கதையாசிரியர் தொகுப்பு: வேல.இராமமூர்த்தி

3 கதைகள் கிடைத்துள்ளன.

கறி

 

 தேன் கூட்டிலே நெறிகிற ஈ. மாதிரி, பஸ் நிலையத்தில் ஜனக் கூட்டம். வருசா வருசம் சித்திரை பதினெட்டுக்கு சோலைசாமி கோயில் திருவிழா. சனம் வெள்ளமாய் பொங்கி விட்டது பொங்கி. எத்தனை பஸ் வந்து அள்ளிக் கொண்டு போனாலும் கூட்டம் குறைந்த பாடில்லே. ஒழுங்கு பண்ண ‘போலீஸ் லத்தி அடி’. அவ்வளவும் கறி திங்க வந்த கூட்டம். காரேறி, மாட்டு வண்டி கட்டி. நடையாய் நடந்து கறிக்கு ஆசைப்பட்டு வந்த சனங்கள் தான். ஒரு கிடாயா? ரெண்டு கிடாயா?


கவிஞனின் முண்டாசுக்குள் ஒரு கருநாகம்!

 

 எட்டையபுரம் சுப்ரமண்ய பாரதி நடந்தே வந்தார். நேற்று புறப்பட்டதில் இருந்து கை வீச்சு குறையாத நடை. களைப்புத் தெரியாமல் இருக்க காற்றோடும் காட்டுக் குருவிகளோடும் உரையாடிக்கொண்டு வந்தார். குயில்களோடு சேர்ந்து பாடிக்கொண்டும் வந்தார். கடந்து வந்த ஒவ்வோர் ஊர்க் கிளிகளும், குருவி, காகங்களும் அடுத்த ஊர் எல்லை வரை உடன் வந்து, பிரிய மனம் இல்லாமல் தத்தம் எல்லைக்குத் திரும்பின. காடல்குடி மாரிச்சாமி நாயக்கர் வழி மறித்து அழைத்துப் போய் குடிக்கக் கொடுத்த இரண்டு செம்பு கம்பங்கஞ்சி,


இருளப்ப சாமியும் 21 கிடாயும்

 

 இருளாண்டித் தேவரை உப்பங்காற்று ‘சிலு சிலு’ என உறக்காட்டியது. முளைக் கொட்டுத் திண்ணைக்கு என்று ஒரு உறக்கம் வரும். நெஞ்சளவு உயரமான திண்ணை. நடுவில் நாலு அடுக்கு சதுரக் கும்பம். தப்பித் தவறி கால் பட்டுவிட்டால் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொள்ள வேண்டும். நாலு கல்தூணில் நிற்கும் ஒட்டுக் கொட்டகை. கிழக்குப் பாதையோரம் தரையோடு முளைத்த பத்ரகாளி, இளவட்டஙக்ள் பத்ரகாளிக்குப் பயந்து இரவு நேரங்களில் தப்பிலித்தனம் பண்ணுவதில்லை. இந்த விஷயத்தில் பெரியாளுகள் ரொம்பக் கண்டிஷன். ’எளவட்ட முறுக்கிலே