கதையாசிரியர் தொகுப்பு: விமலாதித்த மாமல்லன்

7 கதைகள் கிடைத்துள்ளன.

யாசகம்

 

  தொலைபேசி மணி அடித்தது. மனைவி எடுத்தாள். யாரோ பெரியவர். உங்கள் பெயர் சொல்லிக் கேட்கிறார் என்று கிசுகிசுத்தபடி கொடுத்தாள். நமஸ்காரம். நான் வெங்கடேச ஐயர் பேசறேன். நீங்க என்னைவிடப் பெரியவாளா இருந்தா நமஸ்காரம் இல்லேன்னா ஆசீர்வாதம். எனக்கு வயசு எழுவத்தி மூனு என்ற குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது. சின்னவன்தான் சொல்லுங்கோ நீங்க ஸ்ரீநிவாசன்தானே? ஆமாம். போன வருஷம் எம் பொண்ணுக்கு கேகே நகர்ல பெரிய ஆக்சிடெண்ட் ஆயிடுத்து. பொழச்சதே பெரிய விஷயம். கிட்டத்தட்ட ஒருவருஷமா


பார்வை

 

  எப்போது ஓட்டலுக்குப் போனாலும் சுவரோர இருக்கையாகப் பார்த்து உட்காருவதே கிருஷ்ணமூர்த்தியின் இயல்பு. அலுவலக சகாக்களுடனோ அல்லது குடும்பத்துடனோ போகும்போதுகூட உடகாரும் இடத் தேர்வில் தமக்கே முன்னுரிமை என்பதை எழுதாத சட்டமாகவே அவர் கடைபிடித்து வந்தார். அப்படி அமையாத சமயங்களில் பெரும்பாண்மையான இடம் தம் பார்வையில் இருக்கும்படியாகப் பார்த்துக் கொள்வார். தம் கண்ணில் எல்லோரும் படவேண்டும் என்பதுபோக தாம் எல்லோர் கண்ணிலும் படவேண்டும் என்பதுவும் அவரது வாழ்வின் ஆதார விருப்பங்களில் ஒன்று. மாலையில் மழைபெய்து நின்ற பிறகு,


திறம்

 

  கொஞ்சம் சும்மா இருக்கிறாயா! முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டுவிட்டாள் மனைவி. ஆயிற்று அடுத்த அரைமணி நேரத்திற்கு, எல்லாப் பொருட்களுக்கும் கால்முளைத்து தரையை மேசையை அடுக்களை மேடையை என்று செய்யப்போகிற துவம்சத்திற்குத் தம்மை தயார் படுத்திக்கொண்டார் ராவ். நாளிதழில் கார் விளம்பரம் காண நேரும்போதெல்லாம் இப்படி ஆகிவிடுகிறது. அநேகமாக எல்லா நாட்களிலும் ஏதாவது ஒரு காருக்கு விளம்பரம் வந்துவிடுகிறது. பத்திரிகைகளில் இருக்கும் அளவிற்கு தாராளமான இடம் சாலைகளில் இல்லை என்பது ஏன்தான் கார் தயாரிக்கும் நிறுவனங்களுக்குத் தெரிவதில்லையோ. பார்க்கப்போனால் யாருமே


இலை

 

  கொல்லையில் கறிவேப்பிலை மரம் தளதளவென்று நின்று கொண்டிருந்தது. தெருவிலிருந்து பார்ப்பவர்கள், அந்த வீட்டில் அப்படியொரு மரம் இருக்கக்கூடும் என்று யூகிக்க முடியாது. வீட்டிற்கு ஸ்நோஸிம் அடித்து இருந்தது. வீட்டின் ஒவ்வொரு அங்குலத்தையும், சமைந்திருக்கும் பெண்ணின் தாயாரைப்போல, ரொம்ப ஜாக்கிரதையுடன் கண்காணித்து வந்தாள் மாமி. வீட்டின் வெளிச்சுவரில் போஸ்டர்களை யாரும் ஒட்டிவிடாமல் இருப்பதற்காக கருங்கல் ஜல்லி பதித்து, அதற்குமேல் ஸ்நோஸிம் அடித்துவைத்தாள். தேர்தல் சமயத்தில், மாமியின் பாராவையும் மீறி ஒவ்வொரு கட்சிக்காரர்களும் தத்தம் சின்னங்களை சுவரில் எழுதிவிட்டார்கள்.


போர்வை

 

  ராவ்ஜி பல் தேய்த்துக் கொண்டிருந்தார். கீழே பத்தர் வீட்டிலிருந்து ‘ஐயோ மாமா’ என்ற பெருத்த அலறல் கேட்டது. ராவ்ஜியை இந்தக் கூக்குரல் கொஞ்சம் அதிகப்படியாகவே திடுக்கிட வைத்து விட்டிருக்க வேண்டும். கையிலிருந்த பிரஷ் தவறிக் கீழே விழுந்துவிட்டது. அதை தரையில் விழுந்து விடாதபடி பிடிப்பதற்கு எடுத்துக் கொண்ட முயற்சியில் கைகளிலும் வேஷ்டியிலும் நுரை பூசிக்கொண்டது. பல் தேய்ப்பை அத்துடன் முடித்துக் கொண்டு அவசரமாய் வாய் கொப்பளித்து சட்டை அணிந்து கொண்டு படிகளில் இறக்கிக் கீழே ஓடினார்.