கதையாசிரியர் தொகுப்பு: வினையூக்கி செல்வா

24 கதைகள் கிடைத்துள்ளன.

அல்லேலூயா

 

  “கார்த்தி, டுமர்ரோ நதொ கார்ல்ஸ்க்ரோனா சர்ச்சுக்கு வஸ்தாவா?” இப்படி கேட்டது வாசுகிரெட்டி. பழைய காதல்களில் ஒன்று இந்நாளைய காதலியின் மூலம் நினைவுப்படுத்தப்படும் பொழுது , அதுவும் எந்த விசயத்திற்காக விலகினோமோ அதே விசயத்தின் வாயிலாக ஞாபகப்படுத்தப்பட்டால் கொஞ்சம் அசூயையாகவே இருக்கும். ஆந்திரா பழைய முதலமைச்சர் ராஜசேகரரெட்டி வகையில் வாசுகிரெட்டியும் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவள். “நீங்க எல்லாம் ஏன் சர்நேம் வச்சுக்க மாட்டுறீங்க” ஒருநாள் வாசுகி என்னிடம் கேட்டாள். “ராமச்சந்திரன் அப்படின்னு எங்க அப்பாபேரை பின்ன வச்சிருக்கேனே,


திருட்டுப்பசங்க

 

  ”கார்த்தி, ஸ்வீடன் வந்து இரண்டு வாரம் ஆவுது எங்கேயாவது கூட்டிட்டுபோடா!! செம போரடிக்குது” என வாசுகிரெட்டி நான் அலுவலகம் கிளம்பும் பொழுதெல்லாம் நச்சரிப்பது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது. வாசுகிரெட்டி என் மனைவி, போராடி காதல் கல்யாணம் செய்து கொண்டு இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. இருவீட்டார் தொல்லையில் இருந்து விடுபட, நீண்ட நாட்களாக தட்டிக்கழித்துக் கொண்டிருந்த சுவீடன் ஆன்சைட் வாய்ப்பை விருப்போடு வாங்கிக்கொண்டு தேனிலவை பால்டிக் கடலில் கொண்டாடலாம் என நினைத்து வந்தால், ஒட்டு மொத்த வேலையையும்


2011

 

  இலைகளைத் துறந்து நிர்வாணத்திற்கு வெட்கப்பட்டு பனியைப்போர்வையாக போர்த்திக் கொண்டிருந்த மரங்களையும் செடிகளையும் ரசித்தபடியே புது வருடக் கொண்டாட்டங்களுக்கு தயராகிக் கொண்டிருக்கும் சுவீடனின் தென்பகுதி நகரான கார்ல்ஸ்ஹாம்ன் நகர சாலை ஒன்றில் மோகனுடன் நடந்து கொண்டிருந்த பொழுது “கார்த்தி, இன்னக்கி நைட் நியுஇயர் கல்லறையில கொண்டாடுவோமா!!” நான் எதுவும் பதில் பேசவில்லை. எங்கள் வீட்டில் இருந்து சில நூறு மீட்டர்கள் தூரம் இருக்கும் கல்லறைத்தோட்டத்தை நாங்கள் கடந்து கொண்டிருக்கும்பொழுதுதான் அந்தக் கேள்வியை கேட்டபொழுது குறிப்பிட்டக் கல்லறைத்தோட்டம் கடக்கும்பொழுது


பிறன்மனை நோக்கா

 

  எண்ட காதலி உங்களுக்கு மனைவி ஆகலாம், ஆனால் உங்க மனைவி எனக்கி திரும்ப காதலியாகாது சாரே , அந்த ஏழு நாட்கள் பாக்யராஜ் மாதிரி வாழ்ந்து கொண்டிருந்த நான் இப்பொழுதெல்லாம் மற்றவர்களுக்கு உரிமையான பெண்களிடம் அடிக்கடி சஞ்சலப்படுகின்றேன். சாதரண அழகுடையப் பெண்கள் கூட அடுத்தவனின் காதலி என அறியப்படும் பொழுது அவர்களின் மேல் இருக்கும் கவர்ச்சி மேலும் அதிகமாகுகிறது. வயது கடை இருபதுகளில் இருப்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அம்மு நீங்கலாக முன்னாள் காதலிகள்


அப்பாவி கணேசனும் அமானுஷ்யமும்

 

  கணேசன் என்னதான் வாட்டசாட்டமாய் சக்திமான் முகேஷ் கண்ணா மாதிரி இருந்தாலும் இந்த சுவீடன் குளிரை மட்டும் அவரால் தாங்க முடியவில்லை. விடியற்காலை மூன்று மணிக்கு என் போர்வையை யாரோ உருவுவது போல இருக்க, எழுந்து பார்த்தால் நம்ம கணேசன், சத்தமே இல்லாமல் போர்வையை இழுத்துக் கொண்டிருந்தார். ஏற்கனவே தூக்கத்தில் வந்த பேய்க்கனவினால் நடுங்கிப்போய் இருந்த நான், “யோவ், என்னய்ய பண்றீங்க!!! “ “கார்த்தி, ரொம்ப குளுருது , அதுதான் உங்க போர்வை எடுத்துக்கலாம்னு” “அப்போ என்னை