கதையாசிரியர் தொகுப்பு: விமலன்

42 கதைகள் கிடைத்துள்ளன.

சோப்பிடலின் உருதாங்கி…

 

  மதயானை கடையில்தான் சோப்பு வாங்கினான், மகன் யானை என்பதே மறுவி மதயானை ஆகிபோனது என்று சொல்வார்கள் கடைக்காரைப்பற்றி அந்த ஊர்க்காரர்களிடம் கேட்கிற போது,அவர் பிறந்த போது பிரசவம் பார்த்த தாதி உன் மகன் யானை ஓங்குதாங்காக வருவான், மகன் இனி யானை போல எனதாதி சொன்ன சொல் மறுவி,,,,மறுவி இன்று மதயானையாய் நிற்கிறது, உள்ளபடிக்குமாய் இது மதயானையின் அண்ணன் கடை.பலசரக்கு தவிர மற்ற தெல்லாம் இங்கு கிடைத்தது, என்ன சோப்பு வேணும்…கடைக்காரர். குளியல் சோப்பு…இவன், குளியல்


தூரங்களின் விளிம்புகளில்…

 

  தூரம் என்ன இருந்து விட முடியும் பெரிதான தூரம் , நன்றாக இருந்தால் ஒன்றரை அல்லது இரண்டு கிலோ மீட்டருக்குள்ளான இடைவெளியே… பாலம், அது கடந்து பெட்ரோல் பங்க்,புது பஸ்டாண்ட், வொர்க் ஷாப்,அது கடந்து யார் தடுத்தும் நில்லாமல் வந்து விடுகிற கொரியர் ஆபீஸ்,என்கிற கை கோர்ப்பி லும் சங்கிலிப்பிணைப்பிலும்தான் அவனைப் பின் தொடர்ந்து சென்று கொண்டிருந்தேன். அவன் எங்கிருந்து வந்தான் என்பது தெரியவில்லை.. பின்னாலிருந்து பார்த்த பொழுது அவன் போல் தெரியவே அமர்ந்திருந்த இரு


மாவுக்கல்லும் தூசியும்…

 

  உடைத்தெறியபட்ட கற்கள் சதுரங்களாயும்,செவ்வகங்களாயும் முக்கோண வடிவிலும் அருங்கோணமாயுமாய் இன்னமும் இன்னமுமான வடிவம் காட்டியுமாய் காட்சி தருகிறது.கூடவேகொஞ்சம் சிமெண்ட் மற்றும் செங்கல் காரையும் தூசியுடனுமாய் ஏதாவதுஒரு வீட்டின் தரைத்தளம், மற்றும் அடுப்படி மேடை சிங்க தொட்டியை உடைத்தெடுத்திருக்கவேண்டும்.நல்லதல்லாததைஉடைத்துவிட்டு நல்லதை வைத்திருக்க நடந்த முன்னேற்பாடா அல்லது அதை விட சிறந்ததாக வேறேதும் வைப்பதற்காக இதைப்பெயர்த்தெடுக்கிறார்களா தெரிய வில்லை. இடிக்கப்பட்ட வேகம், இடித்தவரின் கை,அவர்களதுஉழைப்பின் உறுதி எல்லாம் குவிக்கப்பட்ட மண் குவியலில் தெரிந்தது. இவனது பக்கத்து வீட்டுக்காரர் மாரிச்சாமி புதிதாக


கப்பி மண்…

 

  தொட்டுப்பார்த்தலட்டும் பிய்த்துப்பார்த்த மைசூர் பாகும் கிலோ 150 என்றார்கள். லட்டுக்கொஞ்சம் பதம் கூடித்தெரிந்தது.தொட்டுப்பார்த்தாலே கொஞ்சமாய் அமுங்கியது.மைசூர்பாகு அப்படியில்லை.பதமும் இனிப்பும் சரியான விகிதத்தில் இருந்தது.கேட்டதற்கு தீபாவளி நேரம் கொஞ்சம் அப்படித்தான் இருக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார்கள்.இவனுக்கு ஸ்வீட் எடுத்து சாம்பிள் காண்பித்த பெண். தவிர மொதமொத இந்த தீபாவளிக்குத்தான் ஸ்வீட் போடுறோம்,அதுதான் லட்டும் மைசூர்பாகும் போதும்ன்னு நிறுத்திக்கிடோம். அளவாத்தான் போட்டோம் பாத்துங்கிடுங்க.இங்க வழக்கமா சேவு மிக்சர் வாங்க வர்றவுங்க கிட்ட மட்டும் சொல்லி வச்சம்,ஆனா அடுத்தடுத்து ஆள்கள் வந்து


கொட்டாவி,,,

 

  அவனும் என்னதான் செய்வான் பாவம்.தினசரிகளில் இரவு பணிரெண்டுமணி வரைக்கும் படிக்கிறான். பாடங்கள் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் ஒரு மணியைக்கூட எட்டித்தொட்டு விடுகிறது. கொட்டாவி விடுதலுடனும்,உடல் முறுக்கிய தூக்கக் கலக்கத்துடனுமாய் படிக்கிறான் படிக்கிறான், உடல் அலுக்கும் வரை படிக்கிறான், எழுதுகிறான் கை வலிக்கும் வரை எழுதுகிறான், கேட்டால் எங்களது டீச்சர் கொடுத்த வீட்டுப் பாடம் என்கிறான், வாங்கிப் பார்த்தால் ஒரே கேள்வி பதில்களை இருபது அல்லது அதற்கு மேற்பட்டு எழுதச் சொல்லியிருப்பார்கள். ஏன் அப்படி எனக்கேட்டால் பதில்