கதையாசிரியர் தொகுப்பு: வா.மு.கோமு

11 கதைகள் கிடைத்துள்ளன.

காதல் டைரியின் சில பக்கங்கள்

 

  ஜனவரி 1, 1990 புது வருட வாழ்த்துக்களை நண்பர்கள் நாங்கள் எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். தொழில் நிமித்தமாக ஊர் ஊராக அலைந்து திரிந்த எனக்கு, ‘நாய்போல நிற்க நேரம் இல்லாமல் அலைகிறானே’ என்று பெருந்துறையில் ஜெராக்ஸ் கடை வைத்துக்கொடுத்தார் அப்பா. அது ஒரு வருடமாக நட்டம் ஏதும் இல்லாமல், வாடகைக்கும் கரன்ட் பில்லுக்கும், இரண்டு வயிறு நான்கு வேளை நிரம்பும் அளவுக்கு மட்டும் சம்பாதித்துக்கொடுத்தது. கூடவே, இப்போது பள்ளிப் பாட நோட்டுக்கள், பேனாக்கள் என்று அயிட்டங்களைக் கடைக்குள்