கதையாசிரியர் தொகுப்பு: விந்தன்

8 கதைகள் கிடைத்துள்ளன.

மறுமணம்

 

 அவள் போய் விட்டாள் ‍ எவள் போய்விட்டாள்? தன்னைப் பெற்று வளர்த்த பெற்றோரை உயிருடன் மறந்து, “இனி நீயே கதி!” என்று மணப்பந்தலில் பந்துமித்திரர்களுக்கு முன்னால் என் கரத்தை எவள், தன் மலர்க் கரத்தால் பற்றினாளோ, அவள்; வீடு, வாசல் ஒன்று ஏற்படுத்தி, ஏகாங்கியாக எங்கும் போகவிடாமல் எவள் என்னைத் தடுத்தாட்கொண்டாளோ, அவள்; எனக்கு நோய்நொடிகள் வந்த போதெல்லாம் தனக்கே வந்துவிட்டதாக நினைத்து அல்லும் பகலும் என் அருகிலேயே இருந்து எவள் எனக்கு சேவை செய்து வந்தாளோ,


பதினோராம் அவதாரம்

 

 காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த முத்தையா ‘ஊம்.. ஊம்.. ஊம் ‘ என்று ஈச்சம் பாயில் படுத்தபடி ‘ஊம் ‘ கொட்டிக் கொண்டிருந்தான். அடுத்த வீட்டுக்காரியிடமிருந்து அப்பொழுதுதான் வாங்கி வந்த அரைப்படி நெல்லை உரலில் போட்டு ‘உக்கும்..உக்கும்..உக்கும் ‘ என்று குத்திக் கொண்டிருந்தாள் அவன் மனைவி மாரியாயி. முத்தையாவின் முணுமுணுப்பு வரவர அதிகமாகிக் கொண்டு வரவே, அவள் உரலிலேயே உலக்கையை நாட்டி விட்டு உள்ளே ஓடினாள். அப்படியும் இப்படியுமாக அவன் புரண்டு புரண்டு படுத்தான். பாயின் மேல் விரிக்கப்பட்டிருந்த பழைய


கவலை இல்லை

 

 அந்த ஊரில் அரிய நாயகத்தின் செருப்புக்கடைதான் பேர் போன கடை. சொற்ப முதலுடன் ஆரம்பித்துச் சீக்கிரத்திலேயே பெரிய செருப்பு வியாபாரியானவன் அரியநாயகம். அவனிடம்தான் காத்தான் தினசரி செருப்புத் தைத்து லாபத்துக்கு விற்று வயிறு வளர்த்து வந்தான். காத்தானிடமிருந்து முக்கால் ரூபாய்க்கு வாங்கிய செருப்பை மூன்றரை ரூபாய்க்கு விற்றுச் சம்பாதித்த லாபத்தைக் கொண்டு தான் அரியநாயகம் தன்னுடைய டாம்பீகமான வாழ்க்கையை நடத்திவந்தான். காத்தானுக்கு ஒரே ஒரு பெண். அவளை அவன் கானாற்றில் கட்டிக் கொடுத்திருக்கிறான். அவள் ஒரு சமயம்


திருப்தி

 

 நண்பர் நட்– ‘நட் ‘டாவது, ‘போல் ‘டாவது என்று நினைக்காதீர்கள் ‘ ‘நடேசன் ‘ என்ற பெயரைத் தான் ‘நட் ‘ என்று ‘ரத்தினச் சுருக்க ‘மாகச் சுருக்கி வைத்துக் கொண்டிருக்கிறார் நண்பர். காரணம், தமிழ்நாட்டில் பிறந்தும் தமிழில் கவிதை எழுதுவதை அகெளரவமாக எண்ணி, அவர் ஆங்கிலத்தில் கவிதை எழுத ஆரம்பித்துவிட்டதுதான் ‘ இதனால் ஆங்கில நண்பர்கள் மட்டுமல்ல; ஆங்கில நாணயங்களான பவுன், ஷில்லிங் பென்ஸ்உம் அவருக்குத் தாராளமாகக் கிடைத்து வந்தது. எனினும், அந்த நோபல் பரிசை–


பொன்னையா

 

 ‘என்னா சின்னி ‘ வயிற்றைக் கிள்ளுகிறது; சோத்தையாச்சும் வடிச்சயா ? ‘ என்று கேட்டுக் கொண்டே வந்தான் பசியால் வாடிய பொன்னையா. ‘நீயும் கேட்கிறயே ‘ வெட்ட வெளியிலே அடுப்பைப் பற்ற வச்சிட்டு நான் அவதிப்படறேன். குழந்தை வேறே பனியிலே படுத்துக் காலையிலேருந்து காயலாக் கிடக்குது. எனக்கு வேலையே ஒண்ணும் ஓடலே. அடிக்கிற காத்துலே இந்த அடுப்பு கொஞ்சமாச்சும் எரியுதா ? ‘ என்று எரிந்து விழுந்தாள் சின்னி. ‘என்னை என்ன பண்ணச் சொல்றே. சின்னி ?