கதையாசிரியர் தொகுப்பு: வை.கோபாலகிருஷ்ணன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

சோறு கண்ட இடமே சொர்க்கம்

 

  மணி நான் வேலை பார்க்கும் அரசாங்கத் தொழிலகத்தில் உள்ள உணவகத்தில் தற்காலிக உதவியாளராகச் சேர்ந்தது ஓராண்டுக்குள் தான் இருக்கும். மேஜைகளைச் சுத்தம் செய்வது, சாப்பிட்டத் தட்டுகளை கழுவுவது முதல், உணவுப்பதார்த்தங்கள், சிற்றுண்டி முதலியன தயாரித்து, பரிமாறுவது வரை அனைத்து வேலைகளையும், சுத்தமாகவும், சுறுசுறுப்பாகவும், மிகவும் பய பக்தியுடனும் செய்து முடிக்கும் திறமை உள்ளவன். ஏழ்மைக்கு எடுத்துக்காட்டாக அவன் திகழ்ந்தாலும், எல்லோரிடமும் அன்புடனும் நாகரீகத்துடனும் பழகி வந்தான். என்னிடம் ஒரு அலாதிப் பிரியம் வைத்திருந்தான். ஒரு நாள்


தங்கமே தங்கம்

 

  தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறுவதில், செருப்பு தைக்கும் சங்கிலியாண்டிக்கு ஒரே வருத்தம். ஒரு அரைப்பவுன் தங்கமும், ஒரு நல்ல சேலையும் வாங்கப்பணம் சேர்ந்துவிட்டால் போதும். யாராவது ஒரு பொண்ணைப் பார்த்து எளிமையான முறையில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கணக்குப் போட்டிருந்தான். இவனிருந்த ரோட்டின் எதிர்புறம் ஒரு வயதானவர் செருப்புத் தைக்கத் தொடங்கியதிலிருந்து இவனுக்குக் கிடைத்து வந்த சொற்ப வருமானமும் குறைய ஆரம்பித்தது. அன்று பெய்த மழையினால், கடுமையான ஜுரம் கண்டு நடுநடுங்கிக் கொண்டிருந்தார்


சூழ்நிலை

 

  பிஸினஸ் விஷயமாகச் சென்னைக்கு வந்திருந்த மஹாலிங்கத்தின் செல்போன் சிணுங்கியது. “குட் மார்னிங்…ஜெயா….சொல்லு” என்றார், டெல்லியிலிருந்து பேசும் தன் ஒரே அன்பு மகளிடம். ஜெயாவுக்கு குரல் நடுங்கியது. அவள் அழுது கொண்டே பதட்டமாகப் பேசுவது இவருக்குப் புரிந்தது. “அப்பா…..தாத்தா சென்னையிலே ஒரு சாலை விபத்திலே இறந்து விட்டாராம். இப்போதுதான் போன வந்தது. அவரின் உடல் ‘ஜீ.எச்’ இல் உள்ளதாம். அம்மா ரொம்பவும் அழுது புலம்பிண்டு இருக்கா. ஈவினிங •பிளைட்டில் அம்மாவை ஏற்றி அனுப்பட்டுமா?” என்றாள். மஹாலிங்கம் சிரித்துக்கொண்டே


தாயுமானவள்

 

  திருச்சி தெப்பக்குளம் வாணப்பட்டரைத் தெரு மாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா. மலையைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் மழை பெய்ததுபோல நீர் தெளிக்கப்பட்டு கலர் கலராகக் கோலங்கள் போடப்பட்டுள்ளன. ஆங்காங்கே மாவிலைத் தோரணங்களுடன் தண்ணீர்ப் பந்தல்கள். பானகம், நீர்மோர், உப்புடன் பாசிப் பருப்பு கலந்த வெள்ளரிப் பிஞ்சுக் கலவை – பக்தர்களுக்கும் பசித்துக் களைத்து வருபவர்களுக்கும் இலவச விநியோகம். வடக்கு ஆண்டார் தெரு மேற்கு முனையில், ரோட்டோரமாகப் பெரிய பெரிய அண்டாக்களிலும், குண்டாக்களிலும், கஞ்சி காய்ச்சப்பட்டு அன்னதானம்.


அட்டெண்டர் ஆறுமுகம்

 

  நூற்றுக்கணக்கான பேர்கள் பணியாற்றும் அந்த அலுவலக வேலை நேரம் முடிந்து அநேகமாக எல்லோரும் வெளியேறிய பின், மிகவும் தயங்கியவாறே, மேனேஜர் அறைக்குள் மிகவும் பவ்யமாக நுழைந்தான் அட்டெண்டர் ஆறுமுகம். வயது ஐம்பத்தாறு. சற்றுக் கருத்த நிறம். ஒல்லியான தேகம், நெட்டையான உருவம், ஒடுங்கிய கன்னங்கள், முரட்டு மீசை, காக்கியில் யூனிஃபார்ம் பேண்ட் சட்டை, கழுத்துக் காலரில் எப்போதும் ஒரு கர்சீஃப், அடுத்தவருக்கு இரக்கம் ஏற்படுவதுபோல ஒருவிதப் புன்னகையுடன் கூடிய ஏக்கப் பார்வையும், கூழைக் கும்பிடும்தான் ஆறுமுகத்தின்