கதையாசிரியர் தொகுப்பு: வெ.சுப்ரமணியன்

28 கதைகள் கிடைத்துள்ளன.

நம்பிக்கை நட்சத்திரம்

 

 கிட்டத்தட்ட ஒரு மாதமாச்சு. டீசர் வெளியான நாளிலிருந்தே எப்படியும் முதல் நாள் தலைவர் படத்தைப் பார்க்கணும் என்ற வெறி ஆறுமுகத்தைப் பிடித்து ஆட்டியது. கூட வேலை பார்க்கும் ஷகாபுதீனிடம் சொல்லி டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்த்திருந்தான். ஷகாபுதீன் இவன் ஊர்க்காரர்தான். சென்னைக்கு வந்து பல வருடங்கள் சர்வீஸ் போட்ட ஆள். பார்க்காத வியாபாரமில்லை. பழகாத மனுசரில்லை. படிப்பு என்னவோ பத்தாவதுதான். “லே, பத்தமடையிலெ கூட என்னத்தெரியாதவன் இருப்பாண்டே, ஆனா இந்த மெட்ராசில என்னெயத் தெரியாதவன் இருக்க மாட்டான்”


நடைபாதை வாழ்வு

 

 அது நகரத்தின் மிகப் பிரதானமான சாலையில் அமைந்துள்ள ஒரு கட்டிடம். பார்க்கவே நல்ல பணக்காரக் களையுடன் புதிதாக வண்ணம் அடிக்கப்பட்டு விளங்கியது. வாசலில் சிவப்பு வண்ண கூண்டுக்குள் வட இந்திய வாயிற்காவலர், பச்சை நிறச் சீருடையில் ஜாவ், ஜாவ் என்றபடி பிளாட்பாரத்தில் நிற்பவர்களைக் கூட அதிகாரமாகத் துரத்திக்கொண்டிருந்தார். அடிக்கடி பல வகையான கார்களில் அலங்காரமாக நடுவயது பணக்கார பெண்மணிகள் வந்த வண்ணம் இருந்தனர். எதிரே பிளாட்பாரத்தில் பக்கத்து மதில் சுவற்றில் ஒரு புறமும், சாலையில் மறுபுறமும் ஆக


மிருகக் காட்சி சாலை

 

 அது பெருநகரத்தின் மிகப் பெரிய மிருகக் காட்சி சாலை. எப்பொதும் வண்ணவண்ணச் சீருடைகள் அணிந்த ஏதாவது ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியின் மாணவர்கள் கூட்டமும் அவர்களை “ஏய், வரிசையாய் போ”, என்ற வாத்திமார்கள் பிள்ளைகளை அதட்டும் சப்தமும் அடிக்கடி கேட்டபடி இருக்கும். அன்று அந்த மிருகக் காட்சி சாலையில் எக்கச்சக்க கூட்டம். கூட்டத்தை விலக்க ஹார்ன் அடித்தபடி மூடிய அந்த மாமிச வேன் வந்து நின்றது. கதவு திறக்கும் முன்பே ஓடியும் பறந்தும் வந்தன தெரு நாய்களும், காகங்களும்.


மலரும் முட்களும்

 

 “மலரு…. ஏட்டி, மலரு……. காலங்காத்தால பொட்டப் புள்ள இப்டி தூங்கனா வூடு வெளங்கிடும். எழுந்து வேலையப் பாரு” என்று தாயின் குரல் கேட்டதும் “ஆம்ம்மா” என்றபடி வாரிச் சுருட்டி எழுந்த நம் கதா நாயகி தங்க மலருக்கு மிஞ்சிப் போனால் 18 வயதிருக்கும். பேர் தான் தங்க மலர் ஆனா இந்த மலர் இருப்பது என்னவோ லாரிகள் அடிக்கடி திருட்டுத்தனமாக வந்து கழிவு நீரை கொட்டிச் செல்லும் மங்காத்தா ஏரிக்கரையில் தான். அது புதுமை பித்தனின் பொன்னகரத்திற்கு


சண்முகவடிவு

 

 ‘கண்டதைச் சொல்லுகிறேன், உங்கள் கதையைச் சொல்லுகிறேன்.இதைக் காணவும், கண்டு நாணவும் உமக்குக் காரணம் உண்டென்றால் அவமானம் எனக்கு முண்டோ’? இந்தப் பாடல் வரிகள் பல நாட்கள் என்னை அவஸ்தைப் படுத்திய பல சம்பவங்கள் குறித்த வரிகளாக உள்ளத்தில் பதிந்தது. அந்த அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லை.மாற்றுப் பணியில் தொடர்ந்து ஓராண்டாக தலைமை ஆசிரியர் இருந்த நிலையில் பள்ளியின் மிக மூத்த ஆசிரியர் முருகன் பொறுப்புத்தலைமை ஆசிரியராக இருந்தார். அவர் ஒன்றும் மோசமான மனிதர் இல்லை. தவறு


உயிர் மூச்சு

 

 அந்த அறை மிதமாகவே குளிரூட்டப்பட்டிருந்தது.மெல்லிய காதைத் துளைக்காத இசை வழிந்து பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது. முக்கிய கூட்டங்கள் எல்லாம் கூட்டப்படும் அந்த ஐந்து நட்சத்திர விடுதியின் மூன்றாம் மாடி அறைதான் இப்போது நாம் காண்பது. விடுதியின் ரம்பைகளும் ஊர்வசிகளும் விலையுயர்ந்த பட்டுப் புடவை உடுத்தி, நுனி நாக்கு ஆங்கிலத்தில், கூட்டத்திற்கு வருகை கொண்டிருந்த வயதான மற்றும் நடுத்தர வயது, தொப்பை பிரமுகர்களை மலர்ந்த முகத்துடன் இருகரம் குவித்து வரவேற்றுக் கொண்டிருந்தனர். பயணக் களைப்பில் இருந்த தலைவர்களுக்கு அருமையான வெளிநாட்டு


எச்சில் சோறு

 

 அவரை நான் பார்த்தது காஞ்சிபுரத்தில் நெல்லுக்காரத் தெருவில் ஒரு சாக்கடை அருகில். இதில் என்ன அதிசயம் இருக்கிறது. சாக்கடை அருகில் குடிபோதையில் உருளும் மனிதர்களை தினமும் காண்பதெல்லாம் எங்களுக்குப் புதிய விஷயம் இல்லை என்பவர்களுடன் முரண்படுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை. இந்த மனிதன் கட்டியிருந்தது உயர்தரப் பட்டு வேட்டி. மேல்துண்டும் பட்டு. புத்தம் புதிது. பக்கத்தில் குவிந்து கிடந்த துண்டு சிகரெட், பீடித் துண்டுகள். ஏதோ தீவிர யோசனையில் இருப்பது போன்ற தோற்றம், அடிக்கடி ஒரு வெடிச்


பாவனாசம்

 

 அம்பாசமுத்திரம் வண்டி மறிச்ச அம்மன் கோவிலை ரோட்டோரமா சைக்கிளில் தாண்டினான் பாவனாசம். மனசுக்குள் பயந்தபடி தாயே காப்பாத்து கெட்ட கனா தந்திராதே, நோய் ,நொடி தந்திராதே என்று வேண்டுதல் முடித்தான். பாவனாசத்திற்கு ஆத்துப்பால இசக்கியம்மன் மேல அத்தனை பயம். கல்யாணி டாக்கீஸில் இரண்டாம் ஆட்டம் பார்த்திட்டு கல்லிடைக்கு போக பயந்து முத்தாச்சி வீட்டிலயே தங்கிடுவான். குறிப்பன் குளம் தாண்டி அப்பத்தா வீட்டுக்கு ஆலங்குளம் போகையில வழி முழுக்க அருவா தூக்கிய சுடலைமாட சாமிகளை கண்டா அன்னிக்கு சிவராத்திரி