம்மா


கலைஞனும் சிருஷ்டியும்

 

 புத்ர, நத்தையின் வயிற்றிலும் முத்துப்பிறக்க லாம். இலக்கியம், சிற்பம், சித்திரம் போன்ற அருங் கலைகளும், ஓரோர் வேளை மக்களிற் கீழானவன் என்று மதிக்கப்படுபவர்களிடத்திருந்தும் பிறக்கின்றன. கலை ஞர்களும் இரத்தமும் – சதையும், உள்ளமும் – உணர்வும் கொண்ட மனிதர்களே. ஆசாபாசங்கள் அவர்கட்கும் உண்டு. அவைகளிற் சிக்குண்டு அவர்களும் தவறிவிடலாம். ஆனால் அதற்காக அவர்கள் கலாமேதையை மறுத்துவிட முடியுமா? ஏன், கிழக்கு நாட்டுச் சித்திரக் கலையின் பெருமைக்குச் சான்றாக, அக்கலையின் இலட்சியமாக மிளிரும் ‘சீகிரியா’ச் சித்திரங்களை எடுத்துக் கொள்வோமே.


அறுவடை

 

 ‘தையும் மாசியும் வையகத்துறங்கு’ என்ற வாக்கியம் ஆரம்பப் பாடசாலைக்குத் தானும் சென்றிராத அப்துல்லாவிற்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், ஊருக்குள்ளே இருக்கும் தன்குச்சிலே, வழுதி கூடலிற் தங்கிய சத்திமுற்றப்புலவரைப் போலக் கையையும் காலையும் முடக்கிக் கொண்டு போர்த்துக் கிடந்தால் இதமாக இருக்கும் என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவனால் அப்படிப்படுத்துறங்க முடியுமா? ‘உழுபவனுக்கே நிலம் சொந்தம்’ என்ற தத்துவத்தைக் கொள்கையளவிற் கூடக் கேள்விப்பட்டிராத ‘புண்ணிய பூமி’ அந்தப் பிரதேசம். அந்தப் பிரதேசத்திலே கண்காணாத போடியாரான கோணேசர் ஆக்ரமித்துக்


மனிதன்!

 

 அவளுடைய பெயர் எனக்குத் தெரியாது. அவளுடைய மேனி புடம் போட்ட தங்கம் போல இருந்ததினாலும், சௌகரியத்திற்காகவும் நான் அவளைத் தங்கம் என்றே அழைக்கிறேன். தங்கம் அவனை இராசா என்றழைத்த காரணத்தினால் நானும் அவனை இராசா என்றே எழுதுகிறேன். இராசாவுக்கு எங்கே என்ன வேலை என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அவர்கள் வாழ்க்கையை உற்றுக் கவனித்ததில் அவன் எங்கோ ஓர் தொழிற்சாலையில் நெஞ்சு முறிய, வியர்வை சொட்ட, வேலை செய்கிறான்; வாழ்க்கைக்குப் போதாத வருமானம் என்பது தெரிந்தது. அன்றும்,


பாசம்

 

 ஆயிரத் தலைகளையும் உயர்த்திக்கொண்டு சீறி வரும் நாகேந்திரனைப் போலக் கடல் பொங்கிக் குமுறியடித்துக்கொண்டிருந்தது. அநாதியான கடவுளைப்போல ஓயாது குமுறியடித்துக் கொண்டிருக்கும் பொங்குமாங் கடலின் இரைச்சலோடு போட்டியிட்டுக்கொண்டு, மரக் கலந் தரும் செல்வப்பொருட்டால் தாம் பிறந்த நிலத்தை விட்டுப் போந்த பரதேசிகள் பலரின் குரலும் சேர்ந்து ஒலித்தது. பொன்னும் மணியும், தூசுந்துகிரும், பூவும் புகையும், சுண்ணமுஞ் சாந்தமும் விற்பவர்கள் வீதியைப்பரப்பிக்கொண்டு வெகு வேகமாகப் போய்க்கொண்டும், வந்து கொண்டும் இருந்தனர். யவனர், துலக்கர், மிலேச்சர், தமிழர் அப்பப்பா! எத்தனை சாதிகள்!!


தோணி

 

 கரு நீலமாகப் பரந்து கிடக்கும் வங்காள விரிகுடா வைப் பார்த்தவாறு எங்கள் கிராமம் இருக்கிறது. கிரா மம் என்றா சொன்னேன்? பூமி சாத்திர, சமூக சாத்திர நியதிப்படி கிராமம் என்றால் எப்படியிருக்கு மென்று எனக்குத் தெரியாது. சோழகக் காற்றுச் சரசரத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களடியிலே அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏறக்குறைய முப்பது ஓலைக் குடிசைகள் இருக்கின்றன. ஒரு குடிசையிலிருந்து மற்றக் குடிசைக்குப் போகப் பெண்களின் தலைவகிடு போல ஒற்றையடிப் பாதைகள் செல்கின்றன. இந்தக் குடிசைகள் எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கிராமம்


பெண்

 

 ஆநந்தனுக்கும் திலகத்துக்கும் கல்யாணமாகி இர ண்டு மாதங்கள் கூட ஆகியிருக்காது. ஆதர்ச தம்பதிகள் என்று சொல்வார்களே அந்தச் சொற்றொடருக்குப் பொருளாகவும் விளக்கம்போலவும் அவர்கள் வாழ்த்தார்கள். ‘கல்யாணமானதும் காதல் கருகிவிடுகிறது’ என்று குறும்புத்தனமாகவோ அல்லது அர்த்தத்தோடோ எழுதும் இந்த இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு எழுத்தாளர்கள் சிலர் வெட்கப்படும்படியாக அவர்கள் வாழ்க்கை அமைந்திருந்தது. அக்கம் பக்கத்துப் பெண்கள் அவள் என்ன சொக்குப் பொடி போட்டாளோ?’ என்றுகூடக் குசுகுசுத்தனர். இதனை அவர்கள் அறிந்தார்களோ என்னவோ அவர்கள் இன்பமாக வாழ்ந்தார்கள். அன்று……. மத்தியானச்


குடிமகன்

 

 தம்பலகாமம் இரண்டு விஷயங்களுக்குப் பெயர் பெற் றிருந்தது. முதலாவதாகக் கல்வெட்டுடைய தென் கைலைநாதனான பிறவாத பெம்மான் கோயில் கொண்டது அங்கு இரண்டாவதாகக் குளக்கோட்டன் கட்டிய கந்தளாய்க் குளத்து நீர் பாய்வதும் அந்தப் பகுதியிற்தான். இந்தப் பெருமைகளைக் கொண்ட தம்பலகாமம் இவ்விரண்டு பெருமைகளிலும் மெய்மறந்து போய் வெகு காலம் தூங்கிற்று. குளக்கோட்டன் மூட்டுத் திருப்பணியைப் பறங்கிபிடித்து, அதன்பின் அது பூனைக் கண்ணன், புலிக்கண்ணன் கைக்கு மாறிய விஷயங்கள் கூடத் தெரியாது. அத்தனை நெடுந் தூக்கம். ஊருக்கு மேற்கே –


ஒற்றைப் பனை

 

 பக்கத்துக் காணிக்குள் இருந்த பனையிலிருந்து பனம்பழம் ஒன்று எங்கள் வீட்டு முற்றத்திற் பொத் தென்று விழுந்தது. தாழ்வாரத்திற் கிளித்தட்டு விளை யாடிக் கொண்டிருந்த நான் ஓடிப்போய் அந்தப் பழத்தை எடுத்துக் கொண்டு வந்து அதன் தோலை இழுத்துப் பிய்க்கத் தொடங்கினேன். அப்போது விறாந்தை மூலை யிற் செபமாலையை உருட்டிக் கொண்டிருந்த என் பாட்டி தன் பஞ்சடைந்த கண்களை அகலத் திறந்து கொண்டே எங்காலடா மோனை பனம்பழம்?” என்று கேட்டாள். ”அந்த மரத்திலிருந்து விழுந்திச்சு” என்றேன் நான். பாட்டி


கோகிலா

 

 மங்கி மடியப்போகும் விளக்கு பக்குப் பக்’ கென்று தன் கடைசிச் சுவாலையை வீசுவது போல, ஆவணிமாத த்து அந்தி வெய்யில் தன் கடைசிக் கிரணங்களை முற்ற த்திற் சுளீரென்று அடித்துக் கொண்டிருந்தது. சாப்பி ட்டு விட்டுச் சுக நித்திரை செய்து கொண்டிருந்த கோகிலா எழுந்துவிட்டாள். ஒரே புழுக்கமாக இருந்தது அவளுக்கு. அவசர அவசரமாக முகத்தைக் கழுவித் தன்னை என்றைக்கும் போல அலங்கரித்துக் கொண்டாள். பின்னர் தன் பெரிய பங்களாவின்’ பரந்த முற்றத்தில் போடப்பட்டிருந்த நாற்காலியில் புத்தகமும் கையுமாக