கதையாசிரியர் தொகுப்பு: வினையூக்கி செல்வா

24 கதைகள் கிடைத்துள்ளன.

ஹிப்போக்ரைட்ஸ்

 

  சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் “நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை” “ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?” “கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம், ராப்பகலா கஷ்டப் பட்டது நாம… தாங்க்ஸ் கடவுளுக்கு, இதை வேறயாராவது செய்து இருந்தா ஒன்னுமே தெரிஞ்சுருக்காது,


கீர்த்தனாவை அறைஞ்சிருக்கனும்

 

  அலுவலகம் வந்ததில் இருந்து ஒரு வேளையும் ஓடவில்லை. கீர்த்தனா செய்த காரியத்திற்கு அவளுக்கு ஒரு அறை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் மனைவியாக இருந்தாலும் கைநீட்டக்கூடாது என கொள்கை வைத்திருப்பதால் அதைச்செய்யவில்லை.. நான் கல்லூரிக்காலங்கள் எட்டும் வரை என் அம்மாவை கைநீட்டி அடிக்கும் பழக்கத்தை விடாத என் அப்பாவினால், நான் எடுத்த முடிவு எனக்கென வரும் பெண்ணிடம் எந்த விதத்திலும் உடல் ரீதியான வன்முறைகளைப் பிரயோகிக்கக் கூடது என்பது தான். இந்த விசயத்தில், ஜெனியை கல்லூரி


சில சிணுங்கல்கள், ஒரு ஈரானியப்பெண் மற்றும் நான்

 

  பனிக்காலம் ஆரம்பித்துவிட்டது என்பதை காது மடல்களில் உரசிய வாடைக்காற்று உணர்த்தியது. நேற்றைப்போலவே இன்றும் லின்ட்புலோம்ஸ்வேகன் போக பேருந்திற்காக 8.45 மணி வரை காத்திருக்க வேண்டும், ரயிலை விட்டு இறங்கி நேராக பயணியர் காத்திருப்பு அறைக்குப் போனபோது அங்கு ஏற்கனவே போன வாரம் எனக்கு அறிமுகமான ஈரானியப் பெண் உட்கார்ந்திருந்தாள்.கையில் புத்தகத்தை வைத்து வாசித்துக்கொண்டிருந்தவள் என்னைப்பார்த்து சினேகமாகப் புன்னகைத்தாள். அவள் கையில் புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்ததால், பேச்சை ஆரம்பிக்க எனக்குத் தயக்கமாக இருந்தது. அவளிடம் இருந்து சில அடி


இட ஒதுக்கீடு

 

  SC upholds OBC quota, TWENTY-SEVEN PER CENT QUOTA FOR OBCs என தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்த செய்தியைப் பார்த்ததும் மகிழ்ச்சி வெள்ளத்தில் முதல் வேளையாக என்னுடைய தூரத்து மாமா பையன் சேகரை தொலைபேசியில் கூப்பிட்டேன். “சேகரா, ஒழுங்கா GATE எக்ஸாம் எழுது !!! இந்த வருஷம் கோட்டா கொண்டு வந்துட்டாங்க, உனக்கு நல்ல சான்ஸ் இருக்கு” என உற்சாகப்படுத்திவிட்டு வேறு யாரு சொந்தத்தில இருக்காங்கன்னு யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே என் மனைவி ரம்யாவின் தம்பி கிருஷ்ணமூர்த்தி


தொட்டனைத்து ஊறும் மணற்கேணி

 

  “அகரம் இப்போ சிகரமாச்சு,தகரம் இப்போ தங்கமாச்சு, காட்டு மூங்கில் பாட்டுப்பாடும் புல்லாங்குழலாச்சு” எனஅடுத்த தடுப்பில் இருந்த மோகனின் கைத்தொலைபேசி பாட, அவர் எடுத்துப் பேசினார். “சொல்லுங்க பஷீர்” “—-” “அன்னக்கி காலையில வந்து கடைப்பையன் இஸ்மாயில் கிட்ட கொடுத்தேனே!!” “—-” “ஓ அப்படியா, சரி பஷீர், மதியம் வந்து தரேன்.. வயசாயிடுச்சுல்ல, மறதி அதிகமாயிடுச்சு” கைத்தொலைபேசியை வைத்து விட்டு, அவரின் இடத்திற்கு மோகன் என்னை அழைத்தார். “கார்த்தி, முந்தாநேத்து பஷீர் கடையில ரீசார்ஜ் பண்ணதுக்கு உன்