கதையாசிரியர் தொகுப்பு: வித்யாசாகர்

11 கதைகள் கிடைத்துள்ளன.

தூக்கம் நிறைந்த கனவுகள்

 

 “சார் வணக்கம் சார்..” “ம்ம்.. ம்ம்..” “எப்படி இருக்கீங்க சார் சௌக்கியம் தானுங்களே?” “எந்தா வேணும் பர” “சும்மா உங்களைப் பார்க்கலாம்னு வந்தேன் சார்…” “அப்படியா.., நீ பரஞ்சோ மோளே..” காதில் தொலைபேசியை அடைத்துக் கொண்டு, அவன் தன் மகளுடன் பேசத் துவங்கினான். அந்த வயது முதிர்ந்த தமிழர் எதிரே அப்பாவியாய் நின்றிருந்தார். இவன் அவரை ஒரு பொருட்டாகவே எண்ணவில்லை என்பதால் அவரே மீண்டும் அருகில் சென்று அழைத்தார் – “சார்….” “சொல்லுப்பா டண்டா-பாணி எந்தா வேணும்,


ஒரு தோசையும் தொட்டுக்க நாலு மாத்திரையும்…?

 

 குடும்பம் ஒரு கோவில் என்பார்கள்; அது இந்த குடும்பத்திற்கே பொருந்தும். மூன்று அண்ணன் தம்பிகளும், அவர்களின் மனைவியர் மற்றும் குழந்தைகளும் அவர்களுக்கு நடுவே ஒரு இதய நோயாளியான தந்தையுமென திறக்கிறது இக்கதைக்கான கதவுகள். “ஐயோ… தாத்தா!!!!!!!!!!!!!!!!” ”அம்மா தாத்தா குளிக்கிற அறை கதாவான்டையே விழுந்துட்டாரு” “என்னடி சொல்ற???!!!!” “உண்மையா தாம்மா, வந்து பாரேன்…” “ஐயோ ஆமா…, என்னங்க அப்பா மயக்கம் போட்டு விழுந்துட்டாருங்க” “ஏம்மா இப்படி அலர்ற, ஐயோ அப்பாவுக்கு என்னாச்சு?!!” “தெரிலிங்க, திடீர்னு மயங்கி விழுந்துட்டாருங்க..”


அந்நிய தேசத்தில் அழுகிறான்

 

 தமிழரிடமிருந்து ஏன் இந்தியரிடமிருந்தே வெகுதூரத்தில் நிகழ்கிறது அது. ஒருவன் தலை குனிந்து கஷகஸ்தான் நாட்டின் பரபரப்பான ஒரு வாகன வீதியில் புத்தகம் ஒன்றைக் கையில் விரித்துப் படித்துக் கொண்டே வருகிறான். ஒரு வாகனம் அவனை இடிப்பது போல் வந்து ஒதுங்கிப் போகிறது. தன்னை, ஒவ்வொருவரையும் தனது நாட்டின் ராஜாக்களாகவும், ராணிகளாகவும் பாவித்துக் கொள்ளும் பிரஜைகளைக் கொண்ட அரபு தேசத்தின் வாசம் கொண்ட, ‘ரஷ்ய தேசத்தின் எல்லை தேசம் கஷகஸ்தான். ஏதோ ஒரு அரபு போன்ற மொழி பேசுகிறார்கள்


அவர்களுக்குள் இருப்பது அது இல்லை…!

 

 “நெருப்பு – எரிந்ததடிப் பெண்ணே உன் நினைவு – உலகை மறந்ததடி பெண்ணே அன்பு – கனன்றதடி பெண்ணே ஆயுளைப் பாதியாய் – மௌனம் குறைத்ததடி பெண்ணே உயிரில் – பூத்தாய் பெண்ணே உள்ளம் – நீண்டு நிறைந்தாய் பெண்ணே என் சகலமும் – ஆனாய் பெண்ணே இல்லை யெனக் கொன்று – மீண்டும் ஒரு சின்ன பார்வையில் பிறக்க செய்தாயடிப் பெண்ணே!!” கட்.. கட்.. கட்.. நில்லு நில்லு இது பத்தாது, காதல் கவிதை படிச்சா


கத்தாமா எனும் கண்ணீர்க் கதை

 

 பணத்தை மட்டுமே ஆதாரமாக கொண்டு மனிதம் விற்கும் ஒரு நபரின், மனிதம் ஏன் பணத்திற்கெனில் எதையும் விற்கும் ஒரு நபரின் அலுவல் அது. அங்கே வெளிநாட்டிற்கு ஆட்களை விற்கும் பணி நடந்துக் கொண்டிருந்தது. கேட்டால் வெளிநாட்டில் வேலை செய்ய ஆள் எடுக்கிறோம் என்றார்கள். அதும் “குவைத்திற்கு படித்த பெண்கள் தேவை” என ஆங்காங்கே விளம்பரம் வேறு. மீரா வெகு ஆவலாக அந்த அலுவலை நோக்கி வந்தாள். குடும்ப அழகிற்கு ஒரு உதாரண முகம் மீராவிற்கு. சுண்டினால் சிவக்கும்